Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

God Sees the Truth But Waits Chapter Summary in Tamil & English Free Online

God Sees the Truth But Waits Poem Summary in Tamil PDF
God Sees the Truth But Waits Poem Summary in Tamil

God Sees the Truth But Waits Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of God Sees the Truth But Waits Poem in Tamil. Also, in this article, we will also provide God Sees the Truth But Waits Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the God Sees the Truth But Waits Poem Summary in Tamil please let us know in the comments.


God Sees the Truth But Waits Poem Summary in Tamil


Poem

God Sees the Truth But Waits Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find God Sees the Truth But Waits Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on God Sees the Truth But Waits Poem Summary in Tamil Post.

God Sees the Truth But Waits Poem Summary in Tamil

Students can check below the God Sees the Truth But Waits Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


இந்த கதை, ஆக்சியோநவ் என்ற ஓர் இளம் வணிகரின் விசுவாசம், மன்னிக்கும் தன்மை, சுதந்திரம் மற்றும் ஏற்புடைமையைப் பற்றியது. இவர் தாம் செய்யாத குற்றத்திற்காக சிறைவாசம் அடைகிறார்.

விலாடிமிர் (Vladimir) என்ற நகரத்தில் ஒரு இளம் வியாபாரி (merchant) வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் ஐவன் ட்மிட்ரிச் அக்சியோநவ் (Ivan Dmitrich Aksionov). அவர் சொந்தமாக ஒரு வீட்டையும், இரு கடைகளையும் வைத்திருந்தார்.

அக்சியோநவ் அழகு வாய்ந்தவன். அழகிய முடிகளைக் கொண்ட அலை வளைவு போன்ற தலைமுடியை உடையவர். அவர் நகைச்சுவை தன்மை மிக்கவன். பாடல் பாடுவதில் நாட்டம் கொண்டவர். இந்த அமைதியான மனிதர் குடிக்கக் கொடுத்தால், விதிகளை மீறும் வரை குடித்துக் கொண்டே இருப்பார். ஆனால் திருமணத்திற்குப் பின் தன் குடிப்பழக்கத்தைத் துறந்தார்.

ஒரு கோடைக்காலத்தில் அக்சியோநவ், நிஸ்னி கண்காட்சிக்குச் (Nizhny Fair) சென்றான். தம் குடும்பத்திலிருந்து விடைபெறுவதைக் கூறும்போது, அவனது மனைவி, “ஐவன் ட்மிட்ரிச், இன்று நீங்கள் செல்ல வேண்டாம், ஏனெனில் உங்களைப் பற்றி தீய கனவு (bad dream) ஒன்றைக் கண்டேன்” என்றாள்.

அதற்கு அக்சியோநவ் “நான் கண்காட்சிக்குச் சென்றதும் களிப்பூட்டும் குடிவெறியாட்டம் போடுவேன் என்று அஞ்சுகிறாயா?” என்று சிரித்துக்கொண்டே கூறினான். அதற்கு அவர் மனைவி “நான் எதற்கு அஞ்சுகிறேன் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அந்த தீய கனவைப் பற்றிதான். எனது கனவில், நீங்கள் நகரத்தை விட்டு திரும்பும்போது தொப்பியைக் கழற்றுகிறீர்கள் அப்போது நான் உங்கள் தலைமுடியனைத்தும் நரைத்து இருப்பதைக் காண்கிறேன்” என்றாள்.

அக்சியோநவ் சிரித்தார். “அது அதிர்ஷ்டத்தின் அடையாளம்” என்றார். “இதோ பார், நான் எனது பொருள்களை விற்கவில்லை என்றாலும் உனக்கு அங்கிருந்து பரிசுகளைக் கொண்டு வருகிறேன்” என்றான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

அதனால் அவர் தனது குடும்பத்திடமிருந்து விடைபெற்றுசென்றார். அவர் பாதிதொலைவில் சென்றுகொண்டிருக்கும் போது, அக்சியோநவ் தனக்கு அறிமுகமான ஒரு வியாபாரியை சந்தித்தான். அவர்கள் அன்றிரவு தங்குவதற்கு ஒரே விடுதியைப் (inn) பதிவு செய்திருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்தே தேனீர் அருந்தினர். பிறகு அவர்கள் படுக்கைக்குச் சென்றனர்.

இரவு தாமதமாக உறங்க செல்வதும், குளிரில் பயணிப்பதும் அக்சியோநவ்வின் பழக்கமன்று. அவர் விடியும் முன் தனது ஓட்டுநரை எழுப்பி விட்டு குதிரைகளை (horses) ஆய்த்தப் படுத்தக் கூறினான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits 2

பின்னர், அவன் தனது விடுதியின் உரிமையாளரிடம், (விடுதிக்குப் பின்புறம் உள்ள சுவரின் வீட்டிற்கு சென்று விடுதியின் கட்டணத்தை கட்டிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இருபத்தைந்து மைல் தூரம் சென்றபின், குதிரைகளுக்கு உணவளிப்பதற்காக நிறுத்தினார். அக்சியோநவ் வழியோரம் இருந்த விடுதியில் ஓய்வெடுத்துக் (rested) கொண்டிருந்தார். பிறகு விடுதியின் முற்றத்திற்கு (porch) வந்து தேனீர் பாத்திரத்தை சூடுபடுத்த கட்டளையிட்டார். தனது இசைக் கருவியைக் (guitar) கொண்டு வாசிக்கத் தொடங்கினார்.

திடீரென்று மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி மணியோசையுடன் வந்தது. ஓர் அதிகாரி இரண்டு படைவீரர்களுடன் (soldiers) கீழிறங்கினார். அவர் அக்சியோநவ்விடம் வந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அவர் யார் என்றும், எப்பொழுது இங்கே வந்தார் என்றும் வினவினார். அக்சியோநவ் அனைத்தையும் கூறி, “என்னுடன் தேனீர் அருந்துகிறீர்களா?” என்றான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

ஆனால் அதிகாரி அவனிடம் குறுக்கு கேள்வி கேட்டார். அவனிடம், “நேற்றிரவு எங்கே கழித்தீர்கள்? என்றும் நீ மட்டுமா அல்லது வேறு வியாபாரியுடன் தங்கி இருந்தாரா? என்றும் காலையில் வியாபாரியை பார்த்தீர்களா? என்றும் பொழுதுவிடியும் முன் ஏன் விடுதியிலிருந்து வந்தீர்கள்? என்றும் கேட்டார்.

ஏன் இவ்வளவு வினாக்கள் தன்னிடம் கேட்கப்பட்டன என்று வியப்படைந்தான் அக்சியோநவ். ஆனால் அனைத்திற்கும் விடையளித்தான். கூடதலாக “ஏன் என்னிடம் இவ்வளவு குறுக்கு வினாக்கள், நான் என்ன திருடனா (thief) அல்லது கொள்ளையனா (robber)? நான் எனது வியாபாரத்திற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன் மற்றும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டியதில்லை’ என்றார்.

பின்னர் அந்த அதிகாரி, படைவீரர்களை அழைத்து அக்சியோநாவிடம் “நான் இந்த மாவட்டத்தின் காவல் அதிகாரி, நான் உன்னிடம் ஏன் வினா கேட்கிறேனென்றால் நீ எந்த வியாபாரியுடன் நேற்றைய இரவைக் கழித்தாயோ அவர் தற்போது கழுத்து வெட்டுண்டு இறந்து கிடக்கிறார்” ஆகவே நாங்கள் நிச்சயமாக உன் பொருள்களைச் சோதிக்க வேண்டும்,” என்று கூறினார்.

அவர்கள் வீட்டினுள் நுழைந்தனர் (entered). படைவீரர்களும், காவல் அதிகாரியும் அக்சியோநவ்வின் மூட்டை (luggage) முடிச்சை அவிழ்த்து தேடினார். உடனே அதிகாரி மூட்டையிலிருந்து ஒரு கத்தியை எடுத்தார். “இது யாருடையது?” என்று கத்தினார். தனது பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட இரத்தக்கறைப் படிந்த கத்தியைப் பார்த்து அக்சியோநவ் அச்சமடைந்தார். “எப்படி இந்த கத்தியின் மேல் இரத்தம் படிந்தது?”

அக்சியோநவ் பதிலளிக்க முயன்றான் ஆனால் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை. எனக்கு தெரியாது…… என்னுடையது இல்லை ….. என்று திக்கித் திக்கிக் (stammered) கூறினார். “இந்தக் காலைபொழுதில் அந்த வியாபாரி அவரது படுக்கையில் கழுத்து வெட்டுண்டு கிடந்தார்”, உங்களால் மட்டும்தான் இதைச் செய்திருக்க முடியும். அந்த வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது மற்றும் அங்கு வேறு யாரும் இல்லை .

இங்கு இரத்தம் படிந்த கத்தி (blood stained knief) உங்கள் பையில் இருக்கிறது மற்றும் உங்களது முகமும், போக்கும் உங்களைக் காட்டிக்கொடுக்கின்றன. எவ்வாறு நீங்கள் அவனை கொன்றீர்கள், எவ்வளவு பணம் நீங்கள் கொள்ளையடித்தீர்கள்?” என்று என்னிடம் கூறுங்கள்” என்று கேட்டார்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

அக்சியோநவ், தான் தவறு செய்யவில்லை என்று அவனுக்கு உறுதியாக தெரியும், அவனும், கொலையுண்ட வியாபாரியும் சேர்ந்து தேனீர் அருந்தியபின், அந்த வணிகரை அக்சியோநவ் பார்க்கவில்லை . அவனிடம் எட்டாயிரம் ரூபிள்கள் (rubles) தவிர வேறு பணம் இல்லை மற்றும் அந்த கத்தி அவனுடையதன்று. ஆனால் அவனது குரலில் தடுமாற்றம் எழுந்தது, முகம் வெளிறிப் போனது (pale) மற்றும் அவன் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டார். இருப்பினும் பழிக்குற்றத்திற்குத் (guilty) தள்ளப்பட்டார்.

அந்த காவல் அதிகாரி, அக்சியோநவ்வைக் கட்டி (bind) வண்டியிலேற்றும்படி படைவீரர்களுக்கு கட்டளையிட்டார். அவர்கள் அச்சியோநவ்வின் கால்களைச் சேர்த்துக்கட்டி வண்டியிலேற்றினர். அக்சியோநவ் தனக்குத்தானே சிலுவையை (cross) தொட்டு அழுதார். அவரது பணமும் மற்றும் பொருட்களும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டன. அவர் பக்கத்து நகரத்துக்கு அனுப்பப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

விலாடிமிரில் (Vladimir) அவனைப் பற்றிய விசாரணை (enquiries) நடத்தப்பட்டது. அங்குள்ள வியாபாரிகளும், குடிமக்களும் முந்தைய நாட்களில் அவன் குடித்துக்கொண்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பான், ஆனால் அவன் நல்ல மனிதனாக மாறி விட்டான் என்று கூறினர். பின்பு விசாரணை தொடங்கியது, ரையாசான் வியாபாரியைக் கொன்றதாகவும், இருபதாயிரம் ரூபிள்களைக் கொள்ளையடித்ததாகவும் பழிச்சுமத்தப்பட்டார்.

அவனது மனைவி நம்பிக்கையிழந்து இருந்தாள். அவருக்கு எதை நம்புவது என்று தெரியவில்லை. அவளுடைய குழந்தைகள் அனைவருமே மிகச்சிறியவர்கள், ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பருவத்தில் இருந்தது. அனைவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தன் கணவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நகரத்திற்குச் சென்றாள். முதலில் அவள், தன் கணவனைப் பார்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பிறகு மிகவும் கெஞ்சியப்பின், மேலதிகாரியால் அனுமதிக்கப்பட்டு அவனிடம் கொண்டுச் செல்லப்பட்டாள்.

தனது கணவனைக் கைதி உடையில் விலங்கிட்டு குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் மத்தியில் பார்த்தவுடன் அவள் கீழே விழுந்தாள். நீண்ட நேரம் வரை எழவில்லை . பிறகு தன் குழுந்தைகளை தூக்கிக்கொண்டு, தன் கணவன் அருகில் அமர்ந்தாள். வீட்டு நடப்பை அவரிடம் கூறினாள். அவருக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டாள். அவன் அனைத்தையும் அவளிடம் கூறினான். “நாம் இப்போது என்ன செய்வது?” என்று அவள் கேட்டாள்.

”நாம் கண்டிப்பாக சிசார் மன்னருக்கு ஒரு நிரபராதி அழிவிற்கு செல்லவேண்டாம்” என்று மனு செய்ய வேண்டும் ஆனால், தான் சிசார் மன்னருக்கு விண்ணப்பம் அனுப்பியதையும், அது ஏற்றுக் கொள்ளப் படாததையும் பற்றி அவள் தன் கணவனிடம் கூறினாள்.

அவன் எதுவும் கூறவில்லை . ஆனால் ஊக்கம் குறைந்தபடி காணப்பட்டான்.

பிறகு அவன் மனைவி கூறினாள், “ இது ஒன்றும் பயனில்லை. நான் அன்று உங்கள் தலைமுடி நரைத்து விட்டதாகக் கனவு கண்டேன். நினைவில் உள்ளதா? அந்த நாளில் செல்ல வேண்டாம் என்றேன். அவள் தன் விரல்களை அவன் முடிகளினுள் விட்டு கூறினாள் “வாண்யா (ஐவன் என்பதன் செல்லப் பெயர்) அன்பிற்குரியவரே உண்மையை உங்கள் மனைவியிடம் கூறுங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் செய்தார்?”

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

அதனால் நீ கூட என்னை சந்தேகிக்கிறாயா! என்று முகத்தை கைகளால் மூடி (hiding) அழத் தொடங்கினான். பிறகு ஒரு படைவீரர் அவனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் “இங்கேயிருந்து செல்லுங்கள்” என்றான். அக்சியோநவ் அவனது குடும்பத்திற்கு கடைசி முறையாக பிரியா விடை கொடுத்தார்.

அவர்கள் சென்றதும், அக்சியோநவ் பேசியதனைத்தையும் மீண்டும் நினைவு படுத்திப் பார்த்தார். எப்போது தன் மனைவி தன்னைச் சந்தேகப்பட்டு கேட்ட வினாக்கள் நினைவில் எழுந்ததோ, அவன் தனக்குத் தானே “கடவுளுக்கு மட்டும் உண்மை தெரியும், அவனிடம் மட்டும்தான் முறையீடு செய்ய முடியும் மற்றும் அவனிடம் மட்டும் தான் இரக்கத்தை எதிர்ப்பார்க்கமுடியும் என்று கூறிக்கொண்டான் மற்றும் அக்சியோநவ் மேலும் எந்த விண்ணப்பங்களையும் எழுதவில்லை, அனைத்து நம்பிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, கடவுளை வணங்கத் தொடங்கினார்.

பிரம்பால் அடிபடுவதற்கும், சுரங்கத்திற்குச் செல்வதற்கும் ஆழ்ந்த வெறுப்பு தெரிவித்தார். அக்சியோநவ் அதனால் சாட்டையால் அடிக்கப்பட்டார். சாட்டையடியால் ஏற்பட்ட காயங்கள் ஆறியபின் மற்ற குற்றவாளிகளுடன் சிபோரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருபத்தாறு ஆண்டுகளுக்கு அக்சியோநவ் குற்றவாளியாக சைபீரியா சிறையில் வாழ்ந்தார். அவரது முடி பனிப்போன்று வெண்மையாயின. அவரது தாடி நீளமாக வளர்ந்து, மெல்லியதாக நரைத்துக் காணப்பட்டது. அவனது அனைத்து மகிழ்ச்சியும் சென்றுவிட்டன, அவனுக்கு கூன் விழுந்தது, மெதுவாக நடந்தார், குறைவாக பேசினார் மற்றும் சிரிக்காமலேயே இருந்தார். ஆனால் அவர் கடவுளைத் துதித்துக் கொண்டே இருந்தார்.

சிறையில் அக்சியோநவ் காலணி (boots) செய்வதைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் சிறிது பணத்தைச் சம்பாதித்தார். அவற்றைக் கொண்டு “புனிதர்களின் வாழ்வு” என்ற நூலை வாங்கினார். அவர் அந்த நூலை, சிறையில் போதிய ஒளி இருக்கும்போது வாசித்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் சிறையில் இருக்கும் தேவாலயத்தில் புனித நூல்களை வாசித்தும், பாடல் குழுவில் இணைந்து பாடல்கள் பாடியும் வழிபட்டார். அவருடைய குரல் அப்போதும் நன்றாக இருந்தது.

சிறை அதிகாரிகள் மென்மை (meekness) குணத்திற்காக அக்சியோநவ்வை நேசித்தனர். சக குற்றவாளிகள் அவரை மதித்தனர். அவர்கள் அவரை “தாத்தா” என்றும் “புனிதர்” என்றும் அழைத்தனர். சிறை அதிகாரிகளிடம் ஏதேனும் விண்ணப்பம் எழுப்பினால் அனைவர் சார்பாக அக்சியோநவ்வே பேசுவார். குற்றவாளிகளுக்குள் மோதல் ஏற்பட்டால் அந்த பிரச்சனை அக்சியோநவ்விடம் கொண்டுவரப்பட்டு தீர்க்கப்பட்டது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

தன் வீட்டிலிருந்து எந்த செய்தியும் அக்சியோநவ்விடம் வந்து சேரவில்லை. மனைவியும், குழந்தைகளும் உயிரோடு இருக்கின்றனரா என்று கூட அவருக்குத் தெரியவில்லை . ஒரு நாள், ஒரு புது குற்றவாளிக் குழு சிறைக்கு வந்தடைந்தது. மாலைப் பொழுதில் பழைய குற்றவாளிகள் புது குற்றவாளிகளை வட்டமாக அமரச்செய்து, எந்த நகரம் அல்லது கிராமத்திலிருந்து வருகிறீர்கள் என்றும், எதற்காகச் சிறைக்கு அடைக்கப்பட்டார்கள் என்றும் விசாரித்தனர். அக்சியோநவ்வோ மகிழ்ச்சி குறைந்தவராய் புது குற்றவாளிகள் அருகில் அமர்ந்து அவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

புது குற்றவாளிகளுள் ஒருவர், உயரமாக அறுபது வயது பொருந்திய உறுதியான, நரைத்த தாடியுடன் இருந்தார். எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதைக் கூறிக்கொண்டிருந்தார்.

“நல்லது நண்பர்களே”, என்று அவர் கூறினார். “நான் பனிப்பிரதேசத்தில் வண்டியை இழுத்துச் (sledge) செல்லும் ஒரு குதிரையைத் திருடினேன். நான் அதற்காகக் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கிறேன்” என்றான்.

தான் அக்குதிரையை வீட்டிற்கு விரைவாகச் செல்வதற்கு எடுத்ததாகவும், பிறகு விட்டுவிடலாம் என்று இருந்ததாகவும் மேலும் அக்குதிரை ஓட்டுநர் தனக்குத் தனிப்பட்ட நண்பர் என்றும், ஆதலால் ‘இது சரியே’ என்றும் கூறினார். ஆனால் அவர்கள் ‘இல்லை ‘ ‘நீ இதைத் திருடிவிட்டாய்’ என்றனர்.

ஆனால் எங்கு அல்லது எப்படி திருடினேன் என்று அவர்கள் கூறவில்லை . ஒரு நாள் நான் சில தவறுகள் செய்தேன். அதன் கட்டாயமான முன்பு இங்கே வந்தேன். ஆனால் அப்பொழுது என்னைக் கண்டுபிடிக்கவில்லை. இப்போது எதுவும் செய்யவில்லை ஆனாலும் இங்கே அனுப்பப்பட்டிருக்கிறேன்……. ஆனால் தற்போது கூறுவது பொய். முன்பு சைபீரியாவில் இருந்தேன், ஆனால் வெகுகாலம் அல்ல.”

“எங்கிருந்து வருகிறீர்கள்” என்று சிலர் கேட்டனர். ஒருவர் கேட்டார். “விலாடிமிர்ரிலிருந்து”.

எனது குடும்பம் அங்குள்ள நகரத்தில் இருக்கிறது. எனது பெயர் மகர் (makar) மற்றும் சிலர் என்னை செம்யோனிச் (semyonich) என்று அழைப்பர், அக்சியோநவ்தலையைத் தூக்கி “கூறு, செம்யோனிச் உனக்குவிலாடிமிர்ரைச் சேர்ந்த வியாபாரி அக்சியோநவ்வைப் பற்றித் தெரியுமா? அவர்கள் இன்றும் வாழ்கின்றனரா?”

“அவர்களைத் தெரியுமா? நன்றாகத் தெரியும். அந்த அக்சியோநவ் பணக்காரர், அவர்களின் தந்தை சிபேரியாவிலிருந்தாலும். அவர் நம்மைப் போன்ற பாவி, தாத்தா நீங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள்?”

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits 3

அக்சியோநவ் தன் துரதிஷ்டத்தைப் பற்றி கூற விரும்பவில்லை . அவர் ஒரு பெருமூச்சு விட்டு கூறினார், “எனது பாவங்களுக்காக இந்த சிறையில் இருபத்தாறு ஆண்டுகள் இருக்கிறேன்”.

“என்ன பாவங்கள்?” என்று கேட்டார் மகர் செம்யோனிச்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

ஆனால் அக்சியோநவ் “விடுங்கள், விடுங்கள் நான். இதற்கு தகுதியுடையவன் தான்” என்று மட்டும் கூறினார். ஆனால் அவருடைய சகதோழர்கள் புதிய நண்பர்களிடம் எவ்வாறு அக்சியோநவ் சிபேரியாவிற்கு வந்தார் என்றும், எவ்வாறு மர்ம நபர் ஒருவர் ஒரு வியாபாரியைக் கொன்று விட்டு அந்தக் கத்தியை அக்சியோநவ் பையில் மற்ற பொருள்களோடு வைத்தவிட்டுச் சென்றதையும் கூறினார்கள் அதனால் அக்சியொநவ் அநியாயமாக தண்டிக்கப்பட்டார் என்றும் கூறினார்கள்.

இதை மகர் செம்யோனிக் கேட்டதும், அக்சியோநவ்வைப் பார்த்து, தன் மூட்டினை (knee) அடித்துக்கொண்டு (slapped) வியந்து, “இது வியப்பாக உள்ளது! உண்மையிலேயே வியப்பு! ஆனால் நீங்கள் முதுமை அடைந்து வீட்டீர்களே! தாத்தா! என்றார்.

மற்றவர்கள் அவரிடம் (மகரிடம்) எதற்காக அவன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறான், அவனுக்கு முன்னதாகவே அக்சியோநவ்வைத் தெரியுமா என்றும் வினவினர், ஆனால் மகர் செம்யோனிச் பதில் ஏதும் கூறவில்லை . இதில் வியப்பு என்னவென்றால் “நாம் இங்கு சந்திக்கிறோம் சிறுவர்களே! (lads)” என்று மட்டும் உரைத்தான்.

இவ்வார்த்தைகள் அக்சியோநவ்வைவியப்பூட்டியது. ஏனென்றால் ஒரு வேளை இம்மனிதருக்கு அந்த வியாபாரியைக் கொன்றவனைப் பற்றித் தெரியுமோ என்று. ஆதலால் அவர் ஒருவேளை செம்யோனிச் உங்களுக்கு அந்த விவகாரம் பற்றித் தெரிந்திருக்கலாம் அல்லது எப்போதாவது முன்பு என்னைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“நான் கேட்டதை வைத்து உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்? இந்த உலகம் வதந்திகளால் நிறைந்துள்ளது. ஆனால் இது நீண்ட காலத்துக்கு முன்பு நான் என்ன கேட்டேன் என்பதை மறந்துவிட்டேன் “ஒருவேளையார் அந்த வியாபாரியைக் கொன்றிருப்பார்? என்பதை நீங்கள் கேட்டிருப்பாய்” என்றார் அக்சியோநவ்.

மகர் செம்யோனிச் சிரித்துக்கொண்டே “கத்தியை எவர் மறைத்து வைத்தாரோ அவர் பிடிபடும்வரை குற்றவாளியல்ல.” என்று கூறினார். “உங்கள் கண்காணிப்பில் இருக்கும்போது யாரால் கத்தியை உங்கள் பையில் போட முடியும்? இது நிச்சயமாக உங்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும்”.

எப்பொழுது இவ்வார்த்தைகளை அக்சியோநவ் கேட்டாரோ, அப்பொழுதே இந்த மனிதர்தான் அந்த வியாபாரியை கொன்றிருப்பார் என்று உறுதி செய்தார். அவர் எழுந்து அங்கிருந்து சென்றார். அன்றிரவு முழுவதும் அக்சியோநவ் விழித்துக் (awake) கொண்டிருந்தார். அவர் பயங்கரச் (terribly) சோகத்தில் ஆழ்ந்தார். பலவிதமான கற்பனைகளும் அவர் மனதில் எழுந்தன. அவர் கண்காட்சிக்கு (fair) செல்லும் முன் தன் மனைவியுடன் இருந்த தருணங்கள் நினைவிற்கு வந்தன.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

அவர் கண்முன் தன் மனைவியின் குரல், பேச்சு மற்றும் சிரிப்புத் தோன்றின. பிறகு அப்போது சிறுவர்களாக இருந்த குழந்தைகள் கண் முன் தோன்றினர். ஒரு குழந்தை சிறிய மேலங்கியுடனும், மற்றொன்று தாய்ப்பால் குடிக்கும் பருவத்திலும் இருந்தது. அவர் இளமையாகவும், சந்தோசமாகவும் இருந்த தருணங்கள் நினைவிற்கு வந்தன.

அவர் கைதுசெய்யப்பட்ட இடத்தில் இருந்த திண்ணையில் அவர் இசைக்கருவி வாசித்ததும், சவுக்கு அடி வாங்கியதும், மக்கள் அவரைச் சுற்றி நின்றதும், சங்கிலியும், குற்றவாளிகளும், சிறைவாழ்க்கையும் அவருடைய முதிர்வும் அவரின் நினைவிற்கு வந்தன. இந்த அனைத்துச் சிந்தனைகளும் அவரை பரிதாபமாக (wretched) மாற்றி தன்னைத்தானே கொல்வதற்கு ஆயத்தப்படுத்தியது (ready).

“இவையனைத்தும் அந்த வில்லன் செய்தது” என்று சிந்தித்தார் அக்சியோநவ். அவரது கோபம் மகர் செம்யோனிச் மீது பெருகியது. தான் இறந்தாலும் அவரைப் பழித்தீர்த்துவிடவேண்டும் என்று எண்ணினார். அவர் அனைத்து இரவுப் பொழுதுகளிலும் இறைவனிடம் வேண்டினார். ஆனாலும் அவருக்கு அமைதி கிடைக்கவில்லை. அந்த நாட்களில் அக்சியோநவ் செம்யோனிச்சின் அருகில் செல்லவும் இல்லை, அவரைப் பார்க்கவும் இல்லை.

இரண்டு வாரம் கழிந்தது. அன்றிரவு அக்சியோநவ் உறங்கவில்லை, தான் அடுத்து என்ன செய்யப் போவது என்று தெரியாமல் பரிதாபமாக (miserable) இருந்தார்.

ஓர் இரவு, அவர் சிறையில் நடந்துக்கொண்டிருக்கும்போது கைதிகள் உறங்கும் பலகையின் கீழ் நிலத்தைத் தோண்டிக்கொண்டு யாரோ வருவதைக் கண்டார். அவர் தன்னை நிறுத்திக்கொண்டு என்ன நடக்கிறது என்பதனைக் கவனித்தார். திடீரென அந்த படுக்கையில் கீழிருந்து மகர் செம்யோனிச் வெளியேறினார். முகத்தில் பதட்டத்துடன் அக்சியோநவ்வைக் கண்டார்.

அக்சியோநவ் அவரைக் காணாததுப்போல் சென்றுவிடப் பார்த்தார் ஆனால் மகர் அவரது கையைப் பற்றிக்கொண்ட அவரிடம் தான் சுரங்கத்தின் வழியே தப்பிப்பதற்கு ஒரு குழியைத் தோண்டுவதாகவும், தோண்டியவற்றை தன் நீண்ட காலணியில் வைத்து தினமும் கைதிகள் வேலைக்கு செல்லும்போது அவற்றை சாலையில் அப்புறப்படுத்திவிடுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

“அமைதியாக இருங்கள் வயதானவரே, நீங்களும் வெளியேறலாம் முட்டாள்தனமாக இந்த ரகசியத்தை வெளியே கூறினால், அவர்கள் என்னை சவுக்கால் வாழ்க்கை முழுவதும் அடிப்பார்கள், ஆனால் நான் முதலில் உங்களைக் கொன்றுவிடுவேன்” என்றான்.

“அவர் தன் எதிரியைப் பார்க்கும்போது கோபத்தால் நடுக்கமுற்றார். அவர் தன் கையை விடுவித்துக் கொண்டு “எனக்கு இங்கிருந்து தப்பித்து செல்ல ஆசையில்லை. நீ என்னை கொல்ல தேவையில்லை, நீ என்னை முன்பே கொன்றுவிட்டாய், நான் ஒருவேளை நீ கூறியபடி நடக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அது கடவுள் வழிநடத்துவதைப் பொருத்தது.” என்று கூறினார்.

அடுத்த நாள், கைதிகள் வேலைக்காக வெளியே சென்றதும், படைவீரர், கைதிகளில் ஒரு சிலர் மணலை தங்கள் காலணியிலிருந்து வெளியே கொட்டுவதைக் கவனித்தார். சிறையில் தேடப்பட்ட அந்த சுரங்கம் கண்டறியப்பட்டது. ஆளுநர் அங்குள்ள அனைத்துக் கைதிகளிடமும் யார் இதைத் தோண்டியிருப்பார் என்று அறிந்துகொள்ள விசாரணை நடத்தினார். அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர் ஏனெனில் அவற்றைக் கூறினால் செம்யோனிச்சுக்குச் சாகும் வரை சவுக்கு அடி விழும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இறுதியாக ஆளுநர் அக்சியோநவ்விடம், “நீங்கள் உண்மையான (அ) நேர்மையான முதியவர், கடவுள் சாட்சியாக யார் இந்த குழியைத் தோண்டியது?” என்று என்னிடம் கூறுங்கள் என்றார்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

மகர் செம்யோனிச் கவலையுற்றவனாய், ஆளுநரை பார்த்துக்கொண்டே அக்சியோநவ்வை நோக்கியபடி நின்றுக்கொண்டிருந்தார். அக்சியோநவ்வுடைய உதடுகள் மற்றும் கைகள் நடுங்கின, நீண்ட நேரத்திற்கு அவர் எதுவும் கூறவில்லை. “எதற்காக என் வாழ்க்கையை அழித்தவனைக் காட்டிக் கொடுக்க வேண்டும்?

நான் பட்ட கஷ்டத்துக்கு ஈடுகொடுக்கமுடியுமா?, ஆனால் நான் கூறினால் அவன் வாழ்க்கை முழுதும் சவுக்கு அடி பெறுவான், நான் அவனை தவறாகவும் கணித்திருக்கலாம் மற்றும் இதனால் நான் பெறும் பயன் என்ன?” என்று நினைத்தார்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits 4

“நல்லது, பெரியவரே, என்றுரைத்தார் ஆளுநர்,” “உண்மையை என்னிடம் கூறுங்கள் யார் சுவற்றின் அடியில் குழியைத் தோண்டினார்?”

அக்சியோநவ் மகர் செம்யோனிச்சைப் பார்த்துவிட்டு பின்னர் கவர்னரிடம், “என்னால் கூற முடியாது, யுவர் ஆனர். நான் கூறுவது இறைவனின் விருப்பமன்று” என்றார்.

எவ்வளவு ஆளுநர் முயன்றும், அக்சியோநவ் ஒன்றும் கூறவில்லை. ஆகையால் அந்த விசாரணை கைவிடப்பட்டது.

அன்றிரவு, அக்சியோநவ் தன் படுக்கையில் படுத்திருந்தபோது யாரோ ஒருவர் அமைதியாக வந்து அவர் படுக்கையின் மேல் அமர்ந்தார். அவர் இருளில் கூர்ந்து நோக்கி அது மகர் தான் என்பதை உறுதி செய்தார்.

“என்னிடம் இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் அக்சியோநவ். “ எதற்காக நீ இங்கு வந்தாய்?”

மகர் செம்யோனிச் அமைதியாக இருந்தார். அதனால் அக்சியோநவ் எழுந்து, “உனக்கு என்ன வேண்டும்?” அங்கே போ, இல்லையேல் காவலரை நான் அழைப்பேன்” என்று கூறினார்.

மகர் செம்யோனிச் அக்சியோநவ்வை நெருங்கி மெதுவாக “ஐவன் டிமிட்ரிச் என்னை மன்னித்துவிடு” என்று கூறினார். “எதற்காக” என்று கேட்டார் அக்சியோநவ்.

“நான் தான் அந்த வியாபாரியைக் கொன்று அந்த கத்தியை உன் பொருட்களோடு மறைத்து வைத்தேன். நான் உன்னையும் கொன்றிருப்பேன் ஆனால் வெளியிலிருந்து சத்தத்தைக் கேட்டேன். ஆதலால் அந்தக் கத்தியை உன் பையில் மறைத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியே தப்பிச்சென்றேன்” என்றான்.

அக்சியோநவ் அமைதியாக என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தார். மகர் செம்யோனிச் படுக்கையிலிருந்து படிப்படியாக கீழே இறங்கி தரையில் மண்டியிட்டு, “ஐவன் டிமிட்ரிச்” என்றார். அவர், “என்னை மன்னித்துவிடு, கடவுளின் அன்பிற்காக, என்னை மன்னித்துவிடு. நான் தான் அந்த வியாபாரியைக் கொன்றேன் என்று சொல்லி விடுகிறேன், நீ விடுதலைச் செய்யப்பட்டு உன் வீட்டிற்குச் செல்வாய்” என்றான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

“இதைப் பேசுவதற்கு உனக்கு எளிமையாக இருக்கும்,” என்றார் அக்சியோநவ், “ஆனால் நான் உன்னால் இதற்காக இருபத்தாறு ஆண்டுகள் சிறையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நான் இப்பொழுது எங்கு செல்வது? எனது மனைவி இறந்துவிட்டாள். எனது குழந்தைகள் என்னை மறந்துவிட்டனர். எங்கும் என்னால் செல்ல முடியாது ………….”

மகர் செம்யோனிச் எதுவும் கூறவில்லை. ஆனால் தன் தலையைத் தரையில் அடித்துக்கொண்டான். “ஐவன் டிமிரிச், என்னை மன்னித்து விடு என்று கத்தினார். அவர்கள் என்னை சவுக்கால் அடிக்கும்போது கூட இவ்வளவு வலியில்லை, ஆனால் உங்களை இந்நிலையில் பார்ப்பது வலிக்கிறது. இதுவரையிலும் உங்களுக்கு என்மேல் இரக்கமிருக்கிறது. கிறிஸ்துவின் பொருட்டு என்னை மன்னியும், துரதிஷ்டசாலி நான்” என்று சொல்லி அவன் அழத் தொடங்கினான்.

எப்போது அக்சியோநவ் மகர் அழுவதைக் கேட்டாரோ, அவரும் அழத் (sobbing) தொடங்கினார், “கடவுள் உன்னை மன்னிப்பார்” என்றார் அவர். “உன்னை விட நூறுமடங்கு துரதிஷ்டசாலி நானாக இருக்கலாம்” இவ்வார்த்தைகளில் அவரின் இதயம் ஒளிமிளிர்ந்தது. வீட்டின் ஏக்கத்தைப் பிரதிபலித்தது. அவருக்கு அந்த சிறையிலிருந்து செல்வதற்கு விருப்பமில்லை , ஆனால் அவர் தனது இறுதி நேரத்திற்காகக் காத்திருந்தார்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

அக்சியோநவ் என்ன சொன்னபோதிலும், மகர் தன் குற்ற உணர்ச்சியால் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டான். ஆனால் சிறையிலிருந்து வெளிவருவதற்கான ஆணை வரும் பொழுது, ஏற்கனவே அக்சியோநவ் இறந்திருந்தார்.


God Sees the Truth But Waits Poem Summary in English

Here we have uploaded the God Sees the Truth But Waits Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


The story is about the loyalty, forgiveness, freedom and legitimacy of a young businessman named Axionov. He is imprisoned for a crime he did not commit.

A young merchant lived in the city of Vladimir. His name is Ivan Dmitrich Aksionov. He owned a house and two shops.

Axionov is beautiful. Wavy curl-like hair with beautiful hair. He is a man of humor. Who is passionate about singing. If this quiet man gives you a drink, he will keep drinking until he breaks the rules. But he gave up his drinking habit after marriage.

One summer Aksyonov went to the Nizhny Fair. Saying goodbye to his family, his wife said, 'Ivan Dmitrich, do not go today because I had a bad dream about you.'

Axionov replied, 'Are you afraid I'm going to have a merry-go-round when I go to the exhibition?' He said with a smile. His wife replied, 'I do not know what I am afraid of. All I knew was about that nightmare. In my dream, when you leave the city you take off your hat and I see your hair is gray. ”

Aksyonov laughed. 'It's a sign of luck,' he said. 'Look, I'm not selling my stuff, but I'll bring you presents from there.'

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

So he said goodbye to his family. As he was walking halfway, Aksyonov met a merchant whom he knew. They had booked the same inn (inn) to stay that night. They both drank tea together. Then they went to bed.

Going to bed late at night and traveling in the cold is not Axionov's habit. He told his driver to get up before dawn and get his horses ready.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits 2

Then, he went to the owner of his inn, (went to the house on the wall behind the inn and tied up the lodge fee and continued his journey.

After going twenty-five miles, he stopped to feed the horses. Axionov was rested in a roadside inn. Then he came to the hotel porch and ordered to heat the teapot. He started playing with his guitar.

Suddenly a chariot with three horses locked came with the bell. An officer descended with two soldiers. He came to Axionov and began to ask questions. He asked who he was and when he came here. Axionov said it all, 'Are you having tea with me?' Said.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 1 God Sees the Truth, But Waits

But the officer cross-examined him. Ask him, “Where did you spend last night? Have you ever been alone or with another merchant? Have you ever seen a dealer in the morning? Why did you come out of the hotel before it was too late? He asked.

Aksyonov wondered why so many questions were asked of him. But answered all. He added, 'Why do I have so many cross-examination questions? Am I a thief or a robber? I am traveling for my business and you do not have to question me. '

The officer then called the soldiers and told Axiona, 'I'm the police officer in this district.

They entered the house. Soldiers and a policeman untied Axionov's luggage and searched for him. Immediately the officer took a knife from the bundle. 'Whose is this?' Shouted. Aksyonov was horrified to see a bloodstained knife taken out of his pocket. 'How did this knife bleed?'

Aksyonov tried to respond but could not speak continuously. I do not know இல்லை not mine… .. said stammered (stammered). 'This morning the merchant had his neck cut off on his bed', only you could have done this. The house was locked from the inside and there was no one else there.

Here is a blood stained knife in your bag and your face and face betray you. How did you kill him and how much money did you loot? ” Tell me. ”

Samach


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About God Sees the Truth But Waits Poem Summary in Tamil


How to get God Sees the Truth But Waits Poem in Tamil Summary??

Students can get the God Sees the Truth But Waits Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of God Sees the Truth But Waits Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List