Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Life of Pi Chapter Summary in Tamil & English Free Online

Life of Pi Poem Summary in Tamil PDF
Life of Pi Poem Summary in Tamil

Life of Pi Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Life of Pi Poem in Tamil. Also, in this article, we will also provide Life of Pi Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Life of Pi Poem Summary in Tamil please let us know in the comments.


Life of Pi Poem Summary in Tamil


Poem

Life of Pi Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Life of Pi Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Life of Pi Poem Summary in Tamil Post.

Life of Pi Poem Summary in Tamil

Students can check below the Life of Pi Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


“யான்“யான் மார்டெல்” எழுதிய கற்பனைத்திறமிக்க மற்றும் சாகசம் நிறைந்த 2001ல் வெளியான கனடா நாட்டு நாவலான் “பை” யின் வாழ்க்கையின் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இக்கதையின் கதாநாயகன் பாண்டிச்சேரியில் இருந்து வந்த ஒரு இந்தியச் சிறுவன் – பிஸ்ஸின் மோலிடார் படல் என்ற “பை”. அவனுடைய கப்பல் விபத்துக்குள்ளான பிறகு, ஓர் உயிர்க்காக்கும் படகில் அவன் மட்டும் தனியாக கூடவே “ரிச்சர்டு பார்க்கர்” எனும் வங்கப்புலியுடன் பசிபிக் பெருங்கடலில் 227 நாட்கள் உயிர் வாழ்கிறான்.

“நான் அனாதையாக்கப்பட்ட (orphaned) பிறகு தனியாக, பசிபிக் கடலின் நடுவே, ஒரு வயது வந்த புலி (adult tiger) என் முன்னாலும், சுறாக்கள் எனக்கு கீழேயும், சீறி எழும் புயல் என்னைச் சுற்றி அழித்து கொண்டிருக்க நான் படகுத்துடுப்பை பற்றிக் கொண்டிருந்தேன். நான் என் வருங்காலத்தினைக் (prospects) கருத்தில் கொண்டிருந்தால் (considered), புலியினால் உயிருடன் சாப்பிடப்படுவதை விட, கடலில் மூழ்கி இறப்பதே மேல் என நிச்சயமாக துடுப்பினை (oar) விட்டிருப்பேன். நான் படகில் வந்த ஆரம்ப நிமிடங்களில் என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் எண்ணியதாக எனக்கு நினைவு இல்லை. நான் இரவு பகலைக் கூட கவனிக்கவில்லை. நான் துடுப்பை மட்டும் போட்டுக் கொண்டே இருந்தேன். அது “ஏன்” என்று கடவுள் மட்டுமே அறிவார்.

அங்குள்ள கூறுகள் (elements) என்னை உயிர்வாழ அனுமதித்தன, உயிர்க்காக்கும் படகு மூழ்கவில்லை. ரிச்சர்ட் பார்க்கர் (tiger) கண்ணில் படவில்லை . சுறாக்கள் (sharks) சுற்றித் திரிந்தன, ஆனால் தாக்கவில்லை . அலைகள் என் மீது விசிறியடித்தன. ஆனால் என்னை கீழே தள்ளவில்லை . நாங்கள் வந்த கப்பல், அதிக சத்தத்தை (burbling) வெளியிட்டு மறைவதை கண்டேன். ஒளியும் அசைந்தாடி, பின் மறைந்தது.

நானோ மற்றொரு உயிர்காக்கும் படகில் (life boat), என் குடும்பத்தார்களோ, உயிர் பிழைத்திருப்பார்களோ வந்து எனக்கு நம்பிக்கை (hope) அளிப்பார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மழையும் சூறையடிக்கின்ற (marauding) கருங்கடலின் அலைகளும், கப்பலின் உடைந்த உதிரிபாகங்களுமே மிதந்து கொண்டிருந்தன. வானத்தில் இருந்து இருள் உருகி ஓடியது, மழை நின்றது, கடைசி வரை நான் இருந்திருந்த நிலையில் என்னால் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

நான் கடுங்குளிராயிருந்தேன். என்னுடைய தலையைத் தாங்கியதாலும், தலையை உயர்த்தி நான் செய்த செயல்களினாலும் எனது கழுத்து அதிக வலியாய் இருந்தது. உயிர்காக்கும் வளையத்தை (lifebuoy) அணிந்திருந்தாலும் எனது முதுகு வலித்தது. வேறு ஏதாவது படகுகள் வருகின்றனவா என்பதை அறிய நான் இன்னும் அதிகமாக தலையை உயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi 1

காலையில் என்னால் அசையவே முடியவில்லை. நான் என்னுடைய இயலாமையால் படகின் மேல் உள்ள தார்ப்பாயுடன் (tarpaulin) பொருத்தப்பட்டவனானேன். யோசிப்பது கூட என்னைச் சோர்வடையச் செய்தது. நேராகத் (straight) தான் சிந்திக்க வேண்டும் என்று நான் என்னையே வகுத்துக் கொண்டேன். ஒட்டகங்கள் (camels) மிக மெதுவாக நீண்ட வரிசையில் ஒரு பாலைவனத்தை (desert) கடந்ததைக் கண்டவுடன் எனக்கென சில எண்ணங்கள் தோன்றின. முதன் முறையாக வாழ்வாதாரம் இருப்பதாக எண்ணினேன்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

கடந்த 3 நாட்களாக எனக்கு ஒரு சொட்டு நீராவது அல்லது ஒரு வாய் உணவாவது அல்லது இவை தான் காரணம் என கண்டறிய முடிந்ததால், எனக்கு சிறிது பலம் வந்தது. ரிச்சர்ட் பார்க்கர் இன்னமும் என்னுடனே கூட படகில் இருந்தது. உண்மையில், எனக்கு கீழே இருந்தது.

இப்படி ஒரு நம்ப முடியாத (incredible) நிகழ்வு உண்மையாக இருக்க ஒத்துக் கொள்ள வேண்டும், ஆனால் எனது கருத்தில் கவனம் கொண்டு பல்வேறு மனநிலைகளை ஆராய்ந்து, நான் முடிவுக்கு கொண்டுவந்தது என்னவென்றால், இது நான் எனது இயலாமையான நிலையிலும், அதிக பதட்டமான நிலையிலும் நான் உணர்ந்த திடமான உண்மையை தவிர, பொய்யான கனவோ, மாயத்தோற்றமோ, தவறான நினைவோ, அல்லது வர்ணிக்கப்பட்ட (fancy) நிகழ்வோ அல்லது மற்ற பொய்யானவைகளோ அல்ல. இதனைக் குறித்து நான் ஆராய்ந்ததும், இதனுடைய உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் (confirmed).

நான் எவ்வாறு என்னுடன் படகில் ஒரு 450 பவுண்ட் எடையும், 26 அடி நீளமும் உடைய வங்கப்புலி (Bengal tiger) படகில் 21/2 நாட்கள் இருந்ததை கவனிக்கவில்லை என்பது ஒரு புதிராகவே உள்ளது. எனக்கு அதிக ஆற்றல் வரும் போது, நான் இதற்கு விடை கண்டறிவேன் (solve). பொதுவாக பேசுகையில், வரலாற்றிலேயே, மிகப்பெரிய ஒளிந்திருந்து (stowaway) பயணம் மேற்கொண்டது ரிச்சர்ட் பார்க்கராகத் தான் இருக்கும்.

அதன் மூக்கு (nose) நுனியிலிருந்து வால் (tail) வரை படகில் நீளத்தில் மூன்றில் ஒரு பகுதியை விட நீளமாக இருந்தது. நான் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் இழந்தேன். அதன் விளைவாக இடைக்கால ஆதாயமாக (perked) நான் நன்றாக உணர்ந்தேன்.

இதனை நாம் அதிக நேரங்களில் விளையாட்டுகளில் பார்த்திருக்கிறோம். இல்லையா? டென்னிஸ் (tennis) ஆட்டத்தில் சாம்பியனை எதிர்த்து ஆடுபவர் தொடக்கத்தில் நன்றாகத் தான் விளையாடுவார். ஆனால் விரைவில் நம்பிக்கையை (confident) இழந்து விடுவார். சாம்பியன் ஆட்டக்காரர் ஆட்டப்புள்ளிகளை கைப்பற்றி விடுவார். ஆனால் கடைசி ஆட்டத்தில், எதிராக ஆடுபவருக்கு இழப்பதற்கு ஏதுமில்லை எனும்போது, அவர் மிகவும் தைரியமாக, அக்கறையற்றும் (relaxed), பதட்டமின்றியும் இருப்பார்.

அவர் திடீரென சாத்தான் (devil) போல மிக கடுமையாக விளையாடி, சாம்பியன் கடைசிப் புள்ளிகளை எடுக்க மிகக் கடினமாக உழைக்க வைப்பார். அதே நிலையை தான் என்னுடன் இருந்தது. ஒரு கழுதைப் புலியை (Hyena) சமாளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று, ஆனால் ரிச்சர்ட் பார்க்கரை வைத்து பார்க்கும் போது என் வாழ்க்கை முடிந்து விட்டது. அதனை சமாளித்து கொண்டிருக்கும் போது, நான் ஏன் என்னுடைய வறண்ட தொண்டையைக் (parched throat) குறித்து ஏதாவது செய்யக்கூடாது?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

இதனால் தான் அந்த காலையில் உயிர் பிழைத்தேன் என நம்புகிறேன். அதாவது தாகத்தினால் கிட்டதட்ட சோர்ந்து போயிருந்தேன். தாகம் என்ற வார்த்தை என் நினைவுக்கு வந்ததும், அதைத் தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. ஏதோ இந்த உலகம் முழுவதும் உப்பானது (salty) போன்றும், இதைப் பற்றி நான் அதிகம் சிந்தித்ததும் அதன் விளைவு அதிகமாயிருந்தது. தாகத்தை விட சுவாசமே ஒரு கட்டாய உணர்வு என கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் அது ஒரு சில நிமிடங்களுக்குத்தான் என நான் சொல்கிறேன். சில நிமிடங்களுக்கு பின்னால் நீங்கள் இழந்து விடுவீர்கள், மூச்சுத்திணறல் (asphyxiation) மறைந்து போய்விடும். தாகம் என்பது தொடர்ந்து நீடிக்கக் கூடிய ஒன்று. பாருங்கள் கிறிஸ்து சிலுவையில் தாகத்தினால் மரித்தாலும், கடவுளே தாகத்தினைக் குறித்து முறையிடும் (complaint) போது சாதாரண மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள் நினைத்துப் பாருங்கள். அது என்னை ஒரு உளரும்பைத்தியமாகச் செய்தது.

நான் இதற்கு முன்பு வாயினுள் இப்படி ஒரு அழுகிய நாற்றம் (putrid) மற்றும் பசை (pasty) போன்ற உணர்வையும், என் தொண்டையின் பின்புறம் தாங்கமுடியாத அழுத்தத்தையும், என் இரத்தம் ஒரு நீராவிப் போல் உறைந்து பாயாத நிலையை அடைந்தது போன்ற உணர்வை அறிந்ததேயில்லை. உண்மையில் இவைகளுடன் ஒப்பிடுகையில், புலி என்பது ஒன்றுமேயில்லை. அதனால் தான் நான் ரிச்சர்ட் பார்க்கர் குறித்த அனைத்து எண்ணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு பயமின்றி குடிநீரைத் தேடினேன்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi 2

நான் முறையாக செய்யப்பட்ட ஒரு உயிர்காக்கும் படகில் இருப்பதால் அது நிச்சயமாக உணவுப்பொருட்களைக் கொண்டிருக்கும் என நினைத்த போது என் எண்ணத்தில் இருந்த மந்திரக் கோலானது முழுவதுமாக மூழ்கி, ஒரு நீருற்று நீரைப் பொங்கியது. இது ஒரு நியாயமான கருத்தாக தோன்றியது. எந்த மாலுமி, தன்னுடைய குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய இந்த தொடக்கநிலை வேலையைச் செய்யத் தவறுவார்.

எந்த ஒரு கப்பல் வியாபாரி (caption) பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் பாசாங்கில் சிறிது கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டாம் என நினைப்பார்? இது ஒரு வழியாக தீர்ந்தது. படகில் நீர் இருந்தது. நான் செய்ய வேண்டியது எல்லாம் நீர் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிவது தான், அதாவது நான் நகர வேண்டும். தார்ப்பாயின் ஓர் ஓரத்தில் இருந்து படகின் நடுப்பகுதிக்கு (middle) வந்தேன். கஷ்டப்பட்டு தவழ்ந்தேன்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

நான் ஒரு எரிமலையில் (volcano) ஏறி ஆரஞ்சு நிற லாவா (larva) கொதித்துக் கொண்டிருக்கும் கொப்பரையின் விளிம்பை எட்டிப் பார்ப்பது போல் உணர்ந்தேன். நீண்டு பார்த்தேன். என் தலையை எட்டி உள்ளே பார்த்தேன். நான் பார்க்க வேண்டிய அளவுத் தவிர கூடுதலாக நான் பார்க்கவில்லை. ரிச்சர்ட் பார்க்கரை நான் பார்க்கவில்லை. கழுதைப்புலியை (hyena) பார்க்க முடியவில்லை. வரிக்குதிரையின் (zebra) உடலில் மீதமிருந்த பகுதிக்கு பின்னால் இருந்தது. அது என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டு நான் பயப்படவில்லை . அது என்னிலிருந்து 10 அடி தூரத்தில் இருந்தாலும், என் இதயத்துடிப்பு ஒரு துடிப்பு கூட அதிகரிக்கவில்லை . ரிச்சர்ட் பார்க்கர் இருப்பது இதற்காவது உபயோகமாக இருக்கிறதே. புலி இருக்கும் போது, இப்படி ஒரு அற்பமான நாய்க்கு பயப்படுவது என்பது மரங்கள் சரிந்து விழுந்து கொண்டிருக்கும் போது சிறிய குச்சிகளுக்கு (splinters) பயப்படுவது போன்றதாகும். அந்த மிருகத்தை பார்த்து நான் மிகவும் கோபமுற்றேன்.

“அசிங்கமான (ugly), தவறான உயிரினமே (foul creature)” ஏனென்றால் என் இதய பலவீனத்தினால் அல்ல, என் உடல் பலமில்லாததினால் தான். என் வருகையை அந்த கழுதைப்புலி உணர்ந்ததா? அது தனக்குத்தானே “ஆல்பா என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார், அதனால் நான் அசையக்கூடாது” என்று சொல்லிக் கொண்டதா? தெரியவில்லை. எந்த நிலையிலும் அது அசையவில்லை.

உண்மையில் அது தன் தலையைத் தாழ்த்திக் கொண்ட விதத்தைப் பார்க்கையில், என்னைக் கண்டு அது மறைய முற்பட்டதாகவே தோன்றியது. ஆனால் மறைவதில் எந்த பயனும் இல்லை, மிக விரைவில் அதற்கான இனிப்பு கிடைக்கும்.

ரிச்சர்ட் பார்க்கர், அந்த மிருகத்திற்கே உரித்தான நடத்தையை (behaviour) வெளிப்படுத்தியது. கழுதைப்புலி ஏன் தன்னை ஒரு மிகச்சிறிய இடத்தில் சுருக்கிக் கொண்டு, வரிக்குதிரையின் உடலுக்குப் பின்னால் ஒளிந்திருந்தது என்றும், ஏன் அது வரிக்குதிரைக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தது என்றும் இப்போது தான் புரிந்தது. அது என்னவென்றால் மிகப்பெரிய மிருகத்தைக் கண்டு பயமும், அதனுடைய உணவைத் தொடுவதற்கான பயமும் ஆகும்.

இந்த ஒரு காரணத்தால் தான் இங்கே நிலவிய பதட்டமான தற்காலிக அமைதி என் இடைக்கால ஓய்வு எல்லாம் சாத்தியமானது. ஒரு மிக உயர்ந்த ஊன் உண்ணிக்கு முன்னால் நாம் எல்லோருமே இரை தான், அதனுடைய வழக்கமான இரைதேடல் பாதிக்கப்பட்டது. புலி இருப்பதனால் தான் நான் கழுதைப்புலியிடமிருந்து காப்பாற்றப்பட்டேன் என்பது கொதிக்கும் சட்டியில் இருந்து தீக்குள் விழுவதற்கான மிகச்சிறந்த உதாரணம்.

கழுதைப்புலி எடுத்துக் கொண்ட சுதந்திரத்தைப் பார்க்கும் போது, அந்த பெரிய விலங்கானது, தனக்கே உரித்தான நடத்தையை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. மூன்று நாட்களாக ரிச்சர்ட் பார்க்கர் ஏன் அசையவில்லை என்பதும் விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். என்னைப் பொருத்தவரை இரண்டு காரணங்கள் இருக்கலாம். உணர்ச்சியற்ற நிலை மற்றும் கடல்காய்ச்சல் (sea sickness). எனது தந்தை நிறைய விலங்குகளை அவைகளின் அழுத்தத்தைக் குறைக்க செயற்கை முறையில் உணர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு செல்வார்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

ஒருவேளை கப்பல் மூழ்குவதற்கு சற்று முன்பாக அவர் ரிச்சர்ட் பார்க்கர்களுக்கு உணர்ச்சியற்ற நிலைக்கு செல்லக் கூடிய மருந்தை அளித்திருக்கலாம். கப்பல் உடைந்த அதிர்ச்சி, சத்தம், கடலில் விழுந்து, உயிர்காக்கும் படகைப் பிடிக்க மிகக் கடினமாக இருந்தது, இவைகள் எல்லாம் உணர்ச்சியற்ற நிலையை அதிகப்படுத்தி விட்டனவா? அதன் பிறகு தான் கடல்காய்ச்சல் வந்ததா? இவைதான் அதற்கான நியாயமான (plausible) காரணங்களாக இருக்கமுடியும்.

இந்த கேள்வியில் என்னுடைய ஆர்வத்தை (interest) இழந்தேன். குடிநீர் மட்டுமே என்னுடைய ஆர்வமாக இருந்தது. படகின் உட்புறம் நுழைந்தேன். அது சரியாக 3 1/2 அடி ஆழமும், 8 அடி அகலமும், 26 அடி நீளமுமாக இருந்தது. இவை எல்லாம் அங்கு இருந்தே ஒரு நீண்ட இருக்கையில் கருப்பு எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்ததால் எனக்குத் தெரிந்தது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi 3

மேலும் அதில் அதிகபட்சமாக 32 நபர்கள் அமரலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை எல்லாம் அத்தனை நபர்களிடமும் பகிர்ந்து கொண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்? அதற்கு பதிலாக நாங்கள் 3 பேர் தான் இருந்தோம். அதுவும் மிக மோசமான கூட்டமாக (crowded) இருந்தது.

ஆரஞ்சு நிறம் தான் இங்கே உயிர்வாழ்வதற்கான நிறமாக இருந்தது, ஏனென்றால் படகின் மொத்த உட்புறம், மிதவைசட்டைகள் (tarpaulin), உயிர் காக்கும் படகு, துடுப்புகள் மற்றும் படகில் இருந்த குறிப்பிடத்தக்க பொருட்கள் அனைத்துமே ஆரஞ்சு நிறமாகத் தான் இருந்தது. நெகிழிகளும் (plastic), தலையில்லை விசில்களும் கூட ஆரஞ்சு நிறம்தான்.

படகின் முகப்பில் இருபுறமும் Tsimtsum மற்றும் Panama என்ற இரு வார்த்தைகள் பெட்டியின், கருப்பு, ரோமன் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தன. நான் இவைகளை வேண்டுமென்றே அறிந்து கொள்ளவில்லை. தேவையின் (necessity) விளைவாக இவை என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

நான் பயங்கரத்தினும் பயங்கரமான குறுகிய இடத்தில், இருண்ட எதிர்காலத்தை எதிர் கொண்டிருக்கையில், கிடைக்கும் ஏதாவது சில தகவல்களோ, பொருட்களோ இதனை மாற்றி என் எண்ணத்தில் ஒரு புதிய வெளிச்சத்தை கொண்டு வரும். இதற்கு முன்பு இருந்ததைப் போன்று இது இப்போது ஒரு மிகச்சிறியது அல்லது இவ்வுலகில் மிக முக்கியமான பொருள் என்னவென்றால் என் உயிரைக் காப்பாற்றும் பொருளே ஆகும். “தேவையே கண்டுபிடிப்பின் தாய்” என்பது எவ்வளவு பெரிய உண்மை (true).

உணவுப்பொருட்கள் கப்பலின் முகப்பில் தார்ப்பாயின் கீழே இருந்ததால் என்ன பண்ண முடியும்? நான் திரும்பி நகர்ந்து (crawled) சென்றேன். நான் ஒரு வறண்டு போன (dried out) பல்லியைப் (lizard) போல உணர்ந்தேன். தார்ப்பாய் விரைப்பாக நீட்டிக் கட்டப்ட்டிருந்தது. அதனை விரித்தால், நான் உணவுப்பொருட்கள் இருப்பதாக நினைக்க கூடிய இடத்திற்கு நேரடியாக செல்ல முடியும். ஆனால் அது ரிச்சர்ட் பார்க்கரின் குகைக்கு (den) ஒரு வழியை உண்டாக்கி விடும் என்றால் பயனற்றது.

எந்தக் கேள்வியுமின்றி தாகம் என்னைத் தள்ளியது. நான் அதனை சிறிது விரித்தேன். உடனடியாக (immediately) பலன் கிடைத்தது. படகின் பின்பகுதியைப் போன்றே முகப்பும் இருந்தது. அதில் கடைசியாக ஒரு நீண்ட இரக்கை இருந்தது. அதன் மேல் படகின் பகுதியில் இருந்து சில இஞ்ச்சு உயரத்தில் ஒரு கொக்கி, வைரம் (diamond) போல மின்னியது. அது ஒரு மூடியின் வெளிப்பகுதி. எனது இதயம் வேகமாக துடித்தது. நான் தார்ப்பாயை மேலும் சற்று விரித்தேன். நான் கீழே கூர்ந்து பார்த்தேன்.

அந்த மூடியானது 3 அடி நீளத்தில் 2 அடி ஆழத்தில் முனைகள் மழுங்கடிக்கப்பட்ட முக்கோணம் (rounded-out triangle) போலத் தோன்றியது. அந்த நேரத்தில் நான் ஒரு ஆரஞ்சு நிற பொருளைக் கண்டேன். நான் பயத்துடன் வேகமாக எனது தலையை வெளியே எடுத்தேன். ஆனால் அந்த ஆரஞ்சு நிற பொருள் நகரவில்லை, நான் தான் சரியாக பார்க்கவில்லை . நான் அதை மறுபடியும் பார்த்தேன்.அது புலி அல்ல. அது ஒரு மிதவைச் சட்டை. ரிச்சர்ட் பார்க்கரின் குகையின் பின்புறம் நிறைய மிதவைச் சட்டைகள் (jacket) இருந்தன.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

என் உடலில் ஒரு நடுக்கம் (shiver) ஏற்பட்டது. மிதவைச் சட்டைகளுக்கிடையில், பகுதியாக, இலைகளுக்கு நடுவில் தெரிவது போல தலையுடன் கூடிய ரிச்சர்ட் பார்க்கரை என்னுடைய சந்தேகமில்லாத (unambiguous) பார்வையில் கண்டேன். அதனுடைய இடுப்பு மற்றும் பின் பகுதியை மட்டும் தான் என்னால் பார்க்க முடிந்தது. பழுப்பு மஞ்சளாகி, மிகப்பெரியதாக இருந்தது.

அது படகின் பின்பகுதியை நோக்கி சுவாசிப்பதால் ஏற்படும் அசைவைத் தவிர வேறு எந்த அசைவும் அதில் இல்லை, எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது, அன்று நான் நம்பிக்கையில்லாமல் முழித்தேன். என்னிடம் இருந்தது 2 அடிக்கு கீழே அது இருந்தது. நீண்டு என்னால் அதன் கீழ்பகுதியை கிள்ளியிருக்கமுடியும். எங்களுக்கிடையில் எளிதில் சுருண்டு கொள்ளக் கூடிய ஒரு மெல்லிய தார்ப்பாயைத் தவிர ஏதும் இல்லை.

”கடவுளே என்னை காப்பாற்றும் (preserve)” என்று மெல்லிய மூச்சு காற்றினால் வேண்டுதல் சிறந்த வேண்டுதல் இல்லை. நான் அசைவின்றி படுத்தேன். எனக்கு குடிநீர் தேவையாயிருந்தது. நான் எனது கையை கீழே கொண்டு வந்து மெதுவாக அந்த கொக்கியை தூக்கினேன், மூடியை பிடித்து இழுத்தேன். அது ஒரு பெட்டியைத் திறந்தது. என் கால்களுக்கிடையின் வழியாக நான் கீழே பார்த்தேன். நான் மகிழ்ச்சியால் மயங்கி விழுவேன் என நினைத்தேன்.

திறந்த பெட்டியானது புதிய பொருட்களால் மின்னியது. ஆஹா! மனிதனால் தயாரிக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட சிறந்த பொருளின் சந்தோஷம்! பொருட்களை கொண்டு வந்த கணம், மகிழ்ச்சி (pleasure) பொங்குவது, நம்பிக்கை, ஆச்சரியம், அவநம்பிக்கை (disbelief), நன்றி, என அனைத்துமே ஒன்றாக ஒரு திடமான கலவையாகி, என் வாழ்வில் நான் கண்ட கிறிஸ்துமஸ், பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி அல்லது வேறு ஏதேனும் பரிசு வழங்கும் விழாக்களுக்கு ஈடு இணையற்றதானது. நான் ஆனந்த பூரிப்பினால் மயங்கினேன் (giddy).

நான் எதைத் தேடிக் கொண்டிருந்தேனோ, அதன் மேல் என் கண்கள் பட்டன. பாட்டிலிலோ, தகர குவளைகளிலோ (tin can) அல்லது அட்டை பெட்டியிலோ (carton), தண்ணீர் கச்சிதமாக கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படகில், கையில் எளிதில் பொருந்தக்கூடிய, வெளிரிய, தங்கநிற தகரகுவளைகளில் மதுவானது வழங்கப்பட்டது.

“குடி தண்ணீர்” என்று பழங்கால பெயர்த்தாளில் கருப்பு எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதனை தயாரித்த நிறுவனமானது HP உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் ஆகும். அவை 500 மிலி அளவு கொண்டிருந்தன. பார்த்தவுடன் எண்ண முடியாத அளவுக்கு அதிகமான பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன.

கை நடுக்கத்துடன் நான் கீழே இறங்கி ஒரு பாட்டிலை எடுத்தேன். தொடும் போது அது குளிர்ந்து கனமாக இருந்தது. அதை நான் குலுக்கினேன். அதனுள்ளிருந்த காற்று நுரையானது “கல்ப் கல்ப்” என சத்தத்தை உண்டு பண்ணியது. நான் என்னுடைய நரக தாகத்திலிருந்து விடுபட்டிருந்தேன், அந்த எண்ணத்திலே என் நாடி வேகமாக துடித்தது. நான் அந்த தகர குவளையை மட்டும் திறக்க வேண்டும். நான் ஒரு கணம் நின்றேன். நான் எப்படி இதனை திறப்பது?

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

என்னிடம் தகர குவளை உள்ளது. ஆகவே நிச்சயமாக தகர குவளை திறப்பான் இருக்க வேண்டும். நான் பெட்டியினுள் பார்த்தேன். அங்கு பெருமளவில் பொருட்கள் இருந்தன. வலியை உண்டாக்கும் எதிர்பார்ப்பு அதனுடைய வேலையைச் செய்தது. நான் இப்போதே குடித்தாக வேண்டும் அல்லது இறந்து விடுவேன். நான் தேடிய சாதனம் எனக்கு கிடைக்க வில்லை. ஆனால் தேவையில்லாமல் துயரப்படுவதற்கு நேரமில்லை. ஏதாவது செய்தாக வேண்டும். நான் விரல் நகங்களால் (finger nails) துளைக்க இயலுமா? நான் முயன்றேன் முடியவில்லை.

என் பற்களால் முயற்சி செய்யும் அளவுக்கு அது தகுந்தது அல்ல. படகின் மேற்படுகையிலும் தேடினேன். தார்ப்பாயின் கொக்கிகள் சின்னதாகவும், திடமாகவும் நான் நீண்ட இருக்கையின் மீது மண்டியிட்டு படுத்தேன். நான் என் இரு கைகளாலும் தகரக்குவளையைப் பிடித்துக் கொண்டு கொக்கிக்கு எதிராக ஒரு விசையாக அடி அடித்தேன். மீண்டும் செய்தேன். முதல் அடிக்கு அடுத்ததாக அடுத்த அடி அடித்தேன். பலமாக அடிமேல் அடிக்கும் யுத்தியை நான் கையாண்டேன். முத்து (pearl) போன்று ஒரு சொட்டு நீர் வந்தது. அதை சுவைத்தேன்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi 4

நான் அந்த குவளையை தலைகீழாக திருப்பி அதிலும் ஒரு துளை போட அதன் மறுபக்கத்தையும் கொக்கி எதிராக பலமாக அடித்தேன். நான் ஒரு பிசாசு (fiend) போல முயன்றேன். நான் ஒரு பெரிய துளையிட்டேன். படகின் மேற்புறம் (gunnel) அமர்ந்தேன். தகரக்குவளையை என் முகத்திற்கு நேராக தூக்கிப்பிடித்தேன். வாயைத் திறந்தேன். குவளையை குலுக்கினேன்.

என்னுடைய உணர்வுகளை உணரமுடியுமே தவிர விவரிக்க முடியாது. சுத்தமான, சுவையான, அழகான தெளிந்த நீரானது உன் வறண்ட பேராசை பிடித்த தொண்டையில் சத்தத்துடன் (gurgling) பாய்ந்தது. அது நீரோட்டமான வாழ்க்கையாக இருந்தது. அந்த தங்க குவளையில் கடைசி சொட்டு வரை காலி செய்து, ஏதேனும் ஈரப்பதமானது மீதம் இருக்கிறதா என்று துளையின் வழியே உரிஞ்சினேன்.

நான் சந்தோஷத்தில் “ஆ” என்று திளைத்து அந்தக் குவளையை மேலே எறிந்து. அடுத்த குவளையை எடுத்தேன். முதல் குவளையை திறந்தது போலவே அடுத்த குவளையையும் திறந்தேன். அதனுள்ளிருந்தவை அடுத்த கணமே காலியானது. அது கூட நீரில் மிதந்தது. நான் அடுத்த குவளையை திறந்தேன்.

அதுவும், உடனே முடிந்தவுடன் கடலில் எறியப்பட்டடது. அடுத்த குவளையும் காலியாகி கடலில் அனுப்பப்பட்டது (dispatched). நான் 4 குவளைகளில் இருந்த 2 லிட்டர் அளவுள்ள அழகிய தேன்துளிகளை பருகிவிட்டு நிறுத்தினேன்.

மிக நீண்ட தாகத்திற்கு பிறகு, இவ்வளவு வேகமாக நீரைப் பருகினால், என் உடலைப் பாதிக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. இதைவிட சிறந்ததாக நான் என் வாழ்வில் உணர்ந்ததே இல்லை. ஏனென்றால், என் கண் இமை, நெற்றிப்பகுதி, சுத்தமான, புத்துணர்வின் வியர்வையில் நனைந்து இருந்தன. என்னுள் இருந்த அனைத்துமே, என் தோள்துளைகள் வழியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

நன்றாக இருப்பது போல (well being) உணர்வு உடனடியாக எனக்குள் வந்தது. என் வாய் ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாறியது. என் தொண்டையின் பின்புறம் ஏற்பட்ட வலியை நான் மறந்தேன். என் உடல் தோல் தளர்வானது. என் உடல் இணைப்புகள் மிக எளிதாக அசைந்தன.

என் இதயம் ஒரு மகிழ்ச்சியின் மேளம் (drum) போல் அடித்துக் கொண்டும், இரத்தமானது என் நரம்புக்குள், திருமண நிகழ்ச்சியில் இருந்து நகரத்துக்குள் ஒலி எழுப்பிக் கொண்டே நுழைவது போல பாய்ந்தது. என் தலை தெளிவாக மாறியது. உண்மையில், நான் சாவிலிருந்து மீண்டு திரும்பவும் பிழைத்து வந்தேன்.

நான் வெற்றியடைந்தேன். மது அருந்துவது இழிவானது, ஆனால் குடிநீரை பருகுவது புனிதமானது மற்றும் பேரானந்தத்தில் மகிழ்ந்து பல நிமிடங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் 124 நாட்கள் வாழத் தேவையான (rations) நீர் அங்கே இருந்தது. இவ்வளவு எளிதான ஒரு கணக்கு இப்படி ஒரு புன்னகையை என் முகத்தில் கொண்டு வந்ததே இல்லை.

ரிச்சார்ட் பாக்கரே என்னை அமைதியாக்கியது. இக்கதையின் முரண்பாடு என்னவென்றால், என்னை அறிவற்று எதுவும் செய்யவிடாமல் பயமுறுத்திய ஒன்று தான், எனக்கு அமைதியையும். நோக்கத்தையும், இன்றும் தைரியமாக சொல்லுவேன் எனக்கு முழுமையையும் (wholeness) தந்தது.

நான் ரிச்சர்ட் பார்க்கரை அடக்கியாக வேண்டும். அந்த நேரத்தில் தான் நான் அதனுடைய தேவையை (necessity) உணர்ந்தேன். இது என்னுடைய கேள்வியோ அல்லது அதனுடைய கேள்வியோ அல்ல, இது எங்களின் கேள்வி. நாங்கள் எழுத்துப்பூர்வமாகவும் (literally), அடையாளப்பூர்வமாகவும் (figuratively) ஒரே படகில் தான் இருந்தேன். நாங்கள் சேர்ந்தே வாழ்வோம் அல்லது இறந்தால் சேர்ந்தே இறப்போம்.

அது ஒரு விபத்தில் சாகடிக்கப்படலாம் அல்லது இயற்கை காரணிகளால் இறந்து போகலாம், ஆனால் இது மாதிரி முடிவுகளை எண்ணுவது முட்டாள்தனமானது. இந்த குறுகிய காலத்தில், அதனுடைய மிருக திடகாத்திரமானது என்னுடைய மனிதபலவீனத்தை விட நீடித்து இருக்கும். நாங்கள் இந்த வருத்தமான முடிவுக்கு வர வேண்டுமென்றால் நான் அதனை அடக்கினால் மட்டுமே, ஏதாவது தந்திரம் செய்து அதனை முதலில் சாகடிக்க முடியும்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

ஆனால் அதில் நிறைய இருக்கிறது. நான் அவற்றை தெளிவாக செய்வேன். நான் உங்களுக்கு ஒரு இரகசியம் (secret) சொல்கிறேன். என்னில் ஒரு பகுதி ரிச்சர்ட் பார்க்கரைக் குறித்து மகிழ்ச்சியாய் இருந்தது. என்னில் ஒரு பகுதி ரிச்சர்ட் பார்க்கர் ஒருபோதும் சாகக் கூடாது என்றது, ஏனென்றால் அது இறந்து விட்டால், புலியை விட பயங்கரமான எதிரியான விரக்தியுடன் நான் தனிமையில் விடப்படுவேன். எனக்கு இன்னமும் வாழ வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கிறதென்றதால் நான் ரிச்சர்ட் பார்க்குக்கு தான் நன்றி கூறுவேன்.

என்னுடைய குடும்பத்தைப் பற்றியும், என்னுடைய சோகமான (tragic) சூழ்நிலையைப் (circumstances) பற்றியும் என்னை சிதறடிக்க விடாமல் செய்தது ரிச்சர்ட் பார்க்கர் தான். என்னை வாழ்வது நோக்கி அது தள்ளியது. அவ்வாறு செய்ததற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். ரிச்சர்ட் பார்க்கர் இல்லையென்றால், நான் என்னுடைய கதையை இன்று உங்களிடம் சொல்வதற்கு உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்பது தான் அப்பட்டமான உண்மை.

நான் ஒர வனாந்தரத்தில் (jungle) ரிச்சர்ட் பார்க்கரை விட்டு விட்டு கப்பலுக்காக காத்திருந்தேன். அந்த மிருகம் ஒரு தடவை கூட தலையை திருப்பி கடைசியாக (glimpse) என்னைப் பார்க்கவில்லை என்பது என்னை மிகுந்த வேதனையடையச் செய்தது. ஒரு கப்பல் என்னை கண்டறிந்து, மேலும் என் குடும்பத்துடன் இப்போது மறுபடியும் இணைந்திருக்கிறேன் (reunited).


Life of Pi Poem Summary in English

Here we have uploaded the Life of Pi Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Here is a compilation of the life of the fictional and adventurous 2001 Canadian novel 'Pi' by Yan Martel. The protagonist of this story is an Indian boy from Pondicherry - Piss's Molidar Patal 'Pi'. After his shipwreck, he lives alone in a lifeboat with the Bengal tiger 'Richard Parker' for 227 days in the Pacific Ocean.

'After I was orphaned, alone in the middle of the Pacific Ocean, an adult tiger in front of me, with sharks below me, and a raging storm destroying me, I was clinging to the boat. If I had considered my prospects, I would certainly have dropped the oar as it would have been better to drown in the sea than to be eaten alive by a tiger. I do not remember thinking about my safety in the early minutes when I got on the boat. I didn’t even notice the day and night. I just kept putting the paddle on. Only God knows why.

The elements there allowed me to survive, the lifeboat did not sink. Richard Parker (tiger) did not slip in the eye. Sharks roamed, but did not attack. The waves were fanning over me. But that didn’t push me down. I saw the ship we came in, making a loud burbling and disappearing. The light flickered, then disappeared.

Nano was on another lifeboat, waiting to see if my family or survivors would come and give me hope. Nothing like that happened. The rain and the waves of the marauding Black Sea and the wreckage of the ship were floating. Darkness melted from the sky, the rain stopped, and I could not stay where I was until the last.

I was cold. My neck was in a lot of pain as I was lifting my head and the actions I did to lift my head. My back ached even though I was wearing a lifebuoy. I had to look up even more to see if any other boats were coming.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi 1

In the morning I could not move at all. I was fitted with a tarpaulin on top of the boat due to my disability. Even thinking made me tired. I made up my mind to think straight. Some thoughts came to me when I saw camels slowly crossing a desert in a long line. For the first time I thought there was a livelihood.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 2 Life of Pi

For the past 3 days I have been able to diagnose a drop of water or a mouthful or these as the cause, so I got a little stronger. Richard Parker was still on the boat with me. In fact, it was down to me.

Such an incredible (incredible) event must be admitted to be true, but in my opinion I have explored different moods and concluded that what I have concluded is that it is a false dream, illusion, or false memory, except for the solid truth that I felt in my inability and in my most tense state. , Or not a fancy event or other lie. When I research this, its authenticity will be confirmed.

It is a mystery how I did not notice that the Bengal tiger, which weighed 450 pounds and was 26 feet long, was in the boat with me for 21/2 days. When I have more energy, I will find the answer (solve). Generally speaking, it would be Richard Parker who made the biggest stowaway trip in history.

Its nose was more than a third the length of the boat from tip to tail. You may think I have lost all hope. I lost. As a result I felt better as a median gain (perked).

We've seen this in games more often. Isn't it The opponent of the champion in a game of tennis plays well in the beginning. But he will soon lose confidence. The champion player captures the game points. But in the last game, when the opponent has nothing to lose, he is very brave, relaxed and tense.

He suddenly plays very hard like Satan (devil) and makes the champion work very hard to get the last points. The same situation was with me. Dealing with a Hyena is impossible, but my life is over when I look at Richard Parker. When dealing with it, why not do something about my parched throat


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Life of Pi Poem Summary in Tamil


How to get Life of Pi Poem in Tamil Summary??

Students can get the Life of Pi Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Life of Pi Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List