Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Hour of Truth Chapter Summary in Tamil & English Free Online

The Hour of Truth Poem Summary in Tamil PDF
The Hour of Truth Poem Summary in Tamil

The Hour of Truth Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Hour of Truth Poem in Tamil. Also, in this article, we will also provide The Hour of Truth Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Hour of Truth Poem Summary in Tamil please let us know in the comments.


The Hour of Truth Poem Summary in Tamil


Poem

The Hour of Truth Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Hour of Truth Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Hour of Truth Poem Summary in Tamil Post.

The Hour of Truth Poem Summary in Tamil

Students can check below the The Hour of Truth Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


அது ஒரு சூடான (hot) மற்றும் புழுக்கமான (sultry) ஞாயிறு பிற்பகல், சூரியன் செங்குத்தாக தலைக்குமேல் இருந்தது மற்றும் காலுக்கு கீழ் இருக்கும் மண்ணானது இரக்கமற்று (merciless) காணப்பட்டது. தொலைவில், மேகங்கள் தங்களுடைய வெப்பத்திலிருந்து குறைந்து வருவதை உறுதிபடுத்தின. மற்றும் அந்த சிறிய கூடாரத்தின் ஜன்னல் அருகே பால்ட்வின் குடும்பத்தினர் அவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

ஜான், பால்ட்வினின் மகன், 27 வயது மதிக்கத்தக்க ஒரு சாதாரண வாலிபன், ஒரு குழாயை புகைத்து (smoking a pipe) கொண்டு, இந்த நாள் வேறு எந்த நாளையும் விட முக்கியமானது போல் உணர்ந்தான். ஆனால், மார்த்தா, அவனுடைய அம்மா, கடந்த அரை-மணி நேரமாக ஏதோ செய்ய தொடங்கிவிட்டாள்.

மேலும் ஈவ், பால்ட்வினின் மகள், அவளுடைய பதட்டத்தை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை பார்க்கும் போது, வீட்டில் உள்ள அமைதியான சூழ்நிலையை மாற்ற யாரும் முன்வரவில்லை. பத்து நிமிடங்களில் பத்தாவது முறையாக ஈவ் ஜன்னலுக்கு சென்று அந்த புழுக்கமான சாலையை பார்த்து கொண்டிருந்தாள்.

காட்சி : பால்ட்வின் வீடு:

மார்த்தா : அவர் வீட்டில் இருக்க வேண்டிய நேரம், இது.
ஈவ் : ஆமாம், அம்மா.
மார்த்தா : அவர் குடையை மறந்து வந்திருக்க மாட்டார் என நான் நம்புகிறேன், அவருக்கு அதை பின்னால் வைத்து விட்டு வரும் பழக்கம் இருந்தது.
ஈவ் : ஆமாம், அம்மா.
மார்த்தா : கண்டிப்பாக மழை வரும். நீ அப்படி நினைக்கவில்லையா ஈவ்?
ஈவ் : (சிறிய அமைதிக்கு பின்) அம்மா (அங்கு பதில் ஏதுமில்லை அம்மா! (திருமதி.பால்ட்வின் மெல்ல திரும்பினாள்) இவரிடம் இருந்து திரு. கிரஸ்ஹாம்-க்கு என்னதான் வேண்டுமாம்? அவர் ஏதேனும் தவறு செய்துவிட்டாரா?
மார்த்தா : (பொறுமையாக) உங்க அப்பாவா? இல்லை, ஈவ்.
ஈவ் : பின்பு ஏன் திரு. கிரஸ்ஹாம் இவரை வரச் சொல்லிருந்தார்?

நாம் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்வோம்:
வங்கியில் தவறு செய்ததற்காக சந்தேகத்தின் பேரின் கிரஸ்ஹாமை கைது செய்திருக்கின்றனர் என்பதை மார்த்தா மற்றும் ஈவ் கேள்விபட்டிருந்தனர். அந்த செய்தியை கேட்டதும் இருவரும் கோபமும் மற்றும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

மார்த்தா : அவர் இவரிடம் பேச வேண்டும் என சொன்னார்.
ஈவ் : எதைப் பற்றி? திரு. கிரஸ்ஹாம் கைதாகிவிட்டார். நாளைக்கு, அவர்கள் அவரை சிறையில் அடைத்துவிடுவர். அவருக்கு அப்பாவிடம் இருந்து என்னதான் வேண்டும்?
மார்த்தா : உன்னுடைய அப்பா தான் சாட்சி சொல்ல வேண்டும்.
ஈவ் :ஆனால், இவர் திரு. கிரேஸ்ஹாமுக்கு எதிராக அல்லவா சாட்சி சொல்ல போகிறார். ஏன் திரு.கிரேஸ்ஹாம் இவரை பார்க்க வேண்டும்?
மார்த்தா : எனக்கு தெரியாது, ஈவ், உங்க அப்பா, அவருடைய தொழில் சம்பந்தபட்ட விஷயத்தை சொல்ல மாட்டார் என்பது உனக்கு தெரியும் (அவர் மொளனமாக இருந்தாள்).

வங்கியில் தவறு நடந்ததை செய்திதாளில் பார்க்காதிருந்தால் எனக்கும் தெரிந்திருக்காது. உன் அப்பா என்னுடைய பணத்தை எடு என்று சொன்னதே கிடையாது. அது திரு. கிரேஸ்ஹாம்க்கு விசுவாசமாக இருக்காது என அவர் எண்ணினார். (ஈவ் தலையசைத்தாள்). அவருடைய விருப்பத்திற்கு மாறாகத்தான் நான் இதை செய்தேன், என நான் சந்தேகிக்கிறேன்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

ஈவ் : (சிறிய அமைதிக்கு பின்) அதை…. அதை வைத்துக் கொண்டு அப்பா எதுவும் செய்யவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள் (அவள் அதைப்பற்றி பேச விரும்பவில்லை).
மார்த்தா : வங்கியின் திவால் ஆன நிலை என்ன? உனக்கு அதைவிட அவரை நன்றாக தெரியும், ஈவ்.
ஈவ் : ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது அவருக்கு தெரியாது. அல்லவா?
மார்த்தா : (சிறிய அமைதிக்கு பின்) ஈவ், உன்னுடைய அப்பா அவருடைய வாழ்க்கையில் இதுவரை எந்த தவறும் செய்ததாக நான் நம்பவில்லை , ஏனென்றால் அது தவறு என்று அவருக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம். அவர் தற்செயலாக இதை கண்டுபிடித்துள்ளார். திரு.கிரஸ்ஹாம் என்ன செய்து கொண்டிருந்தார் என கண்டுபிடித்துள்ளார்.
ஈவ் : உங்களுக்கு எப்படி அது தெரியும்?
மார்த்தா : எனக்கும் தெரியாது. அவர் சொன்ன சிலவற்றை வைத்து சந்தேகிக்கிறேன். இங்க பாரு ஈவ், அவர் எந்த தவறும் செய்திருக்க மாட்டார்.

ஈவ் : (மெதுவாக) இல்லை. அவர்கள் அவரை குற்றம் சாட்டவில்லை. ஏனென்றால் திரு. கிரஸ்ஹாம்க்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் என்று அவர் நினைக்கிறார்கள். அதுதான், கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது,
அம்மா.
ஜான் : இங்க பாருங்க அம்மா, கிரஸ்ஹாம்க்கு நம் தலைவரிடத்தில் என்ன வேண்டும்?
ஈவ் : நானும் அதைப்பற்றி தான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.
மார்த்தா : எனக்கு தெரியவில்லை, ஜான்.
ஜான் : நீங்கள் அவரிடம் கேட்கவில்லையா?
மார்த்தா : ஆமாம் அவரிடம் கேட்டேன், அவர் எதுவும் சொல்லவில்லை , ஜான் (ஆர்வத்துடன்) அவருக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை.
ஜான் : (ஒரு சிறிய சிந்தனைக்கு பின்) நேற்று, நான் அங்குள்ள உதவி காசாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
ஈவ் : டோனோவன்?
ஜான் : ஆமாம், டோனோவன் நான் அவரை தடகள சங்கத்தில் சந்தித்தேன். அந்த வியந்து வரும் வரை யாருக்கும் எந்த சிந்தனையும் இல்லை என அவர் சொன்னார். எட்டு வருடங்களாக, டோனோவன் அங்கு தான் வேலை செய்கிறார். தன்னுடைய பாதி வாழ்க்கை இந்த வேலை பார்த்து கொள்ளும் என நினைத்திருந்தார். இதை வைத்து திருமணமும் செய்து கொண்டார். அதற்கு பின், காலையில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

திரு. கிரஸ்ஹாம் கைதுக்கு அப்புறம், டோனோவன் என்ற மற்றொரு வங்கி ஊழியரும் தன்னுடைய வேலையை இழந்துவிட்ட செய்தியை ஈவ் மற்றும் மார்த்தா கேள்விபட்டனர்.

ஈவ் : அப்பாவும்.
ஜான் : தலைவருக்கும் இது தெரிந்திருக்கும் என அவர் சொன்னார். அவர் உறுதியாக சொல்வார் வேறுயாரும் செய்திருக்க மாட்டார் என்று. இங்க பாருங்க, மற்றவர்களைவிட அப்பா, கிரஸ்ஹாம் உடன் நெருக்கமாக இருந்தார். அது தான் அவரை ஒரு நல்ல இடத்தில் வைத்தது, இல்லையா?
மார்த்தா : நீ என்ன சொல்கிறாய், ஜான்?
ஜான் : ஜான் கிரஸ்ஹோமுக்கு எதிராக இருக்கும் ஒரே சாட்சி அப்பாதான், அவருடைய அடுத்த பெயர் தான் எனக்கும் வைக்கப்பட்டது! உங்களுக்கு சேவை செய்ய தான் இந்த ஜான் கிரஸ்ஹாம் பால்ட்வின்!
மார்த்தா : உங்க அப்பா அவருடைய வேலையை செய்வார் ஜான், அதனால் என்ன வந்தாலும் பரவாயில்லை.
ஜான் : (உடனடியாக) அது எனக்கும் தெரியும். எது சரி என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. (இருவரும் அவனை ஏதோ கேள்வி கேட்பதை போல் பார்த்தனர்). இருபது வருடத்தில் பணக்காரரான ஜான் கிரஸ்ஹாம் இருக்கிறார், மற்றும் அவருக்கு செயலாளராக இருந்தது, நம் தலைவர் வாரம் அறுபது டாலர் பெறுகிறார்!

மார்த்தா : உன்னுடைய அப்பா ஒருபோதும் குறை சொல்லியதில்லை.
ஜான் : இல்லை, அது அவர் மீது கொண்ட இரக்கத்தினால் இருக்கும். அவர் குறை சொல்லியதில்லை. நன்று, அவருடைய வாய்ப்பு நாளை இருக்கின்றது. அவர் அந்த கூண்டிற்கு செல்வார் மற்றும் அவர் சொல்வதை வைத்து, இனிமேல் வேறயாரையும் காயப்படுத்த முடியாத ஓரிடத்தில் அவரை வைத்துவிடுவர். தன்னுடைய ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தும் திருப்தியடையாதவர், தன்னுடைய பங்குதாரர்களை சூறையாடி நினைப்பவர் நல்லது!
(அங்கே இருக்கும் latch key-ல் சத்தம் கேட்டது. ஈவ் கதவை நோக்கி நடந்தாள்).
ஜான் : ஹலோ, அப்பா!
பால்ட்வின் : என்னுடைய குழந்தாய்? நீ எப்படி இருக்கிறாய்? (ஜானுடன் தன் கையை குலுக்கினான்) ஈவ்…. (அவர் அவளை முத்தமிட்டார்).
ஜான் : நல்லது, அப்பா? நீங்கள் எங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டிய நேரம் இது என்று நீங்கள் நீனைக்கிறீர்களா? பால்ட்வின் : ஏதாவது சொல்ல வேண்டுமா? எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஜான்.
ஜான் : மக்கள் உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பேசுகின்றனர்.

இன்னும் நிறைவாக நாம் புரிந்து கொள்வோம்:
வங்கியில் வேலை பார்க்கும் இன்னொரு மூத்த நபர், பால்ட்வின், ஜான் மற்றும் ஈவின் தந்தை, மேலும் மார்த்தாவின் கணவர், இருப்பினும் நேர்மையானவராக நம்பப்படுகிறது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

பால்ட்வின் : எந்த மாதிரியான விஷயம், ஜான்?
ஜான் : நீங்களே கற்பனை செய்து பாருங்கள், அந்த விஷயத்தைப் பற்றி. என்னால் அவர்கள் கூறுவதை மறுத்து பேச முடியவில்லை.
பால்ட்வின் : ஏன் முடியாது, ஜான்?
ஜான்: ஏனென்றால் எனக்கும் தெரியாது?
பால்ட்வின் : உனக்கு அதைப்பற்றி தெரிய வேண்டுமா? உன் தந்தையைப் பற்றி அறிந்து கொண்டது இதுதானா?
ஜான் : (சிறிய அமைதிக்கு பின்) நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன், ஐயா.
பால்ட்வின் : இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னாடி தான் கிரஸ்ஹாம் என்ன செய்து கொண்டிருந்தார்
என்பதை கண்டு பிடித்தேன். (அவர் அமைதியாய் இருந்தார். அவர்கள் தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தனர்). நான் அவரிடம் நல்லது செய்ய வேண்டும் என்று சொன்னேன். அவர் முடியாது என்று கூறிவிட்டார்.

ஈவ் : அதற்கு அப்புறம் என்ன நடந்தது?
பால்ட்வின் : முடிந்த அளவிற்கு நல்லதை செய்யுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். முதல் வேலையாக இந்த வங்கியை மூடுங்கள் ஆனால் அவர் அதை செய்யவில்லை.
மார்த்தா : ஆனால் அவர் அதை செய்திருக்கிறார்.
பால்ட்வின் : நான் தான் அதை செய்ய சொன்னேன். அவர் கோபமாக, மிகவும் கோபமாக இருந்தார், ஆனால் அவருடைய பிடி என் கையில் இருந்தது.
ஈவ் : அது செய்திதாளில் வரவில்லை.
பால்ட்வின் : அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கவில்லை.
மார்த்தா : ஆனால், உங்கள் மேலும் சந்தேகம் வந்துள்ளது. பால்ட்வின் : நாளை அது சரியாகி விடும், இல்லையா! (அவர் அமைதி காத்தார்). இன்று, கிரஸ்ஹாம் என்னை வரச் சொல்லிருந்தார். அந்த சோதனை இன்னும் 24 மணி நேரத்தில் தொடங்கிவிடும். அவருக்கு எதிராக இருக்கக்கூடிய சாட்சி நான் மட்டும் தான். அது என்னவென்று உங்களால் கணிக்க முடியுமா…. என்று அவர் கேட்டார்.
ஜான் : (கோபத்துடன்) அவரை காப்பாற்றி கொள்ள உங்களை பொய் சொல்ல சொல்லிருக்கிறார். அவர் உங்களையே பொய் சாட்சி சொல்ல கேட்டு கொண்டாரா?
பால்ட்வின் : அது தேவையிருக்காது ஜான். அவர் என்னுடைய ஞாபக சக்தியை பற்றித்தான் கேட்டிருந்தார். எனக்கு
தெரிந்த எல்லாவற்றையும் நான் சொன்னால், ஜான் கிரஸ்ஹாம் சிறை சென்று விடுவார். அப்புறம் இந்த பூமியில் இருக்க கூடிய எந்த சக்தியாலும் அவரை அதிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் அவர் என்னிடமிருந்து சில முக்கியமான விஷயத்தை மட்டும் கொஞ்சம் மறந்திடுங்கள் என கேட்டு கொண்டார். அவர்கள் என்னிடம் கேள்வி கேட்கும் போது நான் சொல்லவேண்டிய பதில், “எனக்கு ஞாபகமில்லை ”. எனக்கு தெரியும் என்பதை அவர்களால் நிருபிக்கவும் முடியாது. அங்குதான் நீங்கள் இருக்கின்றீர்கள்.

ஜான் : அது ஒரு பொய்யாகும், அப்பா!
பால்ட்வின் : (சிரித்து கொண்டு) ஆமாம். ஆனால் அது ஒவ்வொரு நாளும் செய்யக் கூடியது தானே. அவர்களால் என்னை தொடவும் முடியாது. அவரை குற்றவாளி என்று சொல்லவும் முடியாது.
மார்த்தா : (கோபத்துடன்) எவ்வளவு தைரியம் அவருக்கு, எவ்வளவு தைரியம் இருந்தால் அவர் இப்படி கேட்டிருப்பார்?
ஈவ் : நீங்கள் என்ன சொன்னீங்க, அப்பா?
பால்ட்வின் : (சிரித்து கொண்டே, ஜானை நோக்கி தன் கண்களை உயர்த்தினார்). நன்று மகனே, நீயாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாய்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

ஜான் : சிறைக்கு செல்லுங்கள் என்று நான் சொல்லியிருப்பேன்.
பால்ட்வின் : நானும் அதைத்தான் செய்தேன்…. ஆனால் நீ சொன்ன உன்னுடைய வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை, ஜான் அவர் என்னுடைய பழைய நண்பர். எவ்வாறாயினும் எந்த விஷயத்தை பற்றியும் நான் சொல்லவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஈவ் : அதற்கு அப்புறம் அவர் என்ன சொன்னார்?
பால்ட்வின் : சொல்வதற்கு அங்கே வேறொன்றுமில்லை. இங்க பாரு, அவர் அதற்கு ஆச்சரியப்படவும் இல்லை.
என்னை 35 வருடங்களாக அவருக்கு தெரியும். (எளிய பெருமையோடு. முற்பதைந்து வருடங்களாக என்னைப்பற்றி தெரிந்து கொண்ட யாரும் உன்னுடைய மனசாட்சி எதிராக இதை செய் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.

கிரஸ்ஹாம் தவிர வேறு யாராக இருந்தாலும், அவனுடைய முகத்தில் அடித்தவாறு சொல்லியிருப்பேன். ஆனால் கிரஸ்ஹாமும், நானும் சிறுவர்கள் முதல் ஒன்றாக இருக்கிறோம், ஒன்றாக வேலை செய்தோம். மேலும், முன்பு தனக்காக ஆரம்பத்தில் ஒரு வங்கியில் இந்நாள் வரை ஒரு ஊழியராக பணியாற்றி வருகிறேன். அவர் நம்பிக்கையை இழந்துவிட்டார் — அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கு தெரியவில்லை – இல்லையென்றால் அவர் எனக்கு பணம் கொடுத்திருக்க மாட்டார்.

நாம் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்வோம் கிரஸ்ஹாம், பால்ட்வின்னை தனக்கு எந்த உண்மையும் தெரியாது என்று சொல்லுமாறு அழுத்தம் கொடுத்தார், ஆனால் பால்ட்வின் அதை செய்ய மறுத்துவிட்டார்.

ஜான் : சீற்றம் கொண்டு பணம் கொடுத்தாரா? அப்பா
பால்ட்வின் : அவர் அவசரத்துக்கு தேவைப்படும் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார். அவர்கள் அவரை குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டால், அவர் அதை எனக்கு கொடுத்துவிடுவார். சட்டம் அவரை சும்மாவிடாது. ஆனால், நான் நாளை வரை உயிரோடு இருந்தால், அவர்கள் அவனை குற்றவாளி என சொல்லிவிடுவர்! பெருமூச்சு விட்டார்). அவருக்கு தண்டனை கிடைப்பதற்கு எனக்கு எந்த ஒரு பங்கும் தேவையில்லை என்பதை கடவுள் மட்டும் அறிந்திருந்தார்.

(அவர் நிறுத்திவிட்டார். ஈவ் மெதுவாக அவளுடைய கையை கொடுத்தாள்). இளைஞர்களே மற்றும் வயதானவர்களே, நான் அவருடன் வேலை செய்திருக்கிறேன் அல்லது என் வாழ்க்கையின் சிறந்த பகுதியும் அவருக்காகத்தான். நான் அவருக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். நான் எப்போதும் அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் எப்போது ஜான் கிரஸ்ஹாம் ஒரு நேர்மையானவராக இல்லையோ ஜான் கிரஸ்ஹாம் மற்றும் நான் பிரிந்து செல்வோம்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

மார்த்தா : மெதுவாக அழுகிறாள்) ராபர்ட்! ராபர்ட்!
பால்ட்வின் : நான் வாழ இன்னும் சில வருடங்கள் தான் இருக்கிறது, ஆனால் என்னுடைய பாதி வாழ்க்கைய எப்படி வாழ்ந்தேனோ! அப்படித்தான் வரும் நாட்களையும் வாழப்போகிறேன். நான் என்னுடைய கல்லறைக்கு சென்று விடுவேன்.
ஜான் : அப்பா….. கிரஸ்ஹாம் உங்களுக்கு என்ன கொடுத்தார்?
பால்ட்வின் : (சாதரணமாக) பத்தாயிரம் டாலர்கள்.
ஈவ் : என்ன ?

பால்ட்வின்னை மயக்கும் பொருட்டு, கிரஸ்ஹாம் மிகப்பெரிய தொகையான நூறு ஆயிரம் டாலர்களை லஞ்சமாக கொடுத்தார், ஆனால் பால்ட்வின் அதை மறுத்து விட்டார்.

மார்த்தா : ராபர்ட்!
பால்ட்வின் : அவர் அதை யாருக்கும் தெரியாமல் எனக்காக ஒதுக்கி வைத்தார். அது அவருடைய தனிப்பட்ட விஷயம்.
அது அவருடைய வாடிக்கையாளர்கள் பணம் இல்லை. அதில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.
ஈவ் : (சந்தேகத்தோடு அவர் நூறு ஆயிரம் டாலர் உங்களுக்கு கொடுத்தாரா?
பால்ட்வின் : ஆம் என்ற ஒற்றை வார்த்தைக்காக அது எனக்கு கிடைத்திருக்கலாம் அல்லது என்னுடைய தலையை அசைப்பதற்கு அல்லது?
ஜான் : அவர் அதைத்தான் நினைக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
பால்ட்வின் : அவருடைய வார்த்தையில் தெளிவு இருந்தது.

ஜான் : இப்போ கூடவா?
பால்ட்வின் : அவர் ஒருபோதும் என்னிடம் பொய் பேசியது கிடையாது, ஜான் (நிறுத்தினார்). நான் உணராத ஒன்றை
என் கண்கள் காட்டி கொடுத்திருக்கலாம். அதை அவர் கவனித்தார். அவர் ஒரு பெட்டியை திறந்து மற்றும் அந்த நூறு ஆயிரத்தை என்னிடம் காண்பித்தார்.
ஜான் : பணமாகவா?
பால்ட்வின் : ஆயிரம் டாலரில், அது உண்மையானது, நான் அதை பரிசோதித்தேன்.
ஜான் : (மெதுவாக) அதற்காகத்தான் உங்களை “எனக்கு ஞாபகமில்லை” என்று சொல்லுமாறு கேட்டிருக்கிறார்.
பால்ட்வின் : அதற்காகத்தான், மூன்று வார்த்தைகள் மட்டும்
ஜான் : ஆனால் உங்களால் முடியாதா?
பால்ட்வின் : (தலையை அசைத்து கொண்டு. நான் அதை சொல்ல முயற்சி செய்தால், அந்த வார்ததைகள் என்னை
கொன்று விடும். ஒருவேளை, சில மனிதர்களுக்கு அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எனக்கு? என்னுடைய கடந்த காலங்கள் எல்லாம் எழுந்து வந்து என் முகத்தில் அடிக்கும். நான் இத்தனை வருடங்கள் ஒரு பொய்யான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறேன் என்று இந்த உலகம் நினைக்கும்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

நான் முன்பு இருந்த மாதிரி கௌரவமான மனிதர் அல்ல என நினைத்தேன். ஜான் கிரஸ்ஹாம் பணத்தை கொடுக்கும் போது, நான் கோபப்பட்டேன், ஆனால் அதை நான் மறுத்தபோது, அவர் ஆச்சரியப்படவில்லை, பின்பு தான் அமைதியானேன். இது ஒரு வெகுமானம் தான், நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?

இந்த நேரத்தில், லஞ்சம் வாங்குவதற்கு பால்ட்ன்னை சமாதானப்படுத்துவது முடியுமா என்று பால்ட்வின் புரிந்து கொண்டார்.

ஜான் : (மெதுவாக) மாறாக இது விலை உயர்ந்த பரிசு தான்.
மார்த்தா : ம்ம்?
ஜான் : ஒரு நூறு ஆயிரம் டாலரை பரிசாக கொடுத்து இருக்கிறார்.
பால்ட்வின் : நூறு ஆயிரம் மதிப்புள்ள ஒரு வெகுமானம். என்னுடைய வாழ்க்கையில் , அவ்வளவு பெரிய தொகை என்னிடம் இருந்திருக்க முடியாது, ஆனால் என்னிடம் இருந்தால், நான் அதை செலவழிக்க ஒரு சிறந்த வழியைக் கூட என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
ஜான் : (மெதுவாக) ஆமாம், நானும் அதைத்தான் நினைக்கிறேன்.
மார்த்தா : (ஒரு சிறிய தாமதத்திற்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுமா ராபர்ட்.
பால்ட்வின் : (உறுதியாக) நூறு சதவீதம், வாடிக்கையாளர்கள் எதுவும் இழக்கமாட்டார்கள். நானும் மற்றும் கிரஸ்ஹாம்
அந்த அழிவு நேரத்தில் சிலவற்றை சேமித்து வைத்தோம். நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகத்தான் இருந்தது. கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகம்-கிரஸ்ஹாம் வைத்திருப்பதும் போதுமானதாகும்.
ஈவ்: அந்த நூறு ஆயிரம் இல்லாமலா? (பால்ட்வின் பதில் பேசவில்லை).
ஜான் : (விடாப்பிடியாக) கிரஸ்ஹாம் உங்களுக்கு தனியாக எடுத்து வைத்தது இல்லாமலா?

பால்ட்வின் : ஆமாம், இன்று வரை, அந்த நூறு ஆயிரம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. கிரஸ்ஹாம் என்னிடம்
சொல்லவில்லை. அது இல்லாமல் தான் நாங்கள் கணக்கிட்டோம்.
ஈவ் ஜான் : எது நடந்தாலும் சந்திக்க தயாராகிவிட்டீர்களா?
பால்ட்வின் : மிகவும் எளிதாக. (சிரித்தார். திரு.மார்ஷல் என்பவர் மறுசீரமைப்பை நடத்துகிறார். மூன்றாவது தேசிய
தலைவர் திரு. மார்ஷல் அது நன்றாக வரும் என்பதில் குறைந்த மதிப்பு வைத்திருந்தார். (அங்கே அமைதி காணப்பட்டது.

ஜான் மற்றும் ஈவ் கிரஸ்ஹாம் கொடுக்கும் மிகப்பெரிய தொகைக்கு ஆசைப்பட்டனர். அவர்கள் பால்ட்வின்னுக்கு லட்சம் கொடுப்பதை நியாயப்படுத்த முயற்சி செய்தனர்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

ஜான் : அவர்கள் கிரஸ்ஹாமை தண்டிக்க போகிறார்கள். அவர்கள் இல்லையா?
பால்ட்வின் : எனக்கும் அதைப்பற்றி பயம் உள்ளது.

ஜான் : எதற்காக?
பால்ட்வின் : பணத்ைைத தவறாக பயன்படுத்தியதற்காக……
ஜான் : (குறுக்கிட்டான்) ம்ம்… எனக்கு அது தெரியும், ஆனால் அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்?
பால்ட்வின் : அதுதான் குற்றம், ஜான்.
ஈவ் : ஆனால், யாரும் அதனால் எதுவும் இழக்கவில்லை.
பால்ட்வின் : இருப்பினும் அது ஒரு குற்றம்.
ஜான் : அதற்காகத்தான், அவரை தண்டிக்க போகிறார்கள்.
ஈவ் : (தயக்கத்துடன்) இது ஒரு பயங்கரமான விஷயமா? அப்பா, நீங்கள் அவரை விட்டுவிட்டாள்.
பால்ட்வின் : (சிரித்து கொண்டு நானும் அதைத்தான் விரும்புகிறேன், ஈவ் ஆனால், நான் நீதிபதி அல்ல.
ஈவ் : இல்லை, ஆனால்…. அவருக்கு எதிரான ஒரே சாட்சி நீங்கள் தான்.
ஜான் : (மௌனமாய்) ஈவ்!

உங்கள் நண்பரான கிரஸ்ஹாம் பெயரைத் தான் எனக்கு வைத்தீர்கள், ஒரு குற்றவாளியின் பெயரை தனக்கு வைத்ததிற்கு அவன் வெட்கப்படுவான்.

ஜான் : அவள் சொல்வது சரிதான், தலைவரே.
பால்ட்வின் : ஜான், நீயுமா?
ஜான் :கிரஸ்ஹாமை சிறையில் அடைத்தால், அது ஒரு மோசமான குழப்பத்தை உண்டு பண்ணும் அவருடைய பெயரைத்தான் உங்களுடைய சொந்த மகனுக்கு வைத்துள்ளீர்! அது எனக்கும் ரொம்ப இனிமையாக இருக்கும்! ஜான் கிரஸ்ஹாம் பால்ட்வின்.
மார்த்தா : (சிறிது நேரம் கழித்து) ராபர்ட், நீங்கள் முன்பு என்ன சொன்னீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. திரு கிரஸ்ஹாம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்?
பால்ட்வின் : நாளை அவரை வெளியேற்ற வேண்டும். மார்த்தா : உங்களால் அதை செய்ய முடியாதா?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)
பால்ட்வின்: முடியும்.
மார்த்தா: எப்படி?
ஜான் : அவர்கள் என்னிடம் ஆபத்தான கேள்வியை கேட்கும் போது, எனக்கு ஞாபகம் இல்லை’ என்று பதில் கூற வேண்டும். மார்த்தா : அப்படியா! மேலும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
பால்ட்வின் : ஆமாம், கிட்டதட்ட எல்லாமே.
ஜான் : அவர்கள் என்ன கேட்டாலும் பரவாயில்லையா.
பால்ட்வின் : நான் எப்போதுமே என்னுடைய நினைவை புதிப்பித்து கொண்டிருப்பேன். இங்க பாருங்க, என்னிடம் குறிப்புகள் உள்ளது.
ஜான் : ஆனால் அந்த குறிப்புகள் இல்லாமல் உங்களால் ஞாபகப்படுத்த முடியாது.
பால்ட்வின் : என்ன சொல்ற, ஜான்?
ஜான் : உண்மையில் ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் முற்றிலும் குறிப்புகளை சார்ந்துதான் இருக்கிறீர்கள், அல்லவா? பால்ட்வின் : எல்லோரும் ஒரே விஷயத்தைத் தான் செய்கிறார்கள்.
ஜான் : ‘எனக்கு ஞாபகம் இல்லை’? என்று நீங்கள் சொன்னால், அது சத்தியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்காது. மார்த்தா : திரு.கிரஸ்ஹாம் உங்களிடம் இருந்து அதிகமாக கேட்கவில்லை என நான் பார்க்கிறேன்.
பால்ட்வின் : மார்த்தா!
மார்த்தா : ராபர்ட் ! நானும் உங்களை போல் நேர்மையானவள் தான்……

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)
மார்த்தா : பழைய நண்பரை சிறைக்கு அனுப்புவது எனக்கும் சரியாகப்படவில்லை. ராபர்ட், நானும் அதைத்தான் நினைத்து கொண்டிருக்கிறேன். ஜானுக்கு ஞானஸ்தானம் கொடுத்த நாளன்று திரு.கிரஸ்ஹாம் அவனுக்கு ஆதரவாக இருந்தார், நமக்கெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது ! நாம் தேவாலயத்திலிருந்து திரும்பிய பின், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா, ராபர்ட்?
பால்ட்வின் : இல்லை, என்ன அது?
மார்த்தா : நம் மகன் எப்பொழுதும் நாம் அவனுக்கு வைத்த பெயருடனே வாழ வேண்டும் என்று சொன்னீர்கள்! அது ஞாபகம் இருக்கிறதா?

பால்ட்வின்னின் மனைவி, மார்த்தா, பால்ட்வின், அவருடைய நெருங்கிய நண்பரை காட்டி கொடுத்துவிடுவார் என உணர்ந்தாள் மற்றும் ஜானுக்கு மனஉளைச்சல் எற்படும் என உணர்ந்தாள்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

பால்ட்வின் : ஆமாம் – கொஞ்சம்
ஜான் : ஹா ! கொஞ்சம்தானா, தலைவரே?
பால்ட்வின் : நீ என்ன சொலகிறாய், ஜான்?
மார்த்தா : (ஜானுக்கு பதில் சொல் எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை அது சோகமாக இருக்கும் – மிகவும் சோகமாக.
ஜான் கிரஸ்ஹாம் என்ற பெயரால், நம் மகனுடைய பெயருக்கு, உங்கள் மூலம் துயரம் வந்துவிடும், ராபர்ட்.
பால்ட்வின் : மார்த்தா, ஜான் கிரஸ்ஹாம் கொடுத்த அந்த லஞ்ச பணத்தை என்னை நீ வாங்க சொல்கிறாயா?
மார்த்தா : ஏன் நீங்கள் அதை லஞ்ச பணம் என்று சொல்ல வேண்டும், அப்பா?
பால்ட்வின் : (கடுமையானது) நிஜமாகவா? அதற்கு ஜான் கிரஸ்ஹாம் அழகான பெயர் வைத்து இருக்கிறார். கடந்த
வருடங்களில் உனக்கு நான் குறைவான சம்பளம் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னார். உனக்கு தெரியும், வாரத்திற்கு அறுபது டாலர் தான். நான் வாங்கி கொண்டிருந்தேன். இந்த சம்பவம்
நடந்தபோது. : (பொறுமையின்றி) ஆமா ! ஆமாம்? அந்த நூறு ஆயிரம், அவர் எனக்கு என்ன பணம் கொடுத்து கொண்டிருந்தார் என்பதையும் மற்றும் அவர் மீது உண்மையில் நான் வைத்திருக்கும் மதிப்பையும் வேறுபடுத்தி காட்டிவிடும்.
மார்த்தா : அது உண்மையைவிட குறைவானதாக இல்லை, ராபர்ட் உண்மையாக, அவருக்கு நீங்கள் வேலை செய்துள்ளீர்கள். பால்ட்வின் : அவர் சொன்னார், நான் எனக்கு என்ன கொடுத்திருக்க வேண்டும் என்பதை கொடுத்திருந்தால், இப்பொழுது இந்த நூறு ஆயிரத்தை விட அதிகமாக கொடுத்திருப்பேன் என்றார்.
ஜான் : அதனால் தான், இல்லையா, அப்பா?
பால்ட்வின் : யாருக்கு தெரியும்? என் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஒருபோதும் கேட்டதில்லை. அவர் சம்பளத்தை உயர்த்தினால், அது அவரது தனிப்பட்ட விஷயம். (அங்கே அமைதி நிலவியது, அவர் சுற்றி பார்த்தார்) நன்று, இதைப் பற்றி என்ன நினைக்கிறாய், ஈவ்?
ஈவ் : (தயக்கத்துடன்) நாளைக்கு, உங்களுடைய நிலைப்பாட்டை பொருத்துதான்…..

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

உங்களுடைய குறைவான ஊதியத்துக்கான இழப்பீடு என்று பால்ட்வினுக்கு கிரஸ்ஹாம் கொடுக்கும் பணத்தை மார்த்தாலும் நியாயப்படுத்தினாள். பால்ட்வின்னை அந்த லஞ்ச பணத்தை வாங்குமாறும் கட்டாயப்படுத்தினாள்.

பால்ட்வின் : நிஜமாகவா?
ஈவ் : மேலும், ஜான் கிரஸ்ஹமை சிறையில் அடைத்ததும் மக்கள் என்ன சொல்வார்கள்!
பால்ட்வின் : நான் என்னுடைய வேலையை செய்துவிட்டேன் என்று அவர்கள் சொல்வார்கள், ஈவ் குறைவாகவும் மற்றும் அதிகமாகவும் இருக்காது.
ஈவ் : அவர்கள் சொல்வார்களா?
பால்ட்வின் : ஏன், அவர்கள் அப்படி என்ன சொல்வார்கள்.
ஈவ் : அதைப்பற்றி நான் ஏதும் நினைக்கவில்லை. நிச்சயமாக, ஆனால் வேறு சிலர், நீங்கள் உங்களுடைய சிறந்த நண்பனுக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என்று சொல்வர்.
பால்ட்வின் : நீ அப்படி நினைக்கவில்லை, தானே ஈவ்!

ஈவ் : அவர்கள் எந்த பணத்தையும் இழக்கவில்லை என்று அவர்கள் கண்டு பிடிக்கும் போதும் ஜான் கிரஸ்ஹாம், எல்லா பணத்தையும் திரும்ப கொடுத்து விடுவேன் என்று அவர்களிடம் சொல்லிய போது, பின் அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பமாட்டார். அவருக்காக அவர்கள் வருத்தப்படுவர்.
பால்ட்வின் : ஆமா, நானும் அதை நம்புகிறேன். நானும் நம்புகிறேன்.
ஜான் : தங்களுக்கு உதவுபவரை சிறையில் அடைக்கும் மனிதனை இரக்கமுள்ளவனாக உணர மாட்டார்கள்.
மார்த்தா : தன் பழைய நண்பனுக்கு எதிராக செய்துவிட்டான் என சொல்வார்கள், ராபர்ட்.

ஜான் : நீங்கள் நீதிமன்றத்தில் உங்களுடைய குறிப்புகளை வெளியே எடுத்தால், அவரை நிச்சயமாக சிறைக்கு அனுப்பிடுவார்கள்! (அவர் ஒரு கோபத்தோடு நிறுத்துகிறான்).
ஈவ் : திரு. கிரஸ்ஹாம் உண்மையில் தவறு எதையும் செய்யவில்லை.
ஜான் : அது ஒரு தொழில்நுட்பமாகும், அது என்னவென்றால் யாரும் ஒரு சதவீதம் கூட இழக்கவில்லை. அவன்
தண்டிக்கப்படுவதை யாரும் பார்க்க விரும்பவில்லை.
ஈவ் : அப்பா, உங்களை தவிர.
ஜான் : ஆமாம், யாருடைய பெயரை உங்கள் மகனுக்கு வைத்தீர்களோ! அந்த மனிதனை சிறையில் அடைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.
மார்த்தா : இரக்கம் காட்டுவீர்கள் என நான் நம்புகிறேன், ராபர்ட்.
பால்ட்வின் : இரக்கமா?

மார்த்தா : திரு. கிரஸ்ஹாம் எப்பொழுதும் தங்களுக்கு நல்லதே செய்துள்ளார். (அங்கே மறுபடியும் அமைதி அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கள் கண்களை பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்). நன்று இப்ப என்ன செய்ய போகிறீர்கள், ராபர்ட்? பால்ட்வின் : நீ என்ன நினைக்கிறாய்?
மார்த்தா : வங்கி மூடிய நாளிலிருந்து வேலையில்லாமல் நீங்கள் இருக்கிறீர்கள்.
பால்ட்வின் : (அவரது தோள்களை உயர்த்துகிறார்) நான் ஒரு இடத்தை கண்டுப்பிடிப்பேன்.

தன்னுடைய நெருங்கிய நண்பரை கிரஸ்ஹாமை காட்டி கொடுப்பதற்கு, ஜான் பால்வினை குற்றம் சாட்டினான். மேலும், பால்ட்வினுக்கு எங்கும் வேலை கிடைக்காது, அதே சமயத்தில் அவன் ஒரு துரோகி என்று நினைப்பார்கள்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

மார்த்தா : (தலையை அசைத்து கொண்டு இந்த வயதிலா?
பால்ட்வின் : முடியாதவன் தான் காரணம் சொல்வான்.
மார்த்தா : ஆமாம், ஒரு மாதத்திற்கு முன்பு அதைத்தான் நீங்கள் சொன்னீர்கள்.
ஜான் : நானும் டோனோவனிடமிருந்து கேள்வி பட்டேன்.
பால்ட்வின் : (உடனடியாக) நீ என்ன கேள்விப்பட்டாய்?
ஜான் : அவர் மூன்றாவது பணக்காரனோடு சென்று விட்டார், உங்களுக்கு தெரியுமா?
பால்ட்வின் : ஆமாம், அவர் மறுசீரமைப்புக்கு உதவுகிறார்.
ஜான் : அங்கே, அவர்கள் உங்களை கூப்பிடவில்லையா.
பால்ட்வின் : அவர்கள் ஊழியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனக்கு கணக்காளர் வேைைலயை அவர்களால் கொடுக்க முடியாது.
ஜான் : அதுதான் அவர்கள் சொன்னார்கள்…… ஜான் கிரஸ்ஹாம் மாதிரி குற்றம் செய்த ஒருவரை தன்னால் வேளையில் அமர்த்த முடியாது என்ற திரு.மார்ஷல் சொன்னார்.
பால்ட்வின் : ஆனால், நான் குற்றம் செய்யவில்லை.
ஜான் : அது யாருக்கு தெரியும்?
பால்ட்வின் : நாளை, அனைவருக்கும் தெரியும்.
ஜான் : அவர்கள் உங்களை நம்புவார்களா? அல்லது உங்களை நீங்களே காப்பாற்றி கொண்டுள்ளீர்கள் என நினைப்பார்களா? பால்ட்வின் : அந்த நிகழ்வு நடப்பதற்கு ஒருநாள் முன்னால் தான் அதை கண்டுபிடித்தேன்.

ஜான் : அதை யார் நம்புவார்கள்?
பால்ட்வின் : அவர்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஜான் : எப்படி அவர்களை நம்பவைப்பீர்கள்? தலைவரே நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு எதிராகத்தான் கண்டுபிடித்தீர்கள் என எனக்கு பயம் வருகிறது. ஜான் கிரஸ்ஹாம்க்கு எதிராக சாட்சி சொல்வதால் வேறு எந்த நல்ல விஷயமும் நடக்காது. உங்களுக்கு வேலையே கிடைக்கவில்லையென்றால், அது அவரால் தான் (இது பால்ட்வின்னுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு திடுக்கிடும் யோசனை). கிரஸ்ஹாம் சிறைக்கு செல்லாவிட்டால், அவர் மறுபடியும் தொழிலை தொடங்கிவிடுவார், அவர் செய்யமாட்டாரா? மேலும் ஒரு பங்குதாரரை தவிர அவர் வேற ஏதும் உங்களுக்கு தரப்பட மாட்டாது.
பால்ட்வின் : ஒரு பங்குதாரராகவா?
ஜான் : (அர்த்தத்தோடு அந்த நூறு ஆயிரம் பணத்தை நீங்கள் ஒரு தொழிலில் போடலாம் அப்பா.
பால்ட்வின் : ஜான்! ஒவ்வொரு முகத்தையும் கூர்மையாக பார்த்தார், அவர்கள் பார்க்கவில்லை). நீ இந்த பணத்தை நான் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? (அங்கு பதில் ஏதும் இல்லை. யாராவது ‘ஆமாம்’ (இன்னும் பதிலில்லை) அல்லது ‘இல்லை’ என்று யாராவது சொல்லுங்கள். (நீண்ட அமைதிக்கு பின்) கிரஸ்ஹாமுடன் கூட்டாளியாக செல்ல மாட்டேன்.
மார்த்தா : (உடனடியாக) எதற்கு.
பால்ட்வின் : மக்கள் அவரை நம்பமாட்டார்கள்.

ஜான் : பின், வேறு யாருடனாவது தொழில் தொடங்க செல்லுங்கள். நூறு ஆயிரம் என்பது ஒரு அதிகமான தொகை, அப்பா. பால்ட்வின் : (ஜன்னலை நோக்கி நடந்தார். வெளியே பார்த்தார்) கடவுளுக்கு தெரியும் இந்நாள் வரும் என்று! நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு தெரியும் – எனக்கு தெரியும், அதற்கு என்ன காரணம் சொன்னாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு தெரியும் நான் இந்த பணத்தை எடுத்தால், நான் நேர்மைக்கு மாறாக ஒரு விஷயத்தை செய்கிறேன். மேலும் உங்களுக்கு அது தெரியுமா! நீ, மற்றும் நீ, மற்றும் நீ! நீங்கள் அனைவரும்! வாருங்கள், வந்து ஒப்புக் கொள்ளுங்கள்.
ஜான் : (தயக்கமின்றி) ஒருவரும் அதைப்பற்றி கேள்விபட்டதில்லை.
பால்ட்வின் : ஜான், ஆனால் நமக்கு மத்தியில்! இந்த உலகத்திற்கு நாம் யாராகயிருந்தாலும் நாம் ஒருவருக்கொருவர்
உண்மையாக இருக்க வேண்டும், நாம் நால்வரும்! (அவனுடைய பார்வை ஜானிடமிருந்து, ஈவிடம் சென்றது, அவள் தலை குனிந்திருந்தாள், அவளிடமிருந்து தன்னுடைய மனைவிக்கு, அவர் தைப்பதில் ஆர்வமாக இருந்தாள். மார்த்தாவின் தலையை உயர்த்தினான், அவளுடைய கண்களை பார்த்தான். அவன் நடுங்கினான்) பொய்யானவர்கள் ! போலியானவர்கள் ! திருடர்கள் ! உங்களில் யாரேனும் நல்லவர் உள்ளனரா! நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை நிர்வானமாக்கினேன், அவர்கள் சர்வவல்லவர் ! நன்று! ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

தன் குடும்பத்தினரின் பேராசை பால்ட்வினை வெட்கப்பட வைத்தது. அவருடைய கண்ணை நேராக பார்க்கும் தைரியம் ஜானுக்குத் தான் இருந்தது. கிரஸ்ஹாம் கொடுத்த பணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பால்ட்வினை வலியுறுத்தினான்.

மார்த்தா : (சரணடைந்தாள்) அது ஒன்றும் தவறவில்லை , ராபர்ட்
பால்ட்வின் : அது சரியானதில்லை.
ஜான் : (அவனை நேராக நிலை நிறுத்திக்கொண்டான்). ஒரு நூறு ஆயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை, அப்பா. பால்ட்வின் : (மெதுவாக தலையாட்டினார்) என் மகனே, இப்பொழுது நீ என்னுடைய கண்களை பார், உன்னால் முடியாதா? ஜான் : (நகராமல்) அப்பா, நீங்கள் ஏன் மறுத்தீர்கள்? அது இல்லை ஏனென்றால் நாங்கள் என்ன சொல்வோம் என்று நீங்க பயப்பட்டீர்கள்?
பால்ட்வின் : (நீண்ட நேர அமைதிக்கு பின்). ஆமாம், ஜான். ஜான் : நன்று, அது யாருக்கும் ஒருபோதும் தெரியாது.
டால்ட்வின் : நம் நால்வரை தவிர்த்து.
ஜான் : ஆமாம், அப்பா. (திடீரென்று அவர்கள் பிரிந்தனர். ஈவ் மெதுவாக அழுதாள். மார்த்தா, உணர்ச்சிவசப்படாமல், தன்னுடைய மூக்கை சத்தமாக சீந்திக் கொண்டு மற்றும் தன்னுடைய பின்னலை விடாமல் இழுந்தாள். ஜான் கோபத்துடன் ஜன்னலருகே சென்றார் மற்றும் பால்ட்வின், நெருப்பிடம் பக்கத்தில், தன்னுடைய கைகளை பிசைந்து கொண்டிருந்தார்) யாரோ வந்து கொண்டிருந்தார்.

பால்ட்வின் தன்னை நினைத்து வெட்கப்பட்டு கொண்டார். திரு. மார்ஷல், மூன்றாம் பணக்காரர், இன்னொரு வங்கியின் தலைவர், ஒரு முக்கிய செய்தியை சொல்ல பால்ட்வின் வீட்டிற்கு வந்திருந்தார்.

மார்த்தா : (தன்னுடைய தலையை உயர்த்தி கொண்டு யாரது?
ஜான் : என்னால் பார்க்க முடியவில்லை (சற்று பயத்துடன்) திரு. மார்ஷல் மாதிரி தெரிகிறது.
பால்ட்வின் : திரு. மார்ஷல்? (அந்த காலிங்பெல் அடித்தது. வாசலை பார்த்து பேசிக்கொண்டே, அவர் ஜன்னல் பக்கம் சென்றார்).
பால்ட்வின் : இதுதான் திரு. மார்ஷல்.
மார்த்தா : மூன்றாவது தேசிய தலைவர்?
பால்ட்வின் : ஆமாம், அவருக்கு, இங்கு என்ன வேண்டும்?
ஈவ் : நான் அவரை உள்ளே அனுப்பலாமா, அப்பா?
பால்ட்வின் : ஆம், ஆம், எல்லா வகையிலும். (ஈவ் வெளியே செல்கிறாள்).
டும் நேர்மையான மற்றும் செம்மையான மனிதராக இருக்கும் பால்ட்வின், தனக்கு ஒருபோதும் பொய் சான்று கொடுக்கமாட்டார் என தெரிந்து, கிரஸ்ஹாம் தன்னுடைய குற்றத்தை ஒப்பு கொண்டார் என்று திரு.மார்ஷல், பால்ட்வினிடம் சொன்னான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

மார்த்தா : (அவரை வேகமாக கடந்தாள்) ராபர்ட் ! நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், நாளைக்கு நீங்கள் தான் நிற்க வேண்டும்.
பால்ட்வின் : (பயத்துடன்) ஆமா, ஆமா, நான் அதைப் பார்த்து கொள்கிறேன். (மார்ஷல்க்காக கதவை திறந்து கொண்டு, ஈவ் உள்ளே வருகிறாள்).
மார்ஷல் : (அறைக்குள் வருகிறார்) நல்லது, நல்லது, மதிய வேளையை உள்ளே கழிக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள், திருமதி. பால்ட்வின்? (அவர் தன் கையை குலுக்குகிறார்) பால்ட்வின், நீங்க?
மார்த்தா : நாங்க வெளியே செல்கிறோம், வா.. ஈவ்.
மார்ஷல் : நான் வந்ததால் நீங்கள் வெளியே செல்ல வேண்டாம். நான் என்ன சொல்ல போகிறேன் என்பதை நீங்களும் கேட்கலாம். (அவர் குடும்பத் தலைவர் பக்கம் திரும்புகிறார், பால்ட்வின் இந்த வாரத்தில் எப்போதாவது Third National பக்கம் வர வேண்டும் என நீங்கள் உணர்ந்தால், உங்களுக்காக காத்து கொண்டிருக்கும். ஒரு பதவியை காணலாம்.
பால்ட்வின் : (இடி விழுந்தது போல்) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? திரு. மார்ஷல்.
மார்ஷல் : (சிரித்து கொண்டு எனக்கு வேண்டாமென்றால் நான் சொல்லியிருக்கவே மாட்டேன். (அவர் தீவிரமாக
தொடர்ந்தார்) இன்று மதியம் கிரஸ்ஹாம்யை பார்க்க சென்றேன். அவர் உங்களுக்கு கொடுத்த பணத்தைப்பற்றி என்னிடம் சொன்னார். நீ அதை தவறு என நினைக்கிறாயோ, அதை எந்த பணத்தாலும் உங்களை செய்ய தூண்ட முடியாது என்பதை அவரும் அறிந்திருந்தார். பால்ட்வின் உங்களுக்கு மிகப்பெரிய தொகையை பரிசாக அளித்தார், அவருக்கு எதிராக உங்களை சோதனைப்படுத்துவதற்கு பதிலாக விசாரணைக்கு செல்வதே மேல் என நினைத்து, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பால்ட்வின் : (நாற்காலி மீது அமருகிறார்) குற்றத்தை ஒப்புக் கொண்டாரா!
மார்ஷல் : எல்லா விஷயத்தையும் சொன்னார். (மார்த்தா பக்கம் திரும்பினார்) நாளை அனைத்து மனிதரும் என்ன சொல்வார்களோ, அதை மட்டும் தான் உன்னிடம் சொல்கிறேன். நான், எவ்வளவு உயர்வாக, மரியாதையாக, உங்கள் கணவரை மதிக்கிறேன்! அவ்வளவு உண்மையாக.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

நேர்மையாக இருந்ததிற்கு, திரு. மார்ஷல் தன்னுடைய The Third International வங்கியில் பால்ட்வின்னுக்கு வேலை கொடுத்தார்.
மார்த்தா : (அவருடைய கையை இரக்கத்தோடு பற்றிக் கொண்டாள்) அவர் அழுவதை நீங்கள் பார்க்கவில்லையா? (திரை மெதுவாக கீழே விழுந்தது) – (சற்று தழுவப்பட்டது).


The Hour of Truth Poem Summary in English

Here we have uploaded the The Hour of Truth Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


It was a hot and sultry Sunday afternoon, with the sun perpendicular to the head and the soil beneath the feet looking merciless. In the distance, the clouds made sure to drop from their heat. And near the window of that little tent Baldwin's family eagerly awaited his arrival.

John, Baldwin's son, a respectable 27-year-old normal young man with a pipe smoking, felt this day was more important than any other day. But Martha, his mother, has been doing something for the past half-hour.

And Eve, Baldwin's daughter, made no effort to alleviate her anxiety. Seeing this, no one came forward to change the quiet atmosphere in the house. For the tenth time in ten minutes Eve went to the window and looked at that bumpy road.

View: Baldwin House:

Martha: It's time for him to be home.
Eve: Yes, Mom.
Martha: I hope he never forgot the umbrella, he had a habit of leaving it behind.
Eve: Yes, Mom.
Martha: It's definitely going to rain. Don't you think so, Eve?
Eve: (After a short silence) Mom (there's no answer Mom!
Martha: (patiently) Your father? No, Eve.
Eve: Then why Mr. Did Grossham invite him?

We will learn more:
Martha and Eve had heard that Grossham had been arrested on suspicion of bankruptcy. Both were angry and shocked when they heard the news.

Martha: He said he wanted to talk to her.
Eve: About what? Mr. Grossham was arrested. Tomorrow, they will imprison him. What does he want from Dad?
Martha: Your father is the witness.
Eve: But, this is Mr. The witness is going to testify against Gresham. Why should Mr. Grossham see him?
Martha: I do not know, you know, Eve, your father would not say anything about his profession (he was dumb).

I would not have known if I had not seen in the newspaper what went wrong in the bank. Your father never told me to take my money. It was Mr. He thought he would not be loyal to Grossham. (Eve nods). I suspect I did this against his will.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

Eve: (after a short silence) it. You think Dad did nothing to keep it (she doesn't want to talk about it).
Martha: What is the bankruptcy of the bank? You know him better than that, Eve.
Eve: But he doesn't know what's going on. Isn't it?
Martha: (After a short silence) Eve, I do not believe your father has ever done anything wrong in his life because he may not have even known it was wrong. He accidentally discovered this. Find out what Mr. Grossham was doing.
Eve: How do you know that?
Martha: I don't know either. I doubt he kept some of what he said. Look here Eve, he would not have made any mistake.

Eve: (slowly) No. They did not blame him. Because Mr. He thinks he should testify against Grossham. That's a little comforting,
Mom.
John: Look here Mom, what does Grossham want in our leader?
Eve: I've been hearing about that too.
Martha: I do not know, John.
John: Didn't you ask him?
Martha: Yes I asked him, he said nothing, I do not think John (curiously) knew about it to him.
John: (After a little thought) Yesterday, I was talking to the assistant cashier there.
Eve: Donovan?
John: Yes, Donovan I met him at the Athletic Association. He said no one had any thoughts until that was wondered. For eight years, Donovan has been working there. He thought he would take care of this job for half his life. With this he got married. After that, there was a knock on the door in the morning. It was a pleasant surprise.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 3 The Hour of Truth (Play)

Mr. Shortly after Grasham's arrest, Eve and Martha heard the news that another bank employee, Donovan, had lost his job.

Eve: Daddy too.
John: He said the leader would have known this too. He will say for sure that no one else would have done it. Look here, Dad was closer to Grossham than the others. That’s what put him in a good place, right?
Martha: What are you saying, John?
Ja


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Hour of Truth Poem Summary in Tamil


How to get The Hour of Truth Poem in Tamil Summary??

Students can get the The Hour of Truth Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Hour of Truth Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List