Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Remember Caesar Chapter Summary in Tamil & English Free Online

Remember Caesar Poem Summary in Tamil PDF
Remember Caesar Poem Summary in Tamil

Remember Caesar Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Remember Caesar Poem in Tamil. Also, in this article, we will also provide Remember Caesar Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Remember Caesar Poem Summary in Tamil please let us know in the comments.


Remember Caesar Poem Summary in Tamil


Poem

Remember Caesar Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Remember Caesar Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Remember Caesar Poem Summary in Tamil Post.

Remember Caesar Poem Summary in Tamil

Students can check below the Remember Caesar Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.



திருமதி. வெஸ்டன் : இல்லை, நிச்சயமாகவே இல்லை. இன்று நீங்கள் வீட்டைவிட்டு வெளியே போகமாட்டீர்கள். அழகிய லேசான விருந்து மற்றும் ஒரு டம்ளர்….

வெஸ்டன் : நான் எல்லாக் கதவுகளையும் வழியையும் அடைத்து தடைசெய்ய ரோஜர்-ஐ அனுப்பியுள்ளேன். தரைதளத்தையும் மூடுவது புத்திசாலிதனம் என்று நான் நினைக்கின்றேன். அவைகள் யாருக்காகவும், திறக்கப்படாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திருமதி. வெஸ்டன் : பிரெஞ்சுக்காரர்களையும். டச்சுக்காரர்களையும் ஒரு சேர நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா? இது காலை நேரம். திரு. காம்மென்ஸ்-ஸின் பையன் மளிகைப் பொருட்கள் கொண்டு வருவான். நான் எப்படி வாங்குவது)…..

வெஸ்டன் : உனக்கு, உன் கணவனின் உயிரைவிட சிறிதளவு மிளகு பெரியதா, அன்பே?

திருமதி. வெஸ்டன் : இது சிறிதளவு மிளகு அல்ல. பெருமளவு மாவு. ரொட்டி பற்றாக்குறையாகிவிட்டால், குழம்பு தண்ணீர் மாதிரி இருந்தால் நீங்கள்தான் குறை கூறுவீர்கள். (காகிகத் துண்டை அவரிடம் திரும்பக் கொடுத்து இந்த சிறிய காகிதத் துண்டு உங்களைத்தான் குறிக்கின்றது என எப்படி தெரியும்?

வெஸ்டன் : ஏனெனில் அது என் பாக்கெட்டில் இருந்தது. என் புகைக்குழாயைப் பற்ற வைக்க ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இதை நான் கண்டேன். (பொருள்பட) அங்கே (பையில்) ஓட்டைகள் இல்லை.

திருமதி. வெஸ்டன் : ஓட்டைகள் இல்லையா. பின்னே என்ன மறுபடியும்? ரிச்சர்ட் நீங்கள் அளவுக்கு மீறி புகைக்கிறீர்கள்.

வெஸ்டன் : (அவசரமாகத் தொடர்ந்து) நேற்று என்னை உரசிக் கொண்டு போன மனிதனால் இது என் பாக்கெட்டில் நழுவவிடப்பட்டது. ஒரு கருத்த ஒல்லியான கெட்ட முகமுடைய மனிதன்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

திருமதி. வெஸ்டன் : அவன் மிகவும் தீமையானவன் என்று நான் கருதவில்லை.

வெஸ்டன் : இதைப்பற்றி உனக்கு என்ன தெரியும்! (ஒரு நாற்காலியில் சாய்ந்தவாறு நிறுத்து பிரான்ஸிஸ் நிறுத்து! இது என்னை மனம் உடையச் செய்கிறது….. (வீட்டைச் சுற்றி ஓடோடிப் பார்த்தப்பின் ரோஜர் பிரவேசிக்கிறார்).

வெஸ்டன் : ஹாய் ரோஜர்! நீ எல்லாவற்றையும் பார்த்து விட்டாயா? ஒவ்வொரு கதவும் பூட்டப்பட்டதா? ஒவ்வொரு ஜன்னலும் பூட்டப்பட்டதா? பணியாளர் எல்லாம் வெளியேறிவிட்டார்களா?

ரோஜர் : (சற்று சஞ்சலப்பட்டவனாக) எல்லா கதவுகளும், சமையலறை கதவு ஒன்றைத் தவிர. பிரபுவே!

வெஸ்டன் : (கோபத்துடன்) ஏன் சமையலறை ஒன்று மட்டும் பூட்டவில்லை?

ரோஜர் : (உளறிக்கொண்டு சமையல்காரி நினைக்கிறாள்…. அதாவது…. அவள் சொன்னாள்.

வெஸ்டன் : சரி. பேசு, அவள் என்ன சொன்னாள். சமையலறைக் கதவை நான் பூட்டச்சொன்னதைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்?

ரோஜர் : (வேகத்துடன்) தான் ஒரு மரியாதைக்குரிய பெண் என்றும் தன் வாழ்நாளில் தாழிடுவதில்லை என்றும், தன் வயதில் (தவறு செய்ய துவங்க வில்லையென்றும்) சமையலறைக் கதவு பக்கம் யார் வந்தாலும் சமாளிக்க முடியும் என்று அவள் சொன்னாள்.

வெஸ்டன் : அவளை தன் பொருட்களைக் கட்டிக் கொண்டு வீட்டைவிட்டு உடனே வெளியேறச் சொல்.

திருமதி. வெஸ்டன் : உங்கள் அபிமான உணவுகளை யார் சமைப்பது? நீங்கள் சொன்னபடி எல்லாக் கதவுகளும் மூடப்படுவதை நான் பார்க்கிறேன். எப்பொழுதும் நாம் மேல் ஜன்னல் வழியாக (ஒரு வேளை மளிகை சாமான்கள் கொண்டு வரப்பட்டால்) மளிகைச் சாமான்களை இழுக்க முடியும்.

வெஸ்டன் : (தம்மைத்தாமே கட்டுப் படுத்திக்கொண்டு ஆவல் மிகுந்த இந்த நேரத்தில் இத்தகைய கீழ்த்தரமான யோசனை ஏற்றதல்ல. பிரான்ஸிஸ். நீ மோசமானவள்.

திருமதி. வெஸ்டன் : உங்களுக்கு இது கீழ்த்தரமானதாகத் தோன்றவில்லையா? என்ன விசித்திரம்? (கதவுகளை) சுவர்களை மூடி மேற்கூரை வழியாக அனுமதிப்பது புதுமையானது என நான் நினைத்தேன். எப்படியோ! (அவள் மீண்டும் அறைக்குள் வருகிறாள். அறையின் வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு மெழுகுவர்த்தித் தாங்கிகளை எடுக்கிறாள் கதவு பக்கம் போகிறாள்).

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

வெஸ்டன் : இவற்றால் நீ என்ன செய்ய விரும்புகிறாய்?

திருமதி. வெஸ்டன் : தரைத்தளத்தில் இருளில் மூழ்கி கிடப்போமானால் நாம் எல்லா மெழுகுவர்த்திகளையும் சேகரிக்க
விரும்புவோம் வெளியேறுதல்).

வெஸ்டன் : பெண்களின் புத்தி தொடர்பற்ற கருதப்படாத செயல்களில் ஈடுபடுவது எனக்கு முடிவற்ற வியப்பாக தோன்றுகிறது. (தான் என்ன செய்கிறோம் என்பதைக் கவனிக்காமல் தீமாடத்தின் பக்கம் நகர்கின்றார்.

புகைக்கூண்டில் தலையை ஒட்டி வைத்து அதன் அகலத்தை பார்ப்பதைப் போல இருக்கிறார். தலையை திரும்ப எடுத்தவாறு ரோஜர் நின்று கொண்டு கவனிப்பதை அறிகிறார்) நீ உன் வேலையை மறுபடியும் தொடராமலிருக்க, எந்த காரணத்தையும் நான் காணவில்லை, ரோஜர்.

ரோஜர் : எஜமானரே, நீங்கள் ஆபத்தில் சிக்கி இருக்கும்போது, வேலை செய்வது என் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. என்னால் செய்ய முடிந்த எதுவும் இல்லையா?

வெஸ்டன் : (மிகவும் முகஸ்துதி செய்யப்பட்டவராக) முட்டாள். என் அன்பு ரோஜர், முட்டாள். எனக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.

ரோஜர் : ஒருவேளை நான் சென்று அதிகாரிகளை தடுத்து எச்சரிக்கிறேன்.

வெஸ்டன் : (மிகவும் வீரமாக) இல்லை , இல்லை, இல்லை. என் காலடியில் ஒரு பாதுகாவலரை வைத்து என் மீதி வாழ்க்கையை கழிக்க வேண்டுமா? உன் வேலையைத் தொடர்ந்து செய் மற்றும் ….. (அவர் கண்கள், வலதுபுறச் சுவரில் ஒரு நாற்காலியில் கிடக்கும் பார்சலைப் பார்த்து, ஒளிர்கின்றன. சுமார் 18 ஓ 10 ஒ 4 அங்குல அளவுள்ள கன செவ்வகப் பெட்டி அது. ஒரு மெல்லிய கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. தீவிரமாக) என்ன இது?

ரோஜர் : இன்று காலை அது உங்களுக்காக வந்தது ஐயா,

வெஸ்டன் : என்ன அது?

ரோஜர் : (தன் குரலில் லேசான துவக்கச் சந்தேகத்துடன்) எனக்குத் தெரியாது, பிரபு. இதை எடுத்துக்
கொண்டு வந்தவர் இன்று இதை பெறுவது உங்களுக்கு மிகவும் முக்கியம் என்று சொன்னார்.

வெஸ்டன் : நீ அது என்னவென்று கேட்கவில்லையா, முட்டாள்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

ரோஜர் : (பணிவுடன்) அது என்னுடைய வேலையாக எனக்குத் தோன்றவில்லை. நான் ஒரு போதும் தங்களுடைய விசயத்தைப் பற்றி கேட்பதில்லை. தங்களுக்கு இந்த பார்சலை காட்டிவிட்டேன். இது வந்த போது அங்கேயே விட்டுவிடு என்று சொன்னீர்கள்.

வெஸ்டன் : (அந்த பொருளின் மீது, அதிகரிக்கும் அசாதாரண மனநிலையுடன் எட்டிப் பார்த்தவாறு இதைக் கொண்டு வந்தவன் என்ன விதமான மனிதன்? அவன் குட்டையாக, கருப்பு நிறமாக இருந்தானா?

ரோஜர் : (அதைப்பற்றித் தெளிவாக கவனிக்காமல் இருந்ததால்) அவன் குட்டையாக இருந்தான் என நினைக்கிறேன். ஆனால் கருப்பாக இல்லை அவன் தொப்பி முகத்தை மறைத்துவிட்டது. நான் நினைக்கிறேன், அவன் மேவாய்க் கட்டையில் ஒரு மச்சம் இருந்தது. ஆனால் நான்…. இது ஒரு ……..

வெஸ்டன் : மச்சமா? (அவர் கற்பனை வேலை செய்கிறது) ஒரு மச்சம் ஆம். ஆம். அந்த மனிதனுக்கும் ஒரு மச்சம் தாடையில் வலது புறம். அவன் இங்கே நின்று இருப்பது போல் நான் பார்க்கிறேன். நாம் இதில் இருந்து உடனே விடுபட வேண்டும்.

ரோஜர் : இது ஓர் நரக கொல்லும்) இயந்திரம் என்று நினைக்கிறீர்களா அய்யா? நாம் இதை வைத்து என்ன செய்வோம்?

வெஸ்டன் : (பக்கவாட்டு ஜன்னலைச் சுட்டிக் காட்டி ஜன்னலைத் திற, நான் இதை என்னால் முடிந்த அளவுக்கு தோட்டத்தில் தூக்கி எறிகின்றேன்.

ரோஜர் : ஆனால் அது வெடித்து விடலாம், ஐயா நாம் அதை எறிந்தோமானால்.

வெஸ்டன் : நாம் எறியாவிட்டால் அது வெடித்து விடலாம், என்பது நிச்சயம். அது எவ்வளவு நேரமாக இங்கே
இருக்கிறது?

ரோஜர் : சுமார் 9 மணிக்கு அது வந்தது, அய்யா.

வெஸ்டன் : (மன வேதனையுடன்) சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன். ரோஜர், ஜன்னலைத் திற

ரோஜர் : இல்லை அய்யா. நீங்கள் ஜன்னலைத் திறங்கள், நான் அதைக் கையாளுகிறேன். என் உயிர் ஒன்றுமில்லை. உங்கள் உயிர் இங்கிலாந்து நாட்டுக்கு மதிப்பு மிக்கது.

வெஸ்டன் : இல்லை. ரோஜர் இல்லை. நீ இளைஞன். நான் என் வாழ்க்கையைக் கழித்து விட்டேன். உலகில் நீ இன்னும் செய்ய வேண்டிய பெரும்பணிகள் உள்ளன. நீ வாழ வேண்டும். என் வாழ்க்கையை வருங்கால சந்ததியருக்கு எழுதிவிடு.

நான் சொல்வதைச் செய். நீ மிகுந்த கவனத்துடன் கையாள நான் வாக்குறுதி தருகின்றேன். (ரோஜர் ஜன்னல் பக்கம் விரைந்து ஓடுகிறான்) இல்லை. காத்திரு. ஒரு சிறந்த யோசனை. தோட்டக்காரனின் வாளி, அது இன்னும் படிக்கட்டில்தான் உள்ளது?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

ரோஜர் : ஆம். ஆம். நிச்சயமாக (அவன் அறையை விட்டுச் செல்கிறான்) ஒரு நொடியில் திரும்ப வரும் போது, சுத்தப்படுத்தும் கந்தல் துணி தொங்கிக் கொண்டிருக்கும் தண்ணீர் நிரம்பிய மரவாளியை எடுத்துக் கொண்டு வருகிறான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play) 1

வெஸ்டன் : பின்னால் நில். (அவர் அச்சத்துடன் பார்சலை எடுக்கின்றார்) என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. (அவர் பார்சலை நீளவசமாக பாத்திரத்தில் இடுகிறார், தம்முடைய கையை முழு நீளத்திற்குப் பயன்படுத்துகிறார். தலையைப் பின்னோக்கி வைக்கிறார். கண்களின் ஓரங்களில் இருந்து பார்க்கின்றார். போதியளவு தண்ணீர் இல்லை. அதை (பார்சலை) மறைக்கும் அளவுக்கு இல்லை.

ரோஜர் : ஒரு வினாடிக்குள் நான் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறேன்.

வெஸ்டன் : இல்லை போகாதே. அந்த மலர்கள் (மலர்த் தொட்டியைச் சுட்டிக்காட்டுகிறார்)

ரோஜர் : நிச்சயமாக (மலர் தொட்டியில் அமைக்கப்பட்டிருந்த டாபடில்ஸ் மலர்களை இழுத்து ஆவேசமாக மேஜையின் பக்கம் எறிகின்றார். (அதிலிருந்த தண்ணீ ரை மரத்தொட்டியில் கொட்டுகிறார்) ஆ… வேலை முடிந்துவிட்டது.

வெஸ்டன் : (ரும்பிக்கை இழந்தவரா பார்சலில் இருந்து தம்முடைய கையை எடுக்கின்றார்) இப்பொழுது அது மிதக்கத் துவங்கும். அது முழுவதும் ஈரமாகிவிடும் அல்லது பயன் இல்லாமல் போகும்.

ரோஜர் : அது உள்ளே மூழ்குவதற்கு கீழே செல்வதற்கு நாம் அதன் மீது கனமான பொருளை வைக்க வேண்டும்.

வெஸ்டன் : ஆம். ஆம். ஏதாவது ஒன்றை எடுத்து வா.

வெஸ்டன் : நான் என்ன எடுப்பேன்?

வெஸ்டன் : ஏதாவது ஒன்று, கனமான தொட்டிக்குள் பொருத்தமான புத்தகங்கள். ஏதாவது ஒன்று.

ரோஜர் : (பயம் இல்லாவிட்டால் மட்டும், இவருக்கு புத்தகங்கள் மரியாதைக்குரிய பொருள்கள்) புத்தகங்களா ஐயா? ஆனால், அவைகள் மிகவும் நினைந்துவிடுமே, இல்லையா?

வெஸ்டன் : கடவுள் பெயரைச் சொல்லி அடுக்குகளில் உள்ள முதல் 6 புத்தகங்களைக் கொண்டு வா.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

ரோஜர் : (புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருகிறார். இது உதவி செய்யாது என்று நான் கருதுகின்றேன். இத்தகைய அழகான பைண்டிங் செய்யப்பட்டவை. (மரத்தொட்டியின் மேல் இருந்த ஈரத்துணியை எடுத்து அதை தரை விரிப்பின் மீது போட்டு புத்தகங்களை (அதில் சுற்றி மூட்டையாக்கி தண்ணீரில் போடுகிறார். இதனால் இயல்பாக தண்ணீர் மேலே வழிகின்றது.

வெஸ்டன் : தன்னுடைய கைகளை வெளியே எடுத்து நிம்மதிப் பெருமூச்சுடன் பின்னோக்கி உட்காருகின்றார். நன்றாக, உண்மையாக மூழ்கிவிட்டது. (தம் நெற்றியைத் துடைக்கின்றார் ரோஜர் அருகிலுள்ள நாற்காலியில் அமர்கின்றார்) (திருமதி வெஸ்டன் ஒரு தட்டில் மதுபானமும், சில பிஸ்கட்டுகளும் வைத்துக் கொண்டு பிரவேசிக்கின்றார்)

திருமதி, வெஸ்டன் : (அவர்களின் விசித்திர (செயலைக்) தொழிலைக் கண்டு ரிச்சர்ட்! இந்த தொட்டியில் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?

வெஸ்டன் : இன்று காலையில் வந்த பார்சல். இதைக் கொண்டு வந்தவன்தான் நேற்று என்னை உரசிக்கொண்டு என் பாக்கெட்டில் அந்தக் காகிதத் துண்டைப் போட்டவன். முட்டாள்கள்! நான் இதை திறந்து பார்ப்பேன் என்று எண்ணி இருந்தார்கள். (இப்பொழுது அவர் நிம்மதியாக இருக்க தொடங்குகின்றார்) ஆனால், அந்த பலருக்கு, நாம் ஒருவரே போதும்.

திருமதி. வெஸ்டன் : (மிகவும் நம்பிக்கை இழந்தவராக) நீங்கள் அழகிய புத்தம் புதிய ஒன்றை …… கெடுத்துவிட்டீர்கள்….

வெஸ்டன் : (ஆத்திரத்துடன் இடைமறித்து) பிரான்ஸிஸ் (இடி இடிப்பதைப் போல் அவள் பெயர் சொன்னதால் அவள் பேச்சு அணைக்கப்படுகிறது.) நீ சொன்ன புத்தகம் என்ன புதிய பொருள். உன்னுடைய கணவனின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது தரைவிரிப்பு ஒரு பொருட்டா? நீ எனக்கு அதிர்ச்சி ஊட்டுகின்றாய்.

திருமதி. வெஸ்டன் : (தரைவிரிப்பை பற்றி அவள் சொல்லவில்லை தரை விரிப்பா? (இடைவெளிக்குப் பின் நிதானமாக)
இல்லை. நிச்சயமாக இல்லை. நான் உங்கள் பாதுகாப்புக்கு எதிராக, ஆசியாவிலேயே மிக்க அழகிய எந்த ஒரு பொருளையும் எடைபோட கனவில் கூட நினைக்கவில்லை. உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்படி இருப்பதை டாக்டர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

வெஸ்டன் : ஒரு வேளை, வசந்தகால காலை நேரத்தில் டாக்டர் தன் கதவின் அருகே நரக எந்திரத்தை வைத்திருக்கமாட்டார்.

திருமதி. வெஸ்டன் : (நிதானத்துடன் ஜன்னலுக்கு எதிராக தொங்கிய உருவப்படத்தின் மீது தன் கண்களைச் செலுத்தினார்) எங்கள் மூத்த அத்தை சிசிலியின் உருவப்படத்தை அகற்றுவது சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

வெஸ்டன் : கடவுள் பெயரால், ஏன்?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

திருமதி. வெஸ்டன் : ஜன்னல் வழியாக சுடப்படும் போது அவள் உருவப்படம் நேர்க்கோட்டில் அமைகிறது.

வெஸ்டன் : ஜன்னல் வழியாக ஏன் யாரும் சுட வேண்டும், நான் கேட்கலாமா?

திருமதி. வெஸ்டன் : (நிதானமாக அந்த குரலை ஆட்சேபனை செய்பவராக) நான் உங்கள் உடைமைகளை பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தேன். என் அன்புமிக்க ரிச்சர்ட், யாராவது ஒருவர் அந்த அய்லெக்ஸ் மரத்தில் உட்கார்ந்து கொண்டு……

வெஸ்டன் : ஓடி வந்து) பிரான்ஸிஸ்! அய்லெக்ஸ் மரத்தைப் பற்றிச் சிந்திக்க உன்னைத் தூண்டியது எது?

திருமதி. வெஸ்டன் : நான் அங்கே இருந்துதான் உங்களைச் சுட்டு இருப்பேன். அதாவது நான் உங்களை சுடப்போனால் அந்த மரத்தின் இலைகள் ஒருவரை மறைப்பதற்கு போதிய அளவு அடர்த்தியாக உள்ளன. இருப்பினும் அவர்களின் பார்வையை மறைக்க போதுமானது இல்லை.

வெஸ்டன் : அந்த ஜன்னலை விட்டு வந்து விடு.
திருமதி. வெஸ்டன் : என்ன?
வெஸ்டன் : அந்த ஜன்னலிலிருந்து தூரமாக வா.
திருமதி. வெஸ்டன் : (அவர் பக்கம் நகர்ந்து) என்னை யாரும் சுடப் போவதில்லை.
வெஸ்டன் : (அறைக்கு வெளியே ஓடி வந்து தரை தளத்திலிருந்து வரும் ரோஜரை அழைத்தவராக) ரோஜர்! ரோஜர்!

ரோஜர் : (வெகு தொலைவிலிருந்து) என் பிரபுவே?
வெஸ்டன் : தோட்டக்காரன் போய் விட்டானா?
ரோஜர் : இல்லை பிரபுவே. சமையலறை ஜன்னலுக்கு வெளியே சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான்.

வெஸ்டன் : நான் சொல்லும் வரை அவனை அய்லெக்ஸ் மரத்தின் அடியில் உட்காரச் சொல்.

ரோஜர் : அய்லெக்ஸ் மரமா? சரி பிரபுவே. (வெஸ்டன் திரும்ப வந்து தன்னுடைய கைத்துப்பாக்கி வைத்திருந்த மேஜை டிராயர் பக்கம் போகின்றார்)

திருமதி, வெஸ்டன் : (அவர் கைத்துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது) அன்புள்ள ரிச்சர்ட், கவனமாக இருங்கள்.
அது மிகவும் ஆபத்தான ஆயுதம்.

வெஸ்டன் : அது மிகவும் ஆபத்தான ஆயுதம்.

வெஸ்டன் : (கம்பீரமாக) எனக்குத் தெரியும்

திருமதி, வெஸ்டன் : சரி, கொலைகாரனை முறியடிக்க இது ஒரு மோசமான வழி என்று நான் நினைக்கிறேன்.
வெஸ்டன் : எது?
திருமதி, வெஸ்டன் : ஒருவர் தம்மையே தாக்குவது. (டாபடில்ஸ் மலர்களின் கோப்பையை எடுத்துக் கொண்டு ரோஜர்
பிரவேசிக்கிறார்)

வெஸ்டன் : (அவர் உள்ளே வரும் போது அவரைச் சுற்றிப் பார்க்கின்றார்) ஜோயல் மரத்தின் அடியில் உட்கார
போய்விட்டானா?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

ரோஜர் : ஆம், ஐயா, (மலர்க் கோப்பையை வைத்து விட்டு, பக்கவாட்டு ஜன்னலின் பக்கம் போகிறார்) நான் உங்கள் செய்தியை அவனுக்குச் சொல்லிவிட்டேன்.

வெஸ்டன் : அந்த ஜன்னலில் இருந்து விலகி நில். (ரோஜர் வியப்புடன் பார்க்க) அய்கெல்ஸ் மரத்தில் யாராவது
இருக்கலாம்.

ரோஜர் : ஆனால் அவர்கள் உங்களைச் சுடுவதற்கு முயற்சிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா. அத்துடன்……. (அவர் வாளியை சுட்டிக்காட்டுகிறார்)

வெஸ்டன் : யாருக்குத் தெரியும்? நீ ஒரு குற்றவாளி மனதுடன் இதைக் கையாளும் போது, நான் சொல்லும் வரையில் …. நீ தோட்டக்காரனிடம் பேசுவதற்கு கதவைத் திறந்தாயா?

ரோஜர் : இல்லை பிரபுவே. நான் ஷட்டர் வழியே பேசினேன்.

வெஸ்டன் : (கைத்துப்பாக்கியின் லாக்-கைத் தொட்டுக் கொண்டு இப்பொழுது மரத்தில் யாராவது இருக்கிறார்களா என்பதைப்பார்க்கப்போகிறோம். (ஜன்னல் பக்கம் நகர்கின்றனர், ஓரக்கண்ணால் எட்டிப்பார்க்கிறார்)

திருமதி. வெஸ்டன் : ரிச்சர்ட், அதை நீங்கள் சுடப்போனீர்களானால் தயவு செய்து நான் சொல்லும் வரையில் காத்திருங்கள். (கீழ் தளத்திலுள்ள முன் பக்க கதவிலிருந்து வேகமாக கதவு தட்டும் ஒசையால் அவள் பேசுவது இடைமறிக்கப்பட்டது. அங்கே உள்ள அனைவரும் முற்றிலும் தப்பித்துவிடும் அளவுக்கு எதிர்பாராத நிகழ்ச்சி. ரோஜர் முதலாவதாக அதிர்ச்சியில் இருந்து மீளுகின்றார்)

ரோஜர் : முன்கதவுப் பக்கம் யாரோ இருக்கிறார்கள். தெருவின் பக்கம் பார்க்க, வசதியாக பின்புறச் சுவரில் ஜன்னல் பக்கம் நகர்கின்றனர். கதவை திறக்கப் போகிறார். வெஸ்டன் பிரபு அவரைத் தடுக்கின்றார்)

வெஸ்டன் : (இன்னும் தீமாடத்தின் அருகே) அந்த ஜன்னலை திறக்காதே.

ரோஜர் : ஆனால் ஜன்னலைத் திறக்காவிட்டால் அங்கே யார் என்பதை எப்படிப் பார்க்க முடியும். வெஸ்டன் : நீ உன் தலையை அந்த ஜன்னலின் வழியே நீட்டினால், கேள்வி கேட்பதற்கு காத்து இருக்காமல்
அவர்கள் உன்னைச் சுட்டு விடுவார்கள்.

திருமதி. வெஸ்டன் : ஆனால், ரிச்சர்ட் அது முற்றிலும் குற்றமற்ற பார்வையாளராக இருக்கலாம். (கதவு தட்டப்படுவது
மீண்டும் கேட்கிறது)

ரோஜர் : நான் ஒரு நாற்காலியின் மீது நின்று கொண்டு இருந்தால்…. (அவர் ஜன்னலின் பக்கம் ஒரு நாற்காலியைக் கொண்டு வருகிறார் மற்றும் அதன் மீது நிற்கின்றார். ஆனால் முன் கதவருகில் காத்திருப்பது யார் என்பதைப் பார்ப்பதற்கு அவர் போதிய அளவு உயரமானவர் இல்லை)

வெஸ்டன் : நன்று! நன்று! அது யார் என்பதை உன்னால் சொல்ல முடியுமா?

ரோஜர் : நான் போதிய அளவு உயரமானவன் இல்லை பிரபுவே.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

திருமதி. வெஸ்டன் : ஒரு ஸ்டூல் சேர்த்துக் கொள் ரோஜர். (ரோஜர் நாற்காலியின் மீது ஸ்டூல் சேர்க்கின்றார். அந்த
ஆபத்தான கட்டமைப்பில் ஏறுவதற்கு திருமதி. வெஸ்டன் உதவி செய்கின்றாள்).

திருமதி. வெஸ்டன் : இப்பொழுது நீ யாரையாவது பார்க்க முடிகின்றதா?

ரோஜர் : (பார்த்துவிட்டு, பிறகு கீழே இறங்கி வந்து) எல்லாம் நன்மைக்கே பிரபுவே. (மாடிப்படி கதவைத் திறந்து கீழே உள்ள ஒருவரை அழைக்கின்றார்) அது திருவாளர். சீஸர் (இந்தத் தகவல் ஒரு இடைவெளியால் தொடரப்படுகிறது?) அவரை நான் உள்ளே அனுமதிக்கலாமா?

வெஸ்டன் : உனக்கு யார் சொன்னது?

ரோஜர் : திரு. சீஸர், உங்களுக்கு நினைவு இருக்கிறதா, செவ்வாய்கிழமை ஹாம்ப்டனில் உங்களைச் சந்தித்தவர், பிரபு. ரோஜாச் செடிகளைப் பற்றி இன்று காலை உங்களைப் பார்க்க அவர் Mவரவேண்டி இருந்தது. நீங்கள் அதை குறிப்பு எடுத்துக் கொண்டீர்கள்.

வெஸ்டன் : (மயக்கமுற்று தன் பாக்கெட்டில் இருந்த நசுங்கிய காகிதத் துண்டை எடுத்து நான் குறிப்பு எடுத்தேனா? “சீஸரை நினைவுகொள்” இது என்னுடைய கையெழுத்தா? ஆமாம். இது என்னுடைய கையெழுத்தாகத்தான் இருக்க வேண்டும்.

திருமதி, வெஸ்டன் : (தயவுடன்) இது ஒரு மூர்க்கனின் நச்சு நிறைந்த கிறுக்கல் என்று நான் சொல்லி இருக்கக் கூடாது. ரோஜர் நீ கீழே போய் திரு. சீஸரை உள்ளே அழைத்து வருவது நல்லது. ரிச்சர்ட் கைத்துப்பாக்கியை தூரத்தில் வையுங்கள்.

உங்கள் பார்வையாளர் இதை தவறாக புரிந்துக் கொள்ளலாம். ஒரு குழந்தையிடம் பேசுவதைப்போல அவள் சந்தோஷமாகப் பேசுகிறாள். அவளிடம் வியப்பு காணப்படவில்லை. ஏனென்றால் இந்த குழப்பமான ஓசைகளும், சின்னஞ்சிறு நிகழ்வுகளுக்காக அவர் கணவர் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதும் சர்வசாதாரணம்)

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

வெஸ்டன் : திரு. சீஸர் (அவர் வாளியின் பக்கம் நகர்கின்றார்)

திருமதி. வெஸ்டன் : நிச்சயமாக. இத்தகைய பெயரை யாரும் எப்படி மறக்க முடியும்? இப்போ நீங்கள் என்னை மன்னித்தால்… இது என்னுடைய பரபரப்பான காலை நேரம்.

வெஸ்டன் : (கதவிற்கு வெளியே அவள் செல்வதைத் தடுத்து) பிரான்ஸிஸ் அந்த பார்சலில் என்ன இருந்தது என்று நீ நினைக்கிறாய்?

திருமதி. வெஸ்டன் : அது உங்களுடைய புதிய வெல்வட் மேலங்கி. அன்பே, நான் சொல்வதற்கு முயன்றேன். உங்களுக்கு தெரியுமா?

(திரை கீழே இறங்குகிறது. வெஸ்டன் பிரபு தண்ணீரிலிருந்து முற்றிலும் நனைந்துவிட்ட மேலங்கியை எடுக்கிறார்)


Remember Caesar Poem Summary in English

Here we have uploaded the Remember Caesar Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Mrs. Weston: No, of course not. You will not leave home today. Beautiful light banquet and a tumbler.

Weston: I sent Roger to block all the doors and all the way. I think it would be wise to cover the floor as well. Make sure they are not open to anyone.

Mrs. Weston: And the French. Are you looking forward to joining the Dutch? It is morning time. Mr. The Commons guy will bring groceries. How do I buy)… ..

Weston: For you, is pepper a little bigger than your husband's life, darling?

Mrs. Weston: This is not a little pepper. Bulk flour. If the bread is in short supply, you will be the only one to complain if the broth is waterlogged. (Return the piece of paper to him and how do you know this little piece of paper represents you?

Weston: Because it was in my pocket. I saw this while looking for something to light my chimney. (Meaning) There are no holes (in the bag).

Mrs. Weston: No holes. What's next? Richard You smoke too much.

Weston: (Continuing hastily) It slipped out of my pocket by the man who snatched me up yesterday. A dark skinny bad-faced man.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

Mrs. Weston: I don't think he's very evil.

Weston: What do you know about this! (Stop leaning back in a chair Francis! This makes me sad… .. (Roger enters after running around the house).

Weston: Hi Roger! Have you seen it all? Is every door locked? Is every window locked? Did the employee leave everything?

Roger: (slightly agitated) All the doors, except the kitchen door. Lord!

Weston: (angrily) Why not just lock the kitchen?

Roger: (The chef thinks inwardly ie. I mean…. She said.

Weston: All right. Speak, what she said. What does she think about me locking the kitchen door?

Roger: (with speed) She said that she was a respectable woman who would never give up in her life and that anyone her age (who never started to make mistakes) could cope with coming to the kitchen door.

Weston: Tell her to pack her things and leave the house immediately.

Mrs. Weston: Who cooks your favorite dishes? I see all the doors closing as you say. We can always pull groceries through the top window (perhaps if groceries are brought in).

Weston: (Such a vile idea is not appropriate at this time of self-restraint and longing. Francis. You are bad.

Mrs. Weston: Doesn't this seem inferior to you? What's weird? I thought it was innovative to cover (the doors) the walls and let them through the roof. Anyway! (She comes back into the room. She picks up two candle holders from different parts of the room and goes to the door).

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

Weston: What do you want to do with these?

Mrs. Weston: We collect all the candles if it gets dark on the floor
Would like to exit).

Weston: I find it endlessly surprising that women engage in activities that are not considered irrational. (Moves to the side of the fireplace without noticing what he's doing.

It looks like a sack that encloses with a drawstring. Roger learns to stand and watch as he pulls his head back) I see no reason for you not to resume your work, Roger.

Roger: Sir, when you are in danger, doing work is beyond my power. Is there nothing I can do?

Weston: (very flattered) Stupid. My dear Roger, you idiot. Nothing is going to happen to me.

Roger: Maybe I should go and stop the authorities and warn them.

Weston: (very heroically) No, no, no. Do I have to spend the rest of my life putting a guard at my feet? Do your job and… .. (His eyes light up, looking at the parcel lying on a chair on the right wall. It is a cube about 18o10o 4 inches in size. Built of a thin rope. Seriously) What is this?

Roger: It came for you this morning, sir.

Weston: What is it?

Roger: (with a slight initial suspicion in his voice) I do not know, Lord. Take this
The person who brought it said that it is very important for you to get this today.

Weston: You didn't ask what it was, you idiot.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 6 Remember Caesar (Play)

Roger: (politely) It's my job


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Remember Caesar Poem Summary in Tamil


How to get Remember Caesar Poem in Tamil Summary??

Students can get the Remember Caesar Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Remember Caesar Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List