Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

In Celebration of Being Alive Chapter Summary in Tamil & English Free Online

In Celebration of Being Alive Poem Summary in Tamil PDF
In Celebration of Being Alive Poem Summary in Tamil

In Celebration of Being Alive Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of In Celebration of Being Alive Poem in Tamil. Also, in this article, we will also provide In Celebration of Being Alive Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the In Celebration of Being Alive Poem Summary in Tamil please let us know in the comments.


In Celebration of Being Alive Poem Summary in Tamil


Poem

In Celebration of Being Alive Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find In Celebration of Being Alive Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on In Celebration of Being Alive Poem Summary in Tamil Post.

In Celebration of Being Alive Poem Summary in Tamil

Students can check below the In Celebration of Being Alive Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


ஒரு இதய சிகிச்சை நிபுணராக என்னுடைய வேலையின் (career – பணி) இறுதியை நெருங்க நெருங்க என் மக்கள் ஏன் வேதனைப்பட வேண்டும் என்பதை நோக்கி என் எண்ணங்கள் (thoughts) திரும்பின. இன்று இவ்வுலகில் அதிகப்படியான மக்கள் மிக கொடூரமாக (cruelly) வேதனைப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு பிறக்கக்கூடிய 125 மில்லியன் குழந்தைகளில், 12 மில்லியன் குழந்தைகள் தங்களது ஒரு வயதை அடைவதே கடினம் மற்றும் அடுத்த 6 மில்லியன் குழந்தைகளில் 5 வயதை எட்டுவதே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா! மீதமுள்ளவர்களில் நிறைய பேர் மனம் (mental) அல்லது உடல் ஊனமுற்றவர்களாகவே (physical cripples) ஆகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னால் நான் சந்தித்த விபத்திலிருந்து எனக்கு இந்த இருண்ட எண்ணங்கள் (gloomy thoughts) தோன்றியிருக்கலாம் (stem). அருமையான உணவிற்கு பின் நான் என் மனைவியுடன் ஒரு நிமிடம் தெருவை தாண்டி சென்று கொண்டிருந்தேன். மறு நிமிடம் ஒரு கார் என்னை இடித்து (hit) என் மனைவியின் மீது தள்ளியது (knocked), அவளோ அடுத்த பாதையில் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த காரினால் அடிப்பட்டாள் (struck).

அடுத்த சில நாட்கள் நான் மருத்துவமனையில் மிகுந்த மன வேதனையையும் (agony), பயத்தையும் (fear) மட்டும் அனுபவிக்கவில்லை கூடவே கோபத்தையும் (anger) உணர்ந்தேன். நானும் என் மனைவியும் ஏன் வேதனைப்பட வேண்டும் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை . என்னுடைய 11 விலா எலும்புகள் (ribs) உடைந்தன மற்றும் எனது நுரையீரலிலும் (lung) அடிபட்டு துளைகள் விழுந்தன. எனது மனைவியின் தோல்பட்டையும் நொறுங்கியது. ஏன் எங்களுக்கு இவ்வாறு நடக்க வேண்டும்? என மீண்டும் மீண்டும் நான் எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive 4

எல்லாவற்றிற்கும் மேலாக நான் எனது வேலையையும் பார்க்க வேண்டியதிருந்தது. என்னிடம் சிகிச்சை பெற நோயாளிகள் (patients) காத்து கொண்டிருந்தனர். எங்களின் சிறு வயது குழந்தைக்கு என் மனைவியின் அரவணைப்பு தேவைப்பட்டது.
எனது தந்தை இப்போது உயிரோடிருந்தால் அவர் இவ்வாறு தான் கூறியிருப்பார். “மகனே, இது கடவுளின் விருப்பம், அவர் இவ்வாறு தான் உன்னை சோதிப்பார். சோதனைகளே உன்னை மேன்மையாக்கி, ஒரு சிறந்த மனிதனாக உன்னை உருவாக்கும் (ennobles)”.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive

ஆனால், ஒரு மருத்துவராக வேர்வையால் நனைந்த படுக்கையில் (sweatsoaked bed) வலியால் துடித்துக் கொண்டும், மனம் நிறைய கடுந்துயராலும் நிரப்பப்பட்ட நோயாளிடம் எந்தவொரு பெருந்தன்மையையும் (noble) என்னால் காண இயலவில்லை. இரவில் மருத்துவமனையில் தனிமையில் படுக்கையில் அழுது கொண்டிருக்கும் குழந்தையிடமும் என்னால் எந்தவொரு பெருந்தன்மையையும் (nobility) காண இயலவில்லை.

அக்காலத்தில் அதிநவீன (sophisticated) இதய அறுவை சிகிச்சை முறைகள் கிடையாது. குழந்தைகள் வேதனையடைவதைக் கண்டுநான் மனமுடைந்து போயிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்களின் முழு நம்பிக்கையையும் (trust) மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வைப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்று அவர்கள் நம்புவார்கள்.

உங்களால் முடியவில்லை என்றால் அவர்கள் தங்கள் விதியைக் கூட ஏற்றுக் கொள்ள (believe) மாட்டார்கள். உருவச்சிதைவு அடையக்கூடிய அறுவைச்சிகிச்சை (mutilating surgery) செய்த பிறகு கூட அவர்கள் குறைகூற மாட்டார்கள்.

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் காலையில் நான் கண்டதை கேட்டவுடன் நகரின் செஞ்சிலுவை (Red cross) சிறுவர் மருத்துவமனையில் மோட்டார் வாகன ஓட்டப் பந்தயம் (Grand Prix) என்றே அழைப்பேன். அந்நிகழ்வு வேதனையைக் குறித்து நான் எண்ணிவந்ததில், ஒரு உண்மையை நான் விட்டிருந்ததை குறித்து அது என் கண்களைத் திறந்தது. அது எனக்கு ஒரு பெரிய ஆறுதலாக (solace) இருந்தது.

அந்த காலை அங்கு என்ன நடந்தது என்றால், காலை உணவு தள்ளுவண்டியை (breakfast trolley) செவிலியர் எடுக்கவில்லை. அடுத்தகணமே அந்த தள்ளுவண்டியானது இரு துணிச்சலான (intrepid), தைரியமான ஓட்டுநர் மற்றும் இயந்திர வல்லுநரால் வழி நடத்தப்பட்டது.

இயந்திர வல்லுநரோ தலையை குனிந்தவாறு தள்ளுவண்டியை பின்புறமிருந்து விரைந்து தள்ளி அதற்கு இயந்திர சக்தியளித்தனர் (provided), அதே வேளையில் ஓட்டுநரோ, தள்ளுவண்டியின் முன்புறம் அமர்ந்து கொண்டு ஒருகையால் வண்டியைப் பிடித்து காலால் தரையை உரசி (scraping) தள்ளுவண்டியை ஓட்டினார். அவர்கள் தேர்ந்தெடுத்த வேடங்கள் மிக எளிது ஏனென்றால் இயந்திர வல்லுநரோ கண்ணிழந்தவன் (blind), ஓட்டுநரோ ஒரு கை (arm) மட்டுமே கொண்டவன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive

அன்று அவர்கள் ஒரு பெரிய நிகழ்ச்சியையே நடத்தினார்கள். மீதமிருந்த நோயாளிகளிடமிருந்து அவர்களுக்கு கிடைத்த உற்சாகத்தையும் (encouragement) சிரிப்பையும் பார்த்த போது இண்டியானா போலிஸில் (Indiana Polis) நடைபெறும் 500 கார்களின் ஓட்டப்பந்தயத்தை (race) விட இவர்களின் நிகழ்ச்சி மிகச்சிறந்தது என தோன்றியது. அவர்களை செவிலியர்கள் பிடித்து, திட்டி, படுக்கைக்கு திரும்ப அனுப்பும் வரை, அங்கு சிதறிய தட்டுகள் மற்றும் சில்வர் பாத்திரங்களின் இறுதிச் சுற்று (grand finale) நடந்தது.

அவ்விருவர்களைப் பற்றி நான் கூறுகிறேன். இயந்திர வல்லுநரோ 7 வயதானவன். ஒரு நாள் அவனது தாயும் தந்தையும் குடித்து விட்டு சண்டையில், அவனது தாய் விளக்கை (lantern) எடுத்து தந்தை மீது எறியும் போது அது தவறி குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியின் மீது விழுந்தது. இதனால் அதிகப்படியான மூன்றாம் நிலை காயங்களால் அவனது மேலுடல் பாதிக்கப்பட்டது, அவனது இரண்டு கண்களும் பார்வை இழந்தன.

வாகன ஓட்டப்பந்தயத்தின் போது அவன் ஒரு நடமாடும், பயமூட்டும் (horror) பொருளாக, அதாவது உருக்குலைந்த (disfigured) முகத்தோடும், ஒரு நீண்ட சதை மடிப்பு கழுத்திலிருந்து தொங்கிய வண்ணமும் காணப்பட்டான்.

அவனது கழுத்தைச் சுற்றி காயம் ஆறிக்கொண்டிருந்த வேளையில், அவனுடைய கீழ்த்தாடை நரம்புத் திசுக்களினால் (tissue) இறுகப்பற்றிக் கொள்ளப்பட்டது. அவன் தனது தலையை உயர்த்தினால் (raise) மட்டுமே அவனால் தனது வாயைத் திறக்க முடியும். அந்த பந்தயம் முடிந்து நான் அவளை சந்தித்த போது “நாங்கள் வென்று விட்டோம். உங்களுக்கு தெரியுமா?” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

அந்த தள்ளுவண்டியின் ஓட்டுநரை (trolley’s driver) எனக்கு நன்றாக தெரியும். சில வருடங்களுக்கு முன்னால். அவன் இதயத்தில் இருந்த ஓட்டையை நான் வெற்றிகரமாக அடைத்தேன். அவன் எலும்பில் இருந்த வீரியமான (malignant tumour) கட்டியின் காரணமாக அவன் மறுபடியும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். பந்தயத்திற்கு சில நாட்கள் முன்னதாக அவனது தோள்பட்டையும், கையும் சிகிச்சையின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது (amputated).

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive

அவன் குணமடைவதற்கான (recovery) நம்பிக்கை குறைவாகவே காணப்பட்டது. பந்தயத்திற்குப் பின் அவன் என்னிடம், தள்ளுவண்டியின் சக்கரங்கள் சரியாக எண்ணெய் இடப்படவில்லை என்றும், அவன் ஒரு சிறந்த ஓட்டுநர் என்றும், தான் இயந்திர வல்லுநரிடம் முழு நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறினான்.

திடீரென, வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு ஆழமான பாடத்தை (profound lesson) இவர்கள் இருவரும் எனக்கு கற்று கொடுத்ததாகவே உணர்ந்தேன் (realized). ஏனென்றால் வாழ்வது என்பது இனிமைக்காவோ, பொழுது போக்கிற்காகவோ, மனமகிழ்ச்சிக்காகவோ நாம் செய்யும் ஏதோ ஒன்று அல்ல, மாறாக மகிழ்ச்சி என்ற வார்த்தையின் உண்மையான உணர்வே ஆகும். வாழ்வதென்பது உயிரோடிருப்பதின் கொண்டாட்டமே (celebration).

நான் வேதனைப்படுவதை தவறான (wrong) முறையிலிருந்தே பார்த்து கொண்டிருந்தேன். நீங்கள் வேதனை அடைவதால் மட்டும் சிறந்த மனிதராக முடியாது. ஆனால் வேதனையை அனுபவித்து (experience) இருக்கிறீர்கள் என்றால் உங்களால் ஒரு சிறந்த மனிதனாக முடியும். இருளைப் பற்றி அறியாவிட்டால், நம்மால் ஒளியைப் பாராட்ட இயலாது.

கடுங்குளிரால் பாதிக்கப்படாமல் நம்மால் வெதுவெதுப்பை பாராட்ட இயலாது. நீங்கள் இழந்தது எதுவோ அது முக்கியமில்லை (important), உங்களிடம் மீதமிருப்பது (left) எதுவோ அதுவே மிக முக்கியம் என்று இச்சிறுவர்கள் எனக்கு உணர்த்தி விட்டார்கள்.


In Celebration of Being Alive Poem Summary in English

Here we have uploaded the In Celebration of Being Alive Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


As I approached the end of my career (career - work) as a cardiologist, my thoughts turned to why my people should suffer. Too many people in this world today are suffering so cruelly.

Of the 125 million babies born this year, 12 million will find it difficult to reach their one year of age and the next 6 million will never reach the age of 5! Many of the rest become mentally or physically crippled.

I may have had these gloomy thoughts (stem) from an accident I had a few years ago. After a wonderful meal I was walking down the street with my wife for a minute. The next minute a car hit me and knocked on my wife's door, but she was thrown on the next lane and struck by an oncoming car.

For the next few days in the hospital I experienced not only agony and fear, but also anger. I could not understand why my wife and I should be in pain. My 11 ribs were broken and my lungs were punctured. My wife's skin also shattered. Why should this happen to us? As I kept asking myself over and over again.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive 4

Above all I had to look at my work as well. Patients were waiting for me to receive treatment. Our little baby needed the warmth of my wife.
If my father were alive now he would have said so. “Son, this is the will of God, and this is how he will test you. Trials will elevate you and ennobles you. ”

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive

But as a doctor, I could not find any noble in a patient who was throbbing with pain in a sweatsoaked bed and filled with a lot of mental anguish. I could not see any nobility in the baby crying in bed alone in the hospital at night.

There were no sophisticated heart surgeries at that time. I am heartbroken to see children in pain. Because they place their full trust in doctors and nurses. They will believe that you will help them.

If you can't, they won't even believe their destiny. They do not complain even after undergoing mutilating surgery.

When I heard what I saw one morning many years ago, I would call it the Grand Prix at the city's Red Cross Children's Hospital. As I thought about the pain of that event, it opened my eyes to the fact that I had left a truth. It was a great comfort (solace) for me.

What happened there that morning was that the nurse did not pick up the breakfast trolley. The next day the trolley was led by two intrepid, brave drivers and a mechanic.

The mechanic bent his head and quickly pushed the trolley from behind, giving it mechanical power (provided), while the driver sat in the front of the trolley, grabbed the cart with one hand and drove the trolley by scraping the floor with his foot. The roles they choose are very simple because the mechanic is either blind or the driver has only one arm.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 3 In Celebration of Being Alive

They had a big show that day. Seeing the encouragement and laughter they received from the rest of the patients, their performance seemed to be better than the 500 car race at Indiana Police. There was a grand finale of scattered plates and silverware until the nurses grabbed them, scolded them, and sent them back to bed.

I mean about those two. The mechanic is 7 years old. One day his mother and father got drunk and got into a fight. When his mother took the lantern and threw it at the father, it failed and fell on the child's head and shoulder. Thus his upper body was affected by excessive tertiary injuries and he lost sight in both eyes.

During the race he was seen as a moving, horror object with a disfigured face and a long fleshy neck hanging from it.

While the wound was healing around his neck, his lower back


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About In Celebration of Being Alive Poem Summary in Tamil


How to get In Celebration of Being Alive Poem in Tamil Summary??

Students can get the In Celebration of Being Alive Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of In Celebration of Being Alive Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List