Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Two Gentlemen of Verona Chapter Summary in Tamil & English Free Online

Two Gentlemen of Verona Poem Summary in Tamil PDF
Two Gentlemen of Verona Poem Summary in Tamil

Two Gentlemen of Verona Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Two Gentlemen of Verona Poem in Tamil. Also, in this article, we will also provide Two Gentlemen of Verona Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Two Gentlemen of Verona Poem Summary in Tamil please let us know in the comments.


Two Gentlemen of Verona Poem Summary in Tamil


Poem

Two Gentlemen of Verona Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Two Gentlemen of Verona Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Two Gentlemen of Verona Poem Summary in Tamil Post.

Two Gentlemen of Verona Poem Summary in Tamil

Students can check below the Two Gentlemen of Verona Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


நாங்கள் மகிழுந்தில் (Car) வெரோனா புறநகர்பகுதியில் ஆல்ப்ஸ் (Alps) மலையின் அடிவாரம் வழியாக பயணித்த போது இரு சிறுவர்கள் எங்களை நிறுத்தினர். அவர்கள் காட்டு ஸ்ட்ராபெரி (strawberry) பழங்களை விற்றுக் கொண்டிருந்தனர். ”வாங்காதீர்கள்” என்று, எங்களின் எச்சரிக்கையான (Cautious) வாகன ஓட்டுநர் லூகி (Luigi) கூறினான். “வெரோனா நகரின் உட்பகுதியில் இதை விட சிறந்த பழங்களை நீங்கள் பெறலாம். மேலும் இந்தப் பையன்கள்….” என்று அவர்களின் அழுக்குத் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் அவரது தோளை அழுத்தினார். ஒரு சிறுவன் மேலாடையையும், வெட்டப்பட்ட காக்கி காற்சட்டையையும் அணிந்திருந்தான்.

மற்றொருவன் சிறியதாக்கப்பட்ட, முழங்கால் வரை அணியக்கூடிய உடையை அவனது மெல்லிய உடம்பில் தொளதொளவென் அணிந்திருந்தான். பழுப்பு நிறத்தையும், கலைந்த முடியையும், ஊக்கமான கண்களையும் உடைய அந்த இரு சிறிய உருவங்களை இன்னும் கூர்ந்து நோக்கியபடியே, நாங்கள் அவர்களால் கவரப்பட்டதை உணர்ந்தோம். என்னுடன் வந்தவர் (companion), அச்சிறுவர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களிருவரும் சகோதரர்கள் என்று அறிந்தார். மூத்தவன் பெயர் நிக்கோலா (Nicola), வயது 13; எங்கள் காரின் கதவின் அருகே வந்து நின்றவன் பெயர் ஜாகோபா (Jacopo), வயது 12-யை நெருங்கும். நாங்கள் அவர்களின் பெரிய கூடை முழுவதையும் வாங்கிக்கொண்டு (bought) நகரத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

அடுத்த நாள் காலையில் நாங்கள் எங்கள் விடுதியில் இருந்து வெளியே வந்தபோது, எங்களின் அந்த நண்பர்கள் காலணிகளை பளபளப்பாக்கும் பெட்டியில் (shoe shine box) குணிந்தவாறு, நகரின் பொது சதுக்கத்தின் (public square) நீர்வீழ்ச்சி அருகில் சுறுசுறுப்பாக வேலை செய்வதைக் கண்டோம்.

சிறிது நேரம் அவர்களைக் கவனித்தோம் (watched). அவர்களின் தொழில் மந்தமான (slackened) போது நாங்கள் அவர்களிடம் சென்றோம். அவர்கள் எங்களை இன்முகத்தோடுவரவேற்றார்கள் “நீங்கள் வாழ்வாதாரத்திற்கு தான் பழங்களை விற்றீர்கள் என்று நினைத்தேன்” என்றேன்.

“நாங்கள் நிறைய வேலைகள் பார்ப்போம்” ஐயா என்றான் நிக்கோலா. அவன் நம்பிக்கையுடன் (hopefully) எங்களை நோக்கினான். “நாங்கள் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு இந்த நகரத்தையும், ஜீலியட்டின் கல்லறையையும் மற்றும் அவர்கள் விரும்பும் இடங்களையும் சுற்றிக்காண்பிப்போம்’, என்றான்.

நான் புன்னகையுடன் “சரி எங்களுக்கும் சுற்றிக் காண்பி” என்றேன். நாங்கள் சுற்றிப்பார்த்து கொண்டிருந்த போது, அவர்களின் குறிப்பிடத்தக்க நடத்தை (demeanour) என் ஆர்வத்தை மேலும் தூண்டியது. அவர்கள் குழந்தைத்தனத்துடன் பல செயல்களில் கள்ளக்கபடமில்லாமல் (artless) இருந்தார்கள். ஜாகோபா அணிற்பிள்ளைப் (squirrel) போன்று மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தான். நிக்கோலா எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இருந்தான். இருந்தாலும் அச்சிறுவர்களின் குழந்தை முகங்களில், அவர்களின் வயதுக்கு அப்பாற்பட்ட தீவிரம் (seriousness) காணப்பட்டது.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 1 Two Gentlemen of Verona

அதற்கு அடுத்த வாரத்தில் அவர்களை நாங்கள் அடிக்கடி (frequently) பார்த்தோம். அவர்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக (useful) இருந்தார்கள். எங்களுக்கு அமெரிக்க சிகரெட்டுகள் வேண்டுமென்றாலும், இசை நிகழ்ச்சிக்கு சீட்டு வேண்டுமென்றாலும், நல்ல உணவகத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் எங்களின் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் நிக்கோலா மற்றும் ஜாகோபாவை நம்பினோம். அவர்களின் வேலை செய்யும் ஆர்வம் எங்களை வெகுவாக ஈர்த்தது. இந்த கடுமையான வெயிலிலும் அவர்கள், காலணிகளை பளபளப்பாக்குதல், பழங்கள் விற்றல், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று செய்தித்தாள்களை விற்றல், பார்வையாளர்களை சுற்றிக் காண்பித்தல் என அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்தனர்.

ஒரு நாள் இரவு அவர்களை காற்றோட்டமான, ஆள் நடமாட்டமில்லாத (deserted), சதுக்கத்தின், விளக்குகளுக்கு கீழே, கல் நடைபாதையில் (pavement) ஓய்வெடுப்பதை கண்டோம். நிக்கோலா கலைப்புடன் அமர்ந்திருந்தான். விற்காத ஒரு கட்டு செய்தித்தாள்கள் அவன் காலடியில் கிடந்தன. ஜாகோபா, அவனது சகோதரரின் தோளின் மேல் தலைவைத்து தூங்கி கொண்டிருந்தான். நேரம் நள்ளிரவை நெருங்கியது.

“ஏன் இவ்வளவு நேரம் இங்கே இருக்கிறீர்கள், நிக்கோலா?”

“பதுவாவிலிருந்து (Padua) வரும் கடைசி பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது வந்தவுடன் எங்களின் அனைத்து செய்தித்தாள்களையும் விற்று விடுவோம்”. என்றான்.

“நீங்கள் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமா? பார்பதற்கு மிகவும் களைப்பாக (tired) இருக்கிறீர்கள்”. என்று நான் கேட்டேன்.

“நாங்கள் அதனை குறையாக தெரிவிக்கவில்லை ஐயா”, என்றான்.

மறுநாள் காலை நான் காலணிகளை பளபளப்பாக்க சதுக்கத்தின் நீர்வீழ்ச்சி அருகே சென்றபோது, “நிக்கோலா, நீங்கள் உழைப்பதைப் பார்த்தால் நீங்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும். நீங்கள் ஆடைகளில் செலவலிப்பதில்லை. மிகக் குறைவாகவே சாப்பிடுகிறீர்கள், வழக்கமாக நீ கருத்த ரொட்டித்துண்டு (blackbread) மற்றும் அத்திப்பழங்களை (figs) மட்டுமே சாப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று என்னிடம் சொல்”.

அவன் உடனே குழம்பிப்போய் மிகுந்த வருத்தமுற்றான். பின்பு தரையைப் பார்த்துக் குணிந்தான்.
”அமெரிக்காவிற்கு புலம் பெயர்வதற்காகவா (emigrate) பணத்தை சேமிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவன் என்னை பக்கவாட்டில் பார்த்து பேசினான். “எங்களுக்கும் அமெரிக்கா போக வேண்டும் என்று பெரிய ஆசை உண்டு” ஆனால், இங்கே, இப்போது நாங்கள் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறோம்”.

“என்ன திட்டங்கள்?” (plans)
அவன் சங்கடத்துடன் (uncomfortably) புன்னகைத்தான். “சாதரணமான திட்டங்கள் தான்”, என்றான் மெதுவான குரலில்.

“நல்லது,” “நாங்கள் வரும் திங்கட்கிழமை புறப்படுகிறோம். நாங்கள் புறப்படுவதற்குள் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?” என்றேன். வேண்டாமென் நிக்கோலா தலையை அசைத்தான். ஆனால் திடிரென ஜாகோபா, ஐயா நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் முப்பது கிலோமீட்டர் அப்பால் இருக்கக்கூடிய ‘பொலேடா (Poleta) என்ற இடத்திற்கு வாடகை மிதிவண்டியில் (hire bicycles) செல்வோம். நீங்கள் எங்களிடம் மிக கனிவுடன் நடந்து கொள்வதால், நாளை எங்களை உங்கள் காரில் அங்கு அழைத்து செல்லலாம் என்றான். நான் லூகியிடம் ஞாயிற்றுகிழமை ஓய்வு. இருந்தபோதும் உங்களுக்காக கார் ஓட்டுகிறேன்” என்று பதிலளித்தேன்.

சிறிய இடைவெளிக்குப்பின், நிக்கோலா அவனது சகோதரனை எரிச்சலுடன் (Vexation) முறைத்தான். “உங்களுக்கு தொந்தரவு வேண்டாம் என்று நினைத்தோம் ஐயா”
“இது ஒன்றும் தொந்தரவு இல்லை”.

தனது உதட்டை கடித்தபடியே மெல்லிய குரலில் சரி நல்லது’ என்றான். அடுத்த கிராமத்திற்கு காரில் பயணமானோம். நாங்கள் அங்கு வசிக்கக் கூடிய இடம் மிகச்சாதரணமாகத்தான் இருக்கும் என கற்பனை செய்திருந்தேன். ஆனால், ஜாகாபாவோ எங்களை பெரிய சிவப்புக் கூரையிட்ட, பெரிய கல் சுவரால் சூழப்பட்ட கிராமப்புற வீட்டுக்கு அழைத்துச் சென்றான். என்னால் என் கண்களையே நம்பமுடியாமல் திகைத்திருந்த வேளையில், என்னுடன் வந்த இரு பயணிகளும் காரில் இருந்து குதித்து இறங்கினர்.

“நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம் ஐயா, ஒரு மணி நேரம் மட்டுமே. நீங்கள் இங்கே உள்ள தேநீர் கடையில் ஏதேனும் அருந்த விரும்புகிறீர்களா?”. அவர்கள் இருவரும் சுவரின் பின்னால் மறைய (disappear) ஆரம்பித்தனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு, நானும் அவர்களை பின்தொடர்ந்தேன். நான் கம்பியினால் ஆன ஒரு வாசலைக் கண்டேன். தீர்மானமாக (determinedly) அழைப்பு மணியை அடித்தேன்.

இரும்பு வளையத்தினால் (steel-rimmed) ஆன கண்ணாடியை அணிந்த ஒரு கனிவான பெண்மணி வந்தாள். அந்த பெண்மணி வெள்ளை நிற செவிலியர் உடையுடன் வந்தாள். நான் வியந்து பார்த்தேன்.

“நான் இங்கே இரு சிறுவர்களை அழைத்து வந்தேன்”. ஓ! அப்படியா! என்று அவர் முகம் பிரகாசமானது. அவள் கதவை திறந்து என்னை உள்ளே அனுமதித்தாள். நிக்கோலா, ஜாகோபாவிடம், நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்றேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 1 Two Gentlemen of Verona

அவள் என்னை குளிர்ந்த, பளிங்கினால் ஆன தாழ்வாரம் (vestibule) வழியே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள். (அந்த கிராமத்து வீடே இப்போது மருத்துவமனையாகி இருந்தது. ஒரு சிறிய படுக்கை அறையின் வாசலில் அவள் நின்று, தன் வாயில் அவள் கையை வைத்து புன்னகைத்தப்படி, கண்ணாடி பிளவின் (glass partition) வழியே என்னைப் பார்க்கச் சொன்னாள்.

அந்த இரு பையன்களும், 20 வயது மதிக்கத்தக்க அழகான பின்னலாடை அணிந்திருந்த தலையணைகளால் தாங்கப்பட்டு படுக்கையிலிருந்த பெண்ணின் அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தனர். அந்த பெண் அவர்கள் பேசுவதைக் (chatter) கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் இளமையாகவும், மென்மையாகவும் இருந்தது. பார்த்தவுடன் அவளது தோற்றம் அவளுடைய சகோதரர்களை ஒத்திருப்பதை யாராலும் சொல்ல முடியும். அவளது மேசையில் ஒரு ஜாடி நிறைய காட்டு மலர்களும், கூடவே பழங்களும், நிறைய புத்தகங்களும் இருந்தன.

“நீங்கள் உள்ளே போகவில்லையா?” என்று முனுமுனுத்தாள் அந்த செவிலியப் பெண். “உங்களைப் பார்த்தால் ‘லூசியா (Lucia) மகிழ்வாள்” என்றாள் செவிலி.

நான் தலையை அசைத்து மறுத்த படியே அங்கிருந்து நகர்ந்தேன். அவர்களின் மகிழ்ச்சியான குடும்ப சந்திப்பின் போது உள்ளே நுழைய வேண்டாம் என்று நான் நினைத்தேன். ஆனால் படிகட்டுகளின் கீழே நின்று அவளிடம் அந்த இரு சிறுவர்களைப் பற்றி நீ அறிந்ததை கூறு என்று கெஞ்சி (begged) கேட்டேன். அவளும் சம்மதித்தாள்.

“அவர்கள் இருவருக்கும் அவர்களின் அக்கா லூசியாவைத் தவிர இவ்வுலகில் யாரும் கிடையாது” என்று விவரித்தாள் (explained). மனைவியை இழந்த அவர்களின் தந்தை ஒரு நல்ல பாடகர் (singer), அவர் போர்காலத்தில் கொல்லப்பட்டார்.

பின் சிறிது காலத்தில் அவர்கள் வீட்டின் மீது ஒரு குண்டு விழுந்து, இம்மூன்று சிறுவர்களையும் வீதிக்கு தூக்கி எறிந்தது. அவர்கள் எப்போதும் சுகமான (comfortable) வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். லூசியாவோ ஒரு பாடகராக பயிற்சி செய்து கொண்டிருந்தாள். மேலும் அவர்கள் கடுங்குளிரினாலும், பசியினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

பல மாதங்கள், அவர்கள் பழைய செங்கல் மற்றும் சிறந்த பொருள்களினால், அவர்களே செய்த கூடாரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அதன்பின் 3 வருடங்கள் ஜெர்மனியர்கள் இந்த நகரை ஆண்டார்கள் ஜெர்மானியர்களை (Germans) வெறுத்தபடியே (hate) இச்சிறுவர்கள் வளர்ந்த னர்.

“ஜெர்மானியர்களை எதிர்த்து எதிர்ப்பு இயக்கம் (resistance movement) தோன்றிய போது இவர்கள் முதலில் போய் அதில் இணைந்தனர். போர் முடிவடைந்து அமைதி திரும்பியபோது, அவர்கள் தங்கள் அன்பிற்குரிய சகோதரியிடம் திரும்பி வந்தார்கள். மேலும் தங்களது சகோதரி முதுகெலும்பு காசநோயால் (tuberculosis) பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார்கள்”, என்று அவள் ஒரு கணம் நிறுத்தி மூச்சை உள்ளிளுத்தாள்.

“அவர்கள் அவளை கை விட்டு (give up) விட்டார்களா? என்ற கேள்விக்கு நான் பதில் கூற வேண்டியதில்லை. அவர்களே அவளை இங்கு கொண்டு வந்து எங்களிடம் அவளை இந்த மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளும் படி வேண்டி கேட்டுக் கொண்டார்கள், இந்த 12 மாதங்கள் அவள் எங்கள் நோயாளியாகவே (patient) இருக்கிறாள், மேலும் அவளது நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. அவள் மீண்டும் எழுந்து வந்து பாடுவாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது”.

“இங்கு எல்லாமே இப்போது மிக கடினமாக (difficult) உள்ளது. எனவே உணவு, தங்குமிடம் என அனைத்திற்கும் நாங்கள் பணம் வசூலிக்கவில்லையென்றால் எங்களால் மருத்துவமனையை நடத்த இயலாது. ஆனால் ஒவ்வொரு வாரமும் லூசியாவின் சகோதரர்கள் அவளுக்கான கட்டணத்தை (payment) செலுத்திவிடுவார்கள்.

அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை, நானும் கேட்பதில்லை. வெரோனா நகரில் வேலைக் கிடைப்பது மிகக் கடினம். என்னவாக இருந்தாலும் சரி, அவர்கள் நன்றாக செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்”.

“ஆமாம், இதைவிடச் சிறப்பாக அவர்களால் செய்ய இயலாது” என்று நானும் சம்மதித்தேன் (agreed). அவர்கள் என்னிடம் வரும் வரையில் நான் வெளியே காத்திருந்தேன். வந்ததும் மீண்டும் நகருக்கு திரும்பினோம். அவர்கள் என்னிடம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். நானும் அவர்களிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. அவர்கள் தங்கள் சகோதரி குறித்த இரகசியத்தை (secret) தங்களுடன் மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும்.

போர் (war) அவர்களது மனநிலையை உடைக்கமுடியவில்லை . அவர்களின் தன்னலமற்ற செயல், மனித வாழ்க்கைக்கு ஒரு புதிய பெருந்தன்மையையும் (nobility), மனித சமுதாயத்திற்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் (hope) தரக்கூடிய உறுதியையும் அளித்துள்ளன.


Two Gentlemen of Verona Poem Summary in English

Here we have uploaded the Two Gentlemen of Verona Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Two boys stopped us as we were traveling by car through the foothills of the Alps on the outskirts of Verona. They were selling wild strawberry fruits. 'Don't buy,' said Luigi, our cautious driver. “You can get better fruit than this in the inner city of Verona. And these guys. ” That pressed his shoulder in such a way as not to accept their dirty appearance. A boy was wearing an overcoat and cropped khaki pants.

The other wore a miniature, knee-length dress that hung loosely over his slender body. As we stared further into those two little figures with brown hair, disheveled hair, and cheerful eyes, we realized we were fascinated by them. The one who came with me (companion) talked to the boys and knew that they were both brothers. Eldest name is Nicola, age 13; The man who came and stood near the door of our car was named Jacopo, approaching 12 years of age. We bought all their big baskets and headed for the city.

When we came out of our hotel the next morning, we saw our friends working actively near the waterfall in the city's public square, with their shoes folded in a shoe shine box.

We watched them for a while. We went to them when their industry was slackened. They greeted us warmly and said, 'I thought you sold fruit for a living.'

'We'll see a lot of work,' said Nicola. He looked at us hopefully. 'We'll be giving visitors a tour of this city, Jilliat's tomb and the places they love,' he said.

I smiled and said, 'Okay, show us around.' As we toured, their remarkable demeanor piqued my curiosity. They were childless and artless in many activities. Jacoba was as active as a squirrel. Nicola was always with a smiling face. However, on the children's faces of the children, seriousness beyond their age was seen.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 1 Two Gentlemen of Verona

The next week we saw them frequently. They were very useful to us. Whether we wanted American cigarettes, tickets to a concert, or going to a good restaurant, we relied on Nicola and Jacoba to meet our needs. Their interest in working attracted us greatly. Even in the scorching sun, they did all the work of polishing shoes, selling fruits, taking newspapers from one place to another, and showing off to visitors all at once.

One night we saw them resting on the stone pavement under the lights of the airy, deserted square. Nicola sat up with the dissolution. A bundle of unsold newspapers lay at his feet. Jacoba was sleeping with his head on his brother's shoulder. The time was approaching midnight.

'Why have you been here so long, Nicola?'

“We are waiting for the last bus from Padua. We will sell all our newspapers as soon as it arrives. ” Said.

“Do you have to work so hard? You are too tired to look. ” I asked.

'We did not underestimate it, sir,' he said.

The next morning when I went near the waterfall in the square to polish my shoes, he said, “Nicola, you have to earn a lot if you see yourself working. You don’t spend on clothes. You eat very little, and I'm usually seen you eat only blackbread and figs. What do you do with your money? Tell me that ”.

He was immediately confused and very upset. Then he looked at the floor and nodded.
'Are you saving money to emigrate to the United States?' I asked. He looked at me sideways and spoke. 'We also have a great desire to go to the United States.' But here and now we have other plans. '

'What plans?' (plans)
He smiled uncomfortably. 'Simple plans,' he said in a slow voice.

'Good,' we said, leaving next Monday. Do you want to do something before we leave? ” என்றேன். Nicolas shook his head. But suddenly Jacoba, sir we are thirty kilometers every Sunday


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Two Gentlemen of Verona Poem Summary in Tamil


How to get Two Gentlemen of Verona Poem in Tamil Summary??

Students can get the Two Gentlemen of Verona Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Two Gentlemen of Verona Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List