Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Chair Chapter Summary in Tamil & English Free Online

The Chair Poem Summary in Tamil PDF
The Chair Poem Summary in Tamil

The Chair Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Chair Poem in Tamil. Also, in this article, we will also provide The Chair Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Chair Poem Summary in Tamil please let us know in the comments.


The Chair Poem Summary in Tamil


Poem

The Chair Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Chair Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Chair Poem Summary in Tamil Post.

The Chair Poem Summary in Tamil

Students can check below the The Chair Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


தமிழாக்கம் நாற்காலி இல்லாத வீடா?

திடீரென எங்கள் வீட்டில் இருந்த அனைவரும் இவ்வாறு நினைக்கத் தொடங்கினர். அது என்னவெனில் குடும்ப நிகழ்ச்சி நிரலில் போடப்பட்டிருந்தது (agenda) மற்றும் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு நாள் முன்பு, ஒரு குடும்ப நண்பர், எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தார். அவர் ஒரு துணை நீதிபதி. சட்டை அணிந்து வரவில்லை. மாறாக அவர் கோட்டும், சூட்டும், காலணியும் அணிந்து வந்திருந்தார். எங்கள் வீட்டில் ஒரு முக்காலி மட்டுமே இருந்தது. அது ஒன்றே முக்கால் மீட்டர் அடி அளவு கொண்டதாக இருக்கும். பாட்டி தயிர் சலிக்கும் போது அந்த முக்காலியில் தான் அமர்ந்திருப்பார். பாட்டி கொஞ்சம் எடை கொண்டவர் அதனால், தாத்தா அதனை தச்சரிடம் கொடுத்து கொஞ்சம் பரந்துபட்ட அளவு உடையதாக மாற்றிக் கேட்டார்.

வீட்டுக்கு வந்திருந்த துணை நீதிபதியும் சிறிய உருவம் கொண்டவர் (portly). எங்கள் வீட்டில் எந்த ஒரு இருக்கைகளும் இல்லாத காரணத்தால், அந்த முக்காலியை அவர் உட்கார கொண்டு வந்தோம். அதன் விளிம்பில் ஒருகையைவைத்தவாறு, அவரை அமரச் செய்தோம். அந்த முக்காலியைப் பற்றி ஒரு மோசமான (wretched)

செய்தி: சரியாக அந்த முக்காலியின் கால்கள் மேல் எடையை (உடலை) அமர்த்தவில்லையென்றால் அது கீழே கவிழ்ந்து (topple) விடும். நாங்கள் இது போன்று பலமுறை கவனக்குறைவினால் கீழே விழுந்திருக்கிறோம். அதன் மீது ஏறி, உறியில் இருந்த நெய்யைத் திருடும் போது (rope net). இந்த செய்தியைச் சொல்வதற்கு முன்னால், துணை நீதிபதி கீழே விழுந்தார்.

கீழே “தொப்” (thud) என்ற மெல்லிய சத்தத்தோடு விழுந்த அவர் உருண்டோடினார். நான் எனது தம்பி மற்றும் என் குட்டித் தங்கை, இதனைக் கண்டு இளித்தவர்களாய் (giggles) பின்புறம் உள்ள தோட்டத்துக்கு ஒடினோம். இந்த உள்ளூர சிரிப்பு தணிந்தது என்று தான் நினைத்தோம். என் தங்கை பல குரலில் நன்றாக பேசுவாள். அவள் அந்த துணை நீதிபதி விழுந்தது போன்று கைகளை சாய்த்தும், தரையில் உருண்டும் செய்து காண்பித்தாள். இதைப் பார்த்து எங்களுக்குச் சிரிப்பு நீளத்தான் செய்தது.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

இந்த இளிப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு. இது போன்று மற்ற விருந்தினர்கள் தரையில் உருண்டு விழும்போது, எங்களின் பெற்றோர் சிரிப்பை அடக்கிக் கொண்டு (suppressing) அவர்கள் முன்னே நிற்பது எங்களின் நினைவுக்கு வந்தது.

அதனால், எல்லோருடைய சார்பாகவும் சிரிப்பை முடிவுக்கு கொண்டு வந்து, நாங்கள் மெல்ல வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம் (pussy footed). ஆனால் அந்த துணை நீதிபதி அங்கு இல்லை . அந்த முக்காலியும் அங்கு இல்லை. அவரோடு அதனை எடுத்துச் சென்று விட்டாரா? என்று என் சகோதரி என்னிடம் கேட்டாள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, எங்கள் வீட்டுக்கு ஒரு நாற்காலி செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால், அந்த நாற்காலியை செய்வதற்கு, அந்த கிராமத்தில், மாதிரி காண்பிக்க ஒரு நாற்காலி கூட இல்லை. ஒரு தச்சர் கூட அதனை செய்வதற்கு இல்லை.

“பரவாயில்லை. ஒரு நாற்காலியை நகரத்தில் இருந்து வாங்கி விடலாம்” என்று தம்பி பெடன்னா (Pedanna) பரிந்துரைத்தான். ஆனால் என் தந்தை அதனை நிராகரித்தார். காரணம் அது சாத்தியமிக்கது அல்ல (sturdy) என்று கூறினார்.

எங்கள் அத்தை, பக்கத்து கிராமத்தில் ஒரு கை தேர்ந்த (skilled) தச்சர் இருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் எந்த ஒரு நாற்காலியும் செய்ததில்லை. அந்த ஆளுநர் தாமே அவருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார்.

அம்மா, அத்தையின் இரண்டாவது வாக்கியத்தைச் கேட்ட போது, தலையைத் திருப்பி, “அவள் எல்லாவற்றையும் பார்த்திருப்பாள்” என்று கூறுவதைப் போல இருந்தது.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

அப்பா வேலைக்காரர் ஒருவரை அழைத்து, அந்த தச்சன் இருக்கும் கிராமத்துக்கு அனுப்பி (despatched) அழைத்து வரச் சொன்னார். அவர் அருகில் வந்து அமர்ந்தார். இப்போது, என்ன வகையான மரத்தைப் பயன்படுத்தலாம் என்ற விவாதம் நடந்தது.

“தேக்குதான் சிறந்தது. அது தான் தூக்குவதற்கும், பிற இடங்களுக்கு நகர்த்தி செல்வதற்கும் சாத்தியம் உள்ளதாக இருக்கும்” என்று தன் பக்கவாத கால்களைத் தடவியவாறே கூறினார். பாட்டி (பாட்டி எப்போதும் தன் கால்களை பக்கவாதத்தின் காரணமாக, ஆட்டிக் கொண்டே இருப்பார்)

அந்நேரம், மாமனார் (தாய் வழி மாமன்) உள்ளே நுழைகிறார். பெடன்னா, ஓடிச்சென்று முக்காலியை எடுத்து வருகிறான். சற்று நேரம், ஒட்டுமொத்த குடும்பமே, உணர்ச்சி மிகுதியினால் (spluttered) இளித்தது. எல்லா நிகழ்வுகளும் சீராவதற்கு முன்.

மாமனார், அவரே, தனக்கென ஒரு இருப்பிடத்தை வீட்டுக்கு வரும்போதெல்லாம் தேர்ந்தெடுத்து கொள்வார். தலையை சாய்த்தவாறு (chop off) அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அமர மாட்டார். அந்த தூணில் அவர் சாய்ந்து கொண்டு இருப்பார். அந்த தூண் பொருட்கள் வைக்கும் அறைக்கு தெற்கே உள்ள சுவருக்கும் அடுத்து இருக்கும், முதல் காரியம் என்ன செய்வார் என்றால் உட்கார்ந்த உடனே, குடுமியை அவிழ்த்துவிட்டு, நன்கு குலுக்கி, தலையைத் நன்கு தேய்த்து, பின்பு இறுகலாக கட்டி விடுவார். இந்த சடங்குகளை (ritual) தவறாமல் அவர் செய்வார். பின்பு அந்த தரையினை ஆய்வு செய்வார். “ஏதாவது பணம் தலையில் இருந்து விழுந்ததா என்று பார்த்தீர்களா? அண்ணா ஒரு அடக்கமற்ற சிரிப்போடு சொல்வார்.

அவர் காகித அம்புகள் போல எப்போதும் துளைத்து கொண்டே இருப்பார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகையுடன்கல்லுப்பிள்ளையார்போல இருப்பார். நீங்கள் என் உறவினர்கள். நீங்கள் கிண்டல் செய்யவில்லையென்றால் வேறு யார் செய்வார்கள்? நாங்கள் செய்யும் ஏளனம் எல்லை மீறி போனால், அம்மா எங்களிடம் கோபித்துக் கொண்டு சென்று விடுவார். கடைசியாக வரும் வார்த்தை, “நீங்கள் கழுதைகள்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

மாமனார் உட்கார்ந்த உடன், அம்மா சமையலறைக்குச் சென்றுவிடுவார். ஒரு ஆட்டுக்குட்டியைப் போல அப்பாவும் அவளைப் பின்தொடர்ந்தார். சிறிது நேரத்தில், அம்மா ஒரு வெள்ளி டம்ளரில் மோர் எடுத்து வந்தாள். பெருங்காயமும் கையில் எடுத்து வந்தாள். அப்பா பின்னால் வந்தது அவளுக்கு தெரியாது. நாங்கள் அவளை, “பார், அண்ணா வந்தவுடன், எவ்வாறு அக்கறையோடு கையில் மோர் கொண்டு கொடுக்கிறாள்”. மோரின் வாசனையும், பெருங்காயத்தின் வாசனையும் எங்களையும் குடிக்கத் (asafoetida) தூண்டியது.

நாங்கள் மாமனார் மோர் குடிப்பதற்காகவே வந்திருக்கிறார் என்று நினைத்தோம். எங்கள் பசுவிடம் இருந்து கிடைக்கும் மோர் மிகவும் தெய்வீகம் உடையதாக இருக்கும். இதற்கிடையில் எங்கள் மாமனார், அந்த கிராமத்தில் மிகப்பெரிய கஞ்சன் (stingiest) என்று கேள்விப்பட்டோம். அவரை எதுவும் யாருக்கும் கொடுக்க மாட்டார் என்று நம்பினோம், அவர் தானே கண்ணாவரத்திற்குச் சென்று புகழ்பெற்ற கருப்பு நாக்கு கறவை மாடு, அவரின் தங்கைக்காக வாங்கச் சென்றார். என் தம்பியும் தங்கையும் அந்த கன்றுக்குட்டியுடன் பேரன்பு கொண்டு இருந்தனர்.

மாமனார் இங்கு வரும் போதெல்லாம், அந்த மாட்டின் அருகில் சென்று தட்டிக் கொடுப்பார். (pat) (யாருடைய கண்களும் பட்டுவிடக் கூடாது என நினைப்பார்) சிக்கனமாக நடந்து கொள்வார். இதனால் அந்த குட்டிகள் எப்போதும் பயத்துடனே இருந்தன. மாட்டில் பால் வற்றி விட்டது என்றால் அவர் அந்த மாட்டை, கன்றுகளோடு அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்.

இது நிகழ இருப்பதைக் கண்டு, மாமனாரின் மேல் ஒரு கசப்புத் தன்மையை உருவாக்கியது. அவர் எப்போதெல்லாம் மோரை மிக்க மகிழ்ச்சியோடு (relish) குடிக்கிறாரோ, சிறு பிள்ளைகள் அவரை முறைத்துப் பார்ப்பர்.

மாமனார் அந்த நாற்காலி பற்றி விவாதத்தில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டினார். தனக்கும் ஒன்று வேண்டும் என்று கூறினார். இதனால் எங்களுக்கும், அவர் உடன் வருவது மகிழ்ச்சி அளித்தது.

மாமனார் வேப்ப மர கட்டையில் நாற்காலி செய்தால் நல்லது என்றார். அது எப்போதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்று கூறினார். – அவர் வேப்ப மர கட்டை பற்றி விளக்கும் போது (expounded) அப்பா, வட்டக் கண்களோடு அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

(astonished) ஒரு நாளைக்கு முன்பு தான், அப்பா ஒரு பழமையான வைரம் பொருந்திய வேப்ப மரத்தை வெட்டுவதற்கு ஒரு கூலியாளிடம் (farmhand) பேசிக் கொண்டிருந்தார். பூவரச மரத்தில் நாற்காலி செய்தால் நல்லது. அது ஒரு பளபளப்பான (glossy), நன்றாக தானியங்கள் முடிச்சுகள் இல்லாத கட்டை மற்றும் பலத்திலும் சிறந்தது என்று பெடன்னா கூறினான்.

எங்கள் மூத்த சகோதரி, “இதெல்லாம் மெல்லிய நிற கட்டைகள், பார்ப்பதற்கு அழகாக இருக்காது என்று கூறினாள். சிறிது நேரத்தில் நாம் அவற்றை வெறுத்துவிடுவோம் (detest). பழுத்த கரும்பு அல்லது எள் எண்ணெய் கலரில் இருந்தால் நல்லது அப்புறம் உங்கள் இஷ்டம்” என்று கூறினாள். கருப்பு மரத்தில் கண்ணாடி போன்ற தோற்றத்துடன், நன்றாக வடிவமைக்கப்பட்ட கால்கள், வளைந்த பின் கால்கள், சோர்வு இல்லாத தோற்றம் தான் சாய்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு நல்ல – நாற்காலி. அந்த ஆடம்பர நாற்காலி தான் எங்கள் கண்களில் முன் நிழலாடியது.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

எல்லோரும் அவள் சொல்வது சரி என்று ஆமோதித்தனர். எனவே, இரண்டு நாற்காலிகள் உடனடியாக செய்ய முடிவு. – எடுக்கப்பட்டது. ஒன்று எங்களுக்கு, மற்றொன்று மாமனாருக்கும்.

இரண்டு நாற்காலிகளும் வந்து சேர்ந்த போது, எந்த நாற்காலியை நாங்கள் வைத்துக் கொள்வது என்றும், எதை மாமனாருக்கு அனுப்புவது என்று தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால், மற்றொன்றைப் பார்க்க அவசியமில்லை. இரண்டுமே ராமன் லெட்சுமணன் போல உருவத்தில் ஒத்து இருந்தது. நாங்கள் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை. – மாமனாருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் ஒரு சந்தேகம். நல்லதை அவருக்கு அனுப்பிவிட்டோமோ என்று?

ஒருவர் பின் ஒருவராக, அந்த புதிய நாற்காலியில் உட்கார நாங்கள் வரிசை அமைத்துக் கொண்டோம். அதிலிருந்து. எழுந்து செல்ல எங்களுக்கு மனமில்லை. ஆனால் மற்றவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற நியதிக்காகத் தான் எழ வேண்டியிருந்தது. பெடன்னா உட்கார்ந்து பார்த்துக் கொண்டு, ஆச்சரியத்தோடு ஆஹா ஹா என்று பாராட்டினான்.. இரு கைகளையும் அந்த நாற்காலியின் மேல் தூக்கினான். கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். “இதற்கு ஒரு உறை தைக்க வேண்டும். இல்லையெனில் அது மண்ணாகி விடும்” என்று அத்தை கூறினார்.

என்னுடைய இளைய சகோதரியும், தம்பியும் அந்நாற்காலிக்காக அடிக்கடி சண்டையிட்டனர். அதனால் அவள் நீ”, ரொம்ப நேரமாக அதில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய். எழுந்திரு. நானும் இப்போது அமர வேண்டும் என்று கத்தினாள்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

‘அய்யோ நான் இப்போது தான் அமர்ந்தேன். அம்மா அவளைப் பாருங்கள்’, என்று கூறுவான். அம்மாவைப் பார்த்து திரைப்புள்ள முகத்தோடு அழுவது போன்று கத்துவான்.

நாற்காலி வீடு வந்து சேர்ந்த விஷயம் காட்டுத்தீ போல் அக்கிராமம் முழுவதும் பரவியது. பெரியவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கூட்டமாக வந்து (hordes) பார்த்துச் சென்றனர். ஒரு சிலர் அதனை பக்கவாட்டில் தட்டிப் பார்த்தனர். ஒரு முதியவர் அதனை தூக்கி, கொஞ்சம் பாரமாகத்தான் இருக்கிறது. நல்ல துணிச்சலோடு செய்து இருக்கிறார்.” என்று அந்த தச்சரைப் பாராட்டினார் (commended).

சில நாட்கள் கழித்தன.

ஓர் இரவு யாரோ ஒருவர் வந்து கதவைத் தட்டினார். உள் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பெடன்னா, எழுந்து கதவைத் திறந்தான். கிராமத்தில் உள்ள முக்கியமான நபர் ஒருவர் இறந்து விட்டதாகவும், அதற்கு நாற்காலி தேவைப்படுகிறது. என்று வந்தவர் கூறினார்.

இறந்தவர் யார் என்று எங்களுக்கும் தெரியுமாதலால் நாங்களும் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டோம். அங்கே எங்கள் நாற்காலியில் தான் இறந்தவரை உட்கார வைத்து முட்டுக்கொடுத்திருந்தனர் (propped).

ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் இறந்தவரை தரையில் தான் படுக்க வைத்திருப்பது வழக்கம். ஒரு பெரிய ஆட்டுக்கல்லை, தரையில் வைத்து, உருண்டு விடாமல் இருக்க முட்டுக் கொடுத்திருப்பர். ஒரு கோணிப்பையை எடுத்துக்கொண்டு அதனுள் தினை வைக்கோலை அடைத்து வைத்திருப்பர். அதன் மீது உயர்த்தி, அந்தப் பிணத்தைச் சாய்த்து வைத்திருப்பர் (bolster).

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

இதிலிருந்து தான் நகரத்துவாசிகளும் இந்த புதிய முறைக்கு மாறினார் (fad) அவர்களும் பிணத்தை நாற்காலியில் சாய்த்து வைக்கத் தொடங்கினர். எங்களுக்கு எந்த துப்பும் இல்லை. ஆனால் அன்றிலிருந்து தான் எங்கள் நாற்காலிக்கு ஒரு புதிய பிரச்சனை வரத் தொடங்கியது. (தரையில் படுக்க வைத்தவர்கள் இப்போது நாற்காலியில் சாய்த்து வைக்க முன்னேறினர்.

எல்லா நிகழ்வுகளும் அந்த வீட்டில் (துக்க வீட்டில்) முடிந்த பின்னர், அவர்கள் அந்த நாற்காலியினை எங்கள் முன் முற்றத்தில் வைத்துவிட்டனர். வீட்டில் உள்ள குழந்தைகள் யாவரும் அந்த நாற்காலியை பார்க்கப் பயந்தனர். நாங்கள் ஒரு வேலைக்காரனை அமர்த்தி, அதனை கிணற்றுக்குத் தூக்கிக் கொண்டு போய், நன்றாக வைக்கோலினால் தேய்த்து (scrub) அதை மீண்டும் 15 பெரிய வாளிகள் தண்ணீர் கொண்டு தேய்த்து கழுவினோம்.

வெகு நாட்களுக்கு பின்பு கூட, அந்த நாற்காலியில் அமர யாருக்கும் தைரியம் இல்லை (guts) எங்களுக்கு மீண்டும் அந்த நாற்காலியை எப்படி புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை.

ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக (fortuitously) ஒரு உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவருக்கு அந்த நாற்காலியை அமருவதற்குக் கொண்டு வந்தோம். இல்லை தம்பி வேண்டாம். நான் இதில் உட்கார்ந்து கொள்கிறேன் என்று அந்த நாற்காலியில் உட்காராமல், அங்கே கிடந்த துணி பாயை (cloth mat) நோக்கி நகர்ந்தார். நாங்கள் அவர் தரையில் உட்கார்ந்து விடுவார் என நினைத்தோம், பயந்தோம். அவரை நாற்காலியில் அமர சம்மதித்தோம்.

அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும், தங்கையும் பின்புறத்தில் உள்ள தோட்டத்திற்கு தப்பி ஒடினர் (fled). சில சமயங்களில் அவர்கள் அங்கிருந்து வந்து நாற்காலியில் உட்கார்ந்து இருப்பவருக்கு எதுவும் நடந்துவிட்டதா என்று உற்றுப் பார்த்தனர்.

மறுநாள், எங்கள் ஊரில் உள்ள ஒரு மூத்தவர் நடந்து செல்லும் போது, தானாகவே, அந்த நாற்காலியில் வந்து அமர நினைத்தார். அது எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. (இப்போதே அந்த நாற்காலியில் அமர ஒத்திகை பார்க்கிறார் என்று பெடன்னா என் காதுகளில் ஓதினான்). இப்படித்தான் நாங்கள் அந்த நாற்காலியைப் பயன்படுத்தினோம் (seasoned).

முதலில் அந்த நாற்காலியில் மூத்தவர்கள் அமர்ந்து பார்த்தனர். ஆனால் குழந்தைகள் பயந்து கொண்டு இருந்தனர். என்னுடைய சகோதரி, நீ ஏன் முதலில் போய் அதில் அமரக் கூடாது என்று என் தம்பியை நோக்கி கெஞ்சினாள். அதற்கு அவன், நீ ஏன் முதலில் போய் உட்காரக் கூடாது என எதிருரைத்தான்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவர் சுகந்தி, அவர் வந்து தனது குழந்தைத் தம்பியை நாற்காலியில் வைத்தார். அன்றிலிருந்து தான், எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் எவ்வித பயமும் இல்லாமல், அந்த நாற்காலியில் அமரத் தொடங்கினர்.

மீண்டும், ஓர் இரவு, இன்னொருவர் இறந்து போகவே, அந்த நாற்காலியைத் தூக்கிச் சென்றனர். இது அடிக்கடி நிகழ்ந்தது. நாங்கள் ஒவ்வொரு முறையும் சோகத்தில் அனுப்பினோம். துக்க வீட்டினர், எங்கள் சோகத்தை வேறு வழியில்லாமல் புரிந்து கொண்டனர். நாங்கள் இறந்து போனவர்களுக்காக வருந்துறோம் என்று தவறாக நினைத்துக் கொண்டனர்.

ஒவ்வொரு முறையும், எங்கள் தூக்கம் கெடுக்கப்படுவதை நினைத்து வருந்தினோம். அக்காள் ஒரு நாள், எதற்கு இந்த மோசமான (wretched) மனிதர்கள் நிலவுலகில் உரியதாக இயலும் போது, அந்நேரத்தில் ஏன் இறக்க வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டாள். அண்ணா உற்சாகமாக (exasperatedly) நாம் நல்ல ஒரு நாற்காலியை உருவாக்கினோம். பிணங்களை (corpses) உட்கார வைக்க வேண்டிய நிலை வந்து விட்டதே …. சீ என்றான்.

இதெல்லாம் அந்த நாற்காலியை அமங்கலமான நேரத்தில் செய்ய சொன்னதே தான் காரணம் என்றாள் அத்தை.

பெடன்னா இறுதியாக ஒரு யோசனையை நினைத்தான். ஆனால் நாங்கள் இருவருக்குள்ளும் அதை மூடி மறைத்து வைத்துக் கொண்டோம்.

அம்மா என்னை ஒரு முறை மாமனாரின் வீட்டுக்கு தூது அனுப்பினார் (errand) நான் நுழைந்த வேளை, அங்கே மாமனார், அற்புதமாக நாற்காலியில் அமர்ந்திருந்தார். வெற்றிலையை மடித்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கு ஒரு இனிமையான தருணமாக இருந்தது. வெற்றிலை பெட்டியை, அவர் மிகவும் கவனமாக கையாள்வதும், அதற்கு வலிக்காதவாறும் அதனைத் திறந்தார்.

பரந்த அளவில் (span wide) முழங்கை நீளமான, நான்கு விரல்கள் உயரம் கொண்ட அந்த வெற்றிலையை, தினமும் பொன்னைப் போன்று மின்னும் வரை துடைத்தார். அந்த சாதனங்களை பயபக்தியோடு பூஜைப்பெட்டியில் இருந்து எடுப்பதைப் போன்று எடுப்பார்.

அவர் வெற்றிலையைத் தூய்மையாகத் துடைத்தாலும் அதன் தண்டினை (stalk) கிள்ளி எறிய மாட்டார். மிகவும் சிக்கனமானவர். அவர் ஒரு கரடுமுரடான (coarse leaf) இலையைக் கண்டாலும், அதன் நரம்புகளை துண்டு துண்டாக எடுத்துவிடுவார். இது வெற்றிலை பற்றிய ஒரு பழைய புதிர் மந்திரத்தை நினைவூட்டுகிறது.

முத்தப்பனை பிடித்துக் கொண்டு
அவன் முதுகெலும்பை நீக்கு
தூய்மையான வெண்ணெய் கொண்டு பூசு …..

அவர் உடைந்த பாக்கினை நுகர்ந்து பார்ப்பார். இது நுகர்ந்து பார்த்தலின் போது போதை ஏறுவதை விரட்டுகிறது (ward off) பாக்கில் இருக்கும் சின்னச் சின்ன பூச்சிகளை விரட்ட இவ்வாறு செய்யலாம். ஊதுதல் மூலம் ஒளிந்திருக்கும் பூச்சிகளை விரட்டலாம். முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்பு வேகம் எடுக்கும் பின்பு வாயில் போட்டு மென்று விடுவார்.

ஒருவர் எவ்வாறு சுத்தமாக இருக்கிறார் என்பதை அறிய, அவர் வைத்திருக்கும் சுண்ணாம்பு டப்பாவை பார்த்தாலே போதும். மாமனார் இதற்கு சற்றும் பொருந்தாதவர். விரலிலிருக்கும் மிஞ்சிய சுண்ணாம்பு பசையைக் கூட அடுத்த பொருட்களின் மீது துடைக்க மாட்டார். பயபக்தியோடு அவரின் சுண்ணாம்பு டப்பாவை கண்ணில் ஒற்றி எடுத்துக் கொள்ளலாம். அவரின் எவெரெடி டார்ச் விளக்கு 15 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

இன்னும் உபயோகத்தில் உள்ளது. ஆயினும் பளிச் என இருப்பதோடு இப்போது தான் வாங்கியது போன்று இருக்கும். அதோடு எங்கள் குடும்பத்துக்கும் சேர்த்து வாங்கிய டார்ச் லைட், துவாரம் உடையதாகவும், மஞ்சள் நிறத்தில், பரிதாபமிக்க நிலைக்குத் தள்ளப்பட்டு, நாட்பட்ட (chronic) நோயாளி சாகும் தருவாயில் இருப்பதைப் போல் இருக்கிறது.

அவரது வீட்டில் அவரைத் தவிர அந்த நாற்காலியை யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள். காலை எழுந்தவுடன் ஒவ்வொரு நாளும் முதல் வேளையாக அதனை நன்கு துடைத்துவிடுவார். ஒரு மண் பானையில் தண்ணீர் உள்ளதைப் போல நினைத்து, அவரே அதனை கவனமாக தூக்குவதும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதும் அவரே செய்வார்.

என்னைப் பார்த்து, மாமனார் வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். மருமகனே, வாருங்கள். வெற்றிலை சாப்பிடுகிறீர்களா? பின்பு அவரே அதற்குப் பதிலளித்தார். பவுளிப்பருவத்து மாணவர்கள் இப்போதே வெற்றிலை. மென்றால், சிறு கோழிக்குஞ்சுகள் கூட பீப்பாய் போல உருமாறிவிடும் (butting).

நான், அம்மா கூறியவற்றை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

பின்பு, அன்று ஒரு தேவ பக்தியற்ற இரவில், கதவை யாரோ தட்டினர். எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நான் பெட்டனாவை எழுப்பினேன். வீட்டுக்கு வெளியே ஒரு சிலர் ஒரு துயரமடைந்த வீட்டில் இருந்து வந்து நின்று கொண்டிருந்தனர். அவர் நாற்காலி வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தனர். பெடன்னா அவர்களை தெருவுக்குள் அழைத்துச் செல்ல நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை எங்களிடம் சொல்லி முடித்த பின்பு, பொறுமையாக பெடன்னா பதிலளித்தான். நாற்காலி தானே. அது என்னுடைய மாமனார் வீட்டில் உள்ளது. நீங்கள் போய் அவரிடம் கேளுங்கள். தருவார். அவர்களை அனுப்பிய பின் நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். சத்தமில்லாமல் யார் அது? தூக்கத்தில் அப்பா கேட்டார்.

“ஒன்னும் இல்லை ….” சிலர் நமது காளைகளை இதிரடிப்பதற்கு (threshing) கேட்டனர்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

போர்வையை இழுத்துப் போர்த்தியவராய் அப்பா மீண்டும் படுக்கைக்குச் சென்றார். இப்போது மாமனாரின் காட்டில் மழை. சில நாட்கள் கழித்து, மாமனாரை சந்தித்த போது அவர் தரையில் உட்கார்ந்திருந்தார். வெற்றிலை மெல்ல தயார் படுத்திக் கொண்டிருந்தார். அவர் வழக்கமான புன்னகையை உதிர்த்து என்னை வரவேற்றார்.

“இது என்ன? தரையில் அமர்ந்து இருக்கிறீர்கள், நாற்காலி எங்கே?” நான் தேடினேன். சுண்ணாம்பு பசையை வெற்றிலையில் பின்புறத்தில் தடவியவராய் என்னைப் பார்த்து புன்னகைத்தார். பின்பு மெல்லிய குரலில் கூறினார். நான் அவர்களை, அந்த நாற்காலியை அந்த ஒன்றுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினேன். இருப்பினும் உனக்கு இன்னொன்று தேவைப்படுகிறது என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை வீட்டுக்கு விரைந்தேன். இந்த செய்தியை சொல்வதற்காக பெடன்னாவைத் தேடிச் சென்றேன். ஆனால் என்னுடைய நகர்வுகள் அனைத்தும் சாதாரண நடையாக மாறியது (gait).


The Chair Poem Summary in English

Here we have uploaded the The Chair Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Tamil Nadu chairless Vita?

Suddenly everyone in our house started thinking like this. It was put on the family agenda (agenda) and discussions began.

The other day, a family friend visited our house. He is a deputy judge. Not wearing a shirt. Instead he was wearing a coat, suit, and shoes. There was only one tripod in our house. It will be only three-quarters of a foot in size. Grandma would just sit on that tripod when she was bored of yogurt. Grandma was a little overweight so, Grandpa gave it to the carpenter and asked him to change it to a slightly wider size.

The deputy judge who came to the house was also portly. Since there were no seats in our house, we brought him to sit on the tripod. We seated him, as if laying on its edge. A bad (wretched) about that tripod

Message: If the legs of the tripod do not place the upper weight (body) correctly, it will topple down. We have fallen down so many times as carelessly. When climbing on it and stealing the ghee from the hook (rope net). Before saying this news, the deputy judge fell down.

He fell to the ground with a soft thud and rolled over. My brother and I, my little sister, saw this and ran to the garden behind the giggles. We just thought this local laugh had subsided. My sister speaks well in many voices. She showed up with her arms outstretched and rolling on the floor as the deputy judge fell. Seeing this made us laugh longer.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

There is another reason for this decline. As other guests rolled on the floor like this, we were reminded of our parents standing in front of them suppressing their laughter.

So, ending the laughter on behalf of everyone, we slowly stepped into the house (pussy footed). But that deputy judge was not there. That tripod was not there either. Did you take it with you? My sister asked me.

After this incident, it was decided to make a chair for our house. One problem with this is that in that village, there is not even a chair to show the model, to make that chair. Not even a carpenter would do that.

'It simply came to our notice then. You can buy a chair from the city, ”suggested Brother Pedanna. But my father rejected it. The reason is that it is not possible (sturdy) said.

Our aunt said that there was a skilled carpenter in the neighboring village. But, he never made any chair. The governor himself had gifted him.

When Mom heard Auntie's second sentence, it was as if she had turned her head and said, 'She must have seen it all.'

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

Dad called a servant and sent him to the village where the carpenter was (despatched). He came near and sat down. Now, there was a discussion about what kind of wood can be used.

“Teak is the best. That should be sufficient enough to attract him and move him to another place, ”he said, rubbing his paralyzed legs. Grandma (Grandma always has her legs paralyzed, attic)

At that moment, the father-in-law (maternal uncle) enters. Bedanna runs and picks up the tripod. For a while, the whole family was spluttered. Before all events are streamlined.

The father-in-law, himself, chooses a place of his own whenever he comes home. He will not sit anywhere other than that place with his head chop off. He will be leaning on that pillar. The pillar will be next to the wall to the south of the storage room. He will perform these rituals regularly. He will then inspect the floor. “Did you see if any money fell out of your head? Anna would say with an unbridled laugh.

He is always piercing like paper arrows. He will be like a stone boy with a smile whenever he sees us. You are my relatives. If you do not tease, who else will? If the ridicule we make goes too far, Mom will get angry with us and leave. The last word is, “You donkeys.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 5 The Chair

As soon as the father-in-law is seated, the mother goes to the kitchen. Dad followed her like a lamb. In a little while, Mom had a Friday


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Chair Poem Summary in Tamil


How to get The Chair Poem in Tamil Summary??

Students can get the The Chair Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Chair Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List