Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Summit Chapter Summary in Tamil & English Free Online

The Summit Poem Summary in Tamil PDF
The Summit Poem Summary in Tamil

The Summit Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Summit Poem in Tamil. Also, in this article, we will also provide The Summit Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Summit Poem Summary in Tamil please let us know in the comments.


The Summit Poem Summary in Tamil


Poem

The Summit Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Summit Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Summit Poem Summary in Tamil Post.

The Summit Poem Summary in Tamil

Students can check below the The Summit Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


“எவரெஸ்ட்டிற்கு ஏறும் வழி” (The Ascent of Everest) என்னும் ஜான் ஹன்ட் (John Hunt) எழுதிய நூலை சற்று தழுவி இப்பாடப்பகுதி எடுக்கப்பட்டது. எவரெஸ்ட் சிகரம் எவ்வாறு அடையப்பட்டது என்பது சர் எட்மெண்ட் ஹிலாரியின் (Sir Edmund Hillary) சொந்த வார்த்தைகளால் சொல்லப்படுகிறது.

மே 28ல் தெற்கு கணவாயில் போடப்பட்ட முகாமில் 8 பேர் இருந்தனர், முறையே எட்மெண்ட் ஹிலாரி (Edmund Hillary), டென்சிங் (Tenzing), ஜார்ஜ் லோ (George Lowe), அல்பிரட் கிரிகோரி (Albert Gregory) மற்றும் இரண்டு செர்பாக்கள் (Sherpas), பெம்பா (Pemba), அங்க் நியிமா (Ang Nyima). ஆனால் பெம்பா ஏற முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மற்றவர்கள் அதிக சுமையுடன் அன்று 27900 அடி ஏறினர். அங்கே ஹிலாரியும், டென்சிங்கும் சிறிய கூடாரத்தில் இருந்து அவர்களுடன் வந்த மூன்று நபர்கள் முகடுகளில் சறுக்கி தெற்கு கணவாய்க்கு திரும்புவதை கண்டார்கள்.

சூரியன் மறையும் போது, ஹிலாரி மற்றும் டென்சிங் தங்கள் கூடாரத்திற்குள் சென்று, வெப்பம் தரும் (warm clothing) ஆடைகளை அணிந்து, தூங்கும் பைகளுக்குள் நெளிந்து சென்றார்கள். மறுநாள், மே 29ல் காலை 4 மணிக்கு ஏறுவதற்கு அவர்கள் தயாரானார்கள் (ready).

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

நாங்கள் எங்களது சூட்டடுப்பை (cooker) பற்ற வைத்து, அதிக அளவு எலுமிச்சை சாறையும் (lemon juice), சர்க்கரையும் (sugar) கலந்து குடித்தோம், அதன்பின் எங்களது கடைசி தகரக்குவளையில் உள்ள சார்டின் (sardines) எனப்படும் கடல் உணவையும், பிஸ்கெட்டையும் எடுத்துக் கொண்டோம். நான் எனது ஆக்சிஜன் தொகுப்பு பொருட்களை கூடாரத்தின் உள்ளே இழுத்து, அதன் மேலிருந்த பனிக்கட்டிகளை சுத்தம் செய்து அதனை பரிசோதனை செய்து சோதித்து பார்த்தேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit 10

முந்தைய நாள் ஈரமாயிருந்து. இன்று உறைந்து போன (frozen) எனது காலணிகளை கழற்றினேன். எனவே அவைகளை நான் அடுப்பில் இருந்து வரும் புகையினால் சூடேற்றி மென்மையாக்கினேன். எங்களது கீழ் ஆடைக்கு மேலே நாங்கள் காற்று சீராக்கும் ஆடையை அணிந்தும், எங்கள் கைகளில் பட்டு, கம்பளி மற்றும் காற்று சீராக்கும், கையுறைகளையும் (gloves) அணிந்துக் கொண்டோம்.

காலை 6.30 மணியளவில் நாங்கள் எங்கள் கூடராத்தை விட்டு பனிக்குள் (snow) நகர்ந்து வந்து, 30 அளவுடைய ஆக்சிஜன் (oxygen) உருளையை (gear) முதுகில் சுமந்து, முகமூடியை அணிந்து, ஆக்சிஜன் உருளையில் குழாயைத் திறந்து எங்களது நுரையீரலுக்குள் ஆக்சிஜன் வாழ்வை அனுப்பினோம். ஒரு சில சிறந்த ஆழமான சுவாசத்திற்குப் பிறகு நாங்கள் புறப்பட தயாரானோம். எனது உறைந்து போன பாதங்களைப் பற்றி நான் சிறிது கவலைப்பட்டாலும், நான் டென்சிங்கை நகரச் சொன்னேன்.

டென்சிங் நீண்ட மலைமுகட்டை நோக்கி (traverse) செல்லக் கூடிய குறுக்கு பாதையில் நடந்தார். நாங்கள் 28000 அடி பனிக்குவியலை உண்டாக்கிய மலைமுகட்டின் உச்சியை அடைந்தோம். அதன் பிறகு அந்த முகடானது கத்தி போல் கூர்மையான பாதையாக காணப்பட்டது. என் காலகள் இப்போது வெப்பமானதால், நான் டென்சிங்கை முந்தினேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit 11

கடினமானதாகவும், ஆபத்தாகவும் இருக்கக்கூடிய மலை முகட்டிற்கு செல்லக்கூடிய பாதையானது மென்பனியால் உருவாகயிருந்தது. அது சில நேரங்களில் என் நிலையிலேயே இருக்க செய்தாலும், அடிக்கடி மேலே செல்ல வழி விட்டது. பல நூறு அடிகளுக்கு அப்புறம் நாங்கள் சிறிய காலியான இடத்திற்கு வந்தோம். அங்கே எவான் மற்றும் போர்டில்லான் ஆகியோரின் முந்தைய முயற்சியில் விட்டுச் சென்ற இரண்டு ஆக்சிஜன் குடுவைகளை கண்டோம்.

மதிப்பு அளவீட்டிலிருந்த பனியை நான் விலக்கி, நாங்கள் அதனை சிக்கனமாக உபயோகித்தால் திரும்ப தெற்கு கணவாய் வரை செல்லத் தேவையான பல நூறு லிட்டர் ஆக்சிஜனை அவை இன்னும் கொண்டுள்ளன என்பதை கண்டறிந்து நிம்மதியானேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

நான் தெற்கு உச்சியின் கடைசி 400 அடிக்கு முன்னால் உள்ள மலைமுகட்டிற்கு (ridge) செல்லக்கூடிய பாதையில் தொடர்ந்து பயணமானோம்.

முன்னேறி செல்வதில் நாங்கள் அடிக்கடி (frequent) மாற்றங்களை கொண்டு வந்தோம். நான் எனது அடியை ஆழமான பாதையின் மீதிருந்த ஆழமான பனியில் வைத்த போது, ஒரு பகுதி விலகி சென்றதனால், நான் மூன்று நான்கு அடிகள் பின்னோக்கி வழுக்கினேன். நாங்கள் முன்னேறி செல்வது குறித்து டென்சிங்கிடம் நான் அறிவுரைகளை (advisability) கேட்ட போது, அவர் பனியைக் குறித்து மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டாலும் அவருடைய வழக்கமான கூற்றான “நீங்கள் விரும்பிய படியே” என்று உரையை முடித்தார்.

நான் முன்னேறிச் செல்வதற்கு முடிவெடுத்தேன் (decided). கடைசியாக நாங்கள் மேலே இருந்த உறுதியான பனியை அடைந்த போது நாங்கள் கடைசியா இருந்த செங்குத்தான சரிவினில் பனியை உடைக்கும் கம்பி கொண்டு பனியை வெட்டி படிகளை உருவாக்கினோம். அப்பொழுது நேரம் காலை 9 மணி.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit 12

தெற்கு சிகரத்திற்கு (south summit) கீழே நாங்கள் அமர்வதற்கு ஒரு இருக்கையை வெட்டினோம், பின்பு எங்களது பாதி நிரப்பப்பட்ட முதல் ஆக்சிஜன் குடுவை தீர்ந்திருந்த போது எங்களிடம் ஒரே ஒரு ஆக்சிஜன் நிரம்பிய குடுவை மட்டுமே மீதம் இருந்தது. இப்போது எங்களது உபகரணங்கள் சுமப்பதற்கு இலகுவாகவும், சுமார் 20 க்கு சற்று அதிகமாகவும் தான் எடை கொண்டிருந்தன.

என்னுடைய பனிக் கோடாரி (ice-axe) அந்த முகட்டின் முதல் செங்குத்தான சாய்வினை வெட்டிய போது, என்னுடைய உயர்ந்த நம்பிக்கைகளை (high hopes) நான் உணர்ந்தேன். பனியாகவும் படிகமாகவும் (crystalline), உறுதியானதாகவும் இருந்தது. பனிக்கோடாரியின் இரண்டு அல்லது மூன்று அடிகள் எங்களது பெரிய படிகட்டுகளை (large steps) உண்டு பண்ணியது. பனிக்கோடாரியின் ஒரு உறுதியான அடியானது கைப்பிடியை பாதி வரை மூழ்கச் செய்து, உறுதியான வசதியான மலை ஏற்றத்துக்கு வழி வகுக்கும்.

நாங்கள் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நகர்ந்தோம். என்னால் 40 படிகட்டுகளை வெட்ட முடியும், நான் அவ்வாறு வெட்டும் போது என் கயிரை டென்சிங் பிடித்துக் கொண்டு என் எடையைத் தாங்குவார் (belaying). அதன்பின் நான் என் கைப்பிடியை மூழ்கச் செய்து, அதனைச் சுற்றி கயிரால் கண்ணிகள் (loops) போட்டேன். டென்சிங்கோ , உடையும் படிக்கட்டுகளுக்கு எதிராக என்னை நோக்கி நகர்ந்து வந்தார். பின்னர் மறுபடியும் அவர் என் கயிரை பிடித்துக் கொண்டு என் எடையத்ை தாங்கும் போது, நான் வெட்டினேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

அதிக இடங்களில் தொங்குகின்ற பனிப்பாறைகள் மிகப் பெரியதாக இருந்ததால், அவற்றிலிருந்து தப்பிக்க நான் பனியின் மேற்பரப்பில் இருந்து பாறை வரையிலும் படிக்கட்டுகளை வெட்டினேன். இந்தப் பெரிய பாறையிலிருந்து நேராக 8000 அடிக்கு கீழாக மேற்கு பள்ளத்தாக்கில் உள்ள முகாம் 4ன் சிறிய கூடாரங்களைப் (tiny tents) பார்த்து சிலிர்ப்பேற்றியது. பாறைகளில் மேலே தவழ்ந்ததாலும் (crawl) பனியில் கைப்பிடிகளை வெட்டியதாலும் எங்களால் இந்த கடினமான பகுதிகளை வேகமாக கடந்து செல்ல முடிந்தது.

அதன் கிழக்குப் பகுதியில் (east side) இன்னொரு பெரிய பனிப்பாதை இருந்தது. அது 40-அடி உயர படியில் உருண்டோடி வந்தது, அங்கே பனிப்பாறைக்கும் பாறைக்கும் இடையே ஒரு விரிசல் (crack) இருந்தது. டென்சிங்கை எவ்வளவு சிறப்பாக என் எடையைத் தாங்க முடியுமோ, அவ்வாறு செய்து விட்டு, நான் அந்த விரிசலுக்குள் ஏறினேன். பின்னர், பின்னோக்கி உதைத்தவாறு என் மலையேறும் கருவியில் இருந்த ஆணிகளை உறைந்த பனியில் முழுவதுமாக மூழ்கச் செய்து நான் தரையில் இருந்து நெம்பியவாறு மேலே எழுந்தேன்.

அங்கிருந்து அனைத்து சிறிய பாறைப்பிடிகளின் துணையோடு, என் மூட்டு, தோள்பட்டை, கைகளால் முடிந்த அளவு பலத்தை திரட்டிக்கொண்டு, பனிப்பாறையுடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று ஜெபித்துக் (praying) கொண்டே, நான் விரிசலில் மலையேறும் கருவியின் மூலம் பின்புறமாக நகர்ந்தேன்.

எனது முன்னேற்றம் (progress) மெதுவாக இருந்தாலும், நிலையானதாக இருந்தது. டென்சிங் கயிரை விட்டுவிட்டதால், நான் மேல் நோக்கி மெதுமெதுவாக பாறையின் உச்சியைத் தொடும் வரை நகர்ந்து, விரிசலிலிருந்து வெளிவந்து நான் தெற்கு சிகரத்திற்கு படிகளை வெட்டிக் கொண்டிருந்த போது, நான் சுதந்திரமாகவும், நன்றாக இருப்பது போன்றும் உணர்ந்தேன்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

ஒரு சில நிமிடங்களுக்கு நான் மூச்சுவிடுவதற்காக படுத்திருந்தேன். முதன் முறையாக நாங்கள் மலைச் சிகரத்தை அடைவதை எதுவும் தடுக்க முடியாது என்று மிக உறுதியாக உணர்ந்தோம், நான் அந்த தொங்கும் பாறையில் நிலையாக நின்று கொண்டு டென்சிங்கை நோக்கி மேலே வருமாறு கையசைத்தேன் (signed).

நான் அந்த கயிறில் நிம்மதி பெருமூச்சு விட்டபோது, டென்சிங்கோ அந்த விரிசலை நோக்கி மேலே நெளிந்து (wriggled) வந்து கடைசியாக உச்சத்தை அடைந்த போது, மிகப்பெரிய போராட்டத்திற்கு பின், கடலில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்ட பெரிய இராட்சச மீன் போல் நிலைகுலைந்தார்.

மலை முகடுகள் முன்பு போலவே தொடர்ந்தன, பெரிய பனிப்பாறையின் (giant cornices) வலது புறமும், கூர்மையான மலைச் சரிவுகள் இடது புறமும் இருந்தன. அந்த மலைமுகடானது வலது புறமாக வளைந்து (curved) சென்றதால் எங்களுக்கு மலை உச்சி எங்கு இருக்கிறது என்று தெரியாமல் போனது. நான் (கூனல்) திமிலின் பின்புறத்தை வெட்டும் போது அடுத்த திமில் கண்ணில் தென்படும். நேரம் செலவழிந்து கொண்டே இருந்தது, மலைமுகடுகளும் முடிவது போலத் தோன்றவில்லை.

எங்களது உண்மையான பேரார்வம் சிறிது விலகியது. இது ஒரு கடுமையான போராட்டமாகவே மாறியது. எங்களுக்கு முன்னே இருந்த பனிப்பாறை (snowy summit) எழுவதற்குப் பதிலாக, கிழே விழ ஆரம்பித்ததை நான் அதன்பின் உணர்ந்தேன். ஒரு குறுகலான பனிமுகடு (ice-axe) ஒரு மலை உச்சியை நோக்கி ஓடுவதைப் பார்க்க நான் மேல் நோக்கி பார்த்தேன்.

இதிலிருந்து விடுபட வேண்டும் (relief) என்பதே என் முதல் உணர்வாக இருந்தது. மேலும் இனிமேல் வெட்டுவதற்கு படிகட்டுகளோ, கடப்பதற்கு மலை முகடுகளோ, வென்றுவிடலாம் என்ற நம்பிக்கைக்கு ஏமாற்றம் அளிக்கும் மலை அங்கே காணப்படவில்லை. நான் டென்சிங்கை நோக்கினேன்.

மறைக்கக்கூடிய தலைகவசத்தையும் (balaclavahelmet), பனிக் கண்ணாடியையும், ஆக்சிஜன் வாயு முகமூடியையும் அணிந்திருந்தால் அனைத்தும் ஈட்டி போன்ற கூர்மையான வடிவுடைய பனிக்கட்டியும் சேர்த்து அவருடைய முகத்தை மறைத்தாலும், அவரைச் சுற்றிலும் அவர் பார்த்து விட்டு சந்தோஷத்தினால் சிரித்ததை எதையும் மறைக்கவில்லை.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

நாங்கள் இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். டென்சிங் அவரது கையை என் தோள்மேல் போட்டுக் கொண்டார், கிட்டத்தட்ட மூச்சு முட்டும் வரை நாங்கள் இருவரும் முதுகில் தட்டிக் கொண்டோம். அப்போது நேரம் காலை 11,30 மணியாய் இருந்தது. இந்த மலை முகடு 2 1/2 மணி நேரத்தை எடுத்துக் கொண்டது, அது எங்களுக்கு ஒரு ஆயுட்காலமாகவே தோன்றியது.

எங்களுக்கு கிழக்கில் இதுவரை கண்டறியப்படாத ஏற்படாத பெரிய இராட்சச (giant) அண்டையரான மக்காலு (makalu) இருந்தது. மேகங்களுக்கிடையில் மிகத் தூரத்தில் கஞ்சன்சங்காவின் (Kanchenjunga) மிகப்பெரும் பகுதி அடிவானத்தில் நிழல் போல அச்சுறுத்தும் விதமாக காணப்பட்டது. மேற்கில் இதுவரை கண்டறியப்படாத நேபாளத்தின் மலைப்பகுதிகள் தூரத்திற்கு நீண்டு கிடந்ததை எங்களால் பார்க்க முடிந்தது.

வடக்கு மலைமுகட்டுக்கு கிழே உள்ள வடக்கு கணவாயையும் (North Col), 1920 மற்றும் 1930 களில் மலை ஏறுபவர்களால் போராடி பிரபலமாக்கப்பட்ட பழைய பாதையையும் (old route) காட்டும் மிக முக்கியமான புகைப்படமாக (photograph) நான் கருதும் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது. பத்து மணித்துளிகளுக்கும் பின், நான் மெதுவாக நகர்பவனாகவும் என் விரல்கள் வளைவுத் தன்மையற்றும் மாறின அதனால் நான் உடனே என் ஆக்சிஜன் உபகரணத்தை மாற்றினேன்.

இந்த வேளையில் (meanwhile), டென்சிங் பனியின் நடுவே ஒரு சிறிய துளையிட்டு (hole), அதனுள் – பலதரப்பட்ட சிறிய உணவுப் பொருட்களான (articles), சாக்லேட், பிஸ்கட், குச்சிமிட்டாய் (lollies) போன்றவற்றை வைத்தார். உண்மையில் இவை சிறிய படைப்புகள் தான் ஆனாலும் இந்த உயரமான மலைச்சிகரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளதாக நம்பும் அனைத்து பக்திமயமான புத்தமதத்தவர்களின் கடவுள்களுக்கு (devout Buddhists) ஒரு சிறு அடையாளப் பரிசாக இருக்கும்.

2 நாட்கள் முன்னதாக நாங்கள் தெற்கு கணவாயில் ஒன்றாக இருந்த போது, கர்னல் ஹன்ட் (Colonel Hunt) என்னிடம் ஒரு சிறிய சிலுவையை (crucifix) கொடுத்து, அதனை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். நானும் பனியில் சிறிய துளையிட்டு, டென்சிங்கின் பரிசுப்பொருட்களுக்கு அருகில் அந்த சிலுவையை வைத்தேன்.

15 நிமிடங்களுக்கு பிறகு, நான் உச்சியிலிருந்து எங்களது படிக்கட்டுகளை நோக்கி கீழே இறங்கினேன். ஆக்ஸிஜன் ‘ குறைந்து கொண்டிருப்பதன் அவசரத்தால் தூண்டப்பட்ட நாங்கள் நேரத்தை வீணாக்காமல் எங்கள் பாதையில் முன்னேறி சென்றோம் (cramponed). நாங்கள் மிக கவனமாக பாறையின் குறுக்கே தவழ்ந்து கடந்து, வழுக்கக்கூடிய பனிப்பகுதியில் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து, கடைசியாக எங்களின் படிக்கட்டுகளில் மலையேறினோம் மேலும் திரும்பவும் தெற்கு வந்தோம்.

அப்போது நாங்கள் மிகவும் களைப்பாக இருந்தோம், ஆனாலும், நாங்கள் முகட்டில் சேமித்து வைத்திருந்த உருளைகளை (cylinders) நோக்கி கீழே நகர்ந்தோம். நாங்கள் எங்கள் முகாமை விட்டு மிக குறுகிய தூரத்தில் இருந்தாலும், எங்களது சொந்த குடுவைகளில் மிகச் சிறிய அளவே ஆக்சிஜன் மீதமிருந்ததாலும், நாங்கள் கூடுதல் உருளைகளை சுமந்து எதிர்பார்க்க முடியாத தரைத்தளத்தை (crazy platform) உடைய எங்களது கூடாரத்தை மதியம் 2 மணி அளவில் அடைந்தோம்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

எங்களுக்கு இதுவரை எல்லாவித தேவைகளுக்கும் நன்றாக உதவிய முகாமை கடைசியாக ஒருமுறை பார்த்த படி, நாங்கள் கீழ்நோக்கி திரும்பி, எங்கள் கால்களை இழுத்த படியே, மலை முகட்டிலிருந்து தெற்கு கணவாய்க்கு பாதுகாப்பாக கீழறங்கும் வேலையில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.

கனவைப் (dream) போலவே நேரம் கடந்தது முகாமிற்கு 200 அடிக்கு மேலே எங்களை நோக்கி வந்த இருவர் எங்களை சந்தித்தன. அவர்கள் சூடான சூப்பையும், நெருக்கடி கால ஆக்சிஜனையும் சுமந்து கொண்டிருந்த ஜரர்ஜ் லோ மற்றும் வில்பிரட் நாய்ஸ் ஆவார்கள். உயரத்திற்கு மிக அருகில் வந்த போது எனது ஆக்ஸிஜன் தீர்ந்தது. எங்களது வேலையை முடிப்பதற்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை நாங்கள் வைத்திருந்தோம், ஆனால் கொஞ்சம் கூட தேவைக்கு அதிகமாக இல்லை.

நாங்கள் எங்கள் கூடாரத்திற்குள் தவழ்ந்து வந்து, மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டு (delight), எங்கள் தூங்கும் பைகளின் (sleeping bags) மேல் நிலை குலைந்து விழுந்த போது எங்களின் கூடாரங்கள் முடிவில்லாத தெற்கு கணவாயில் காற்றினால் சிறகடித்து (flapped) விழுந்து எங்களை பொட்டலம் போல் பொதிந்தது.

எங்களது பிரயாணத்தை வழிநடத்திய ஜான் ஹண்ட் என்பார் இவ்வாறு கூறுகிறார், “இது ஒரு மறக்க முடியாத நாளாக இருந்தது”. அவர்கள் உச்சியை ஏறி அடைந்தார்கள். அங்கே சந்தோஷ கூச்சலும், கைகலக்கல்களும், அரவணைப்புகள் இந்த இரண்டு கதாநாயகர்களுக்காக காணப்பட்டன. அவர்களது சந்தோஷமும் பெருமிதமும் டென்சிங் மற்றும் ஹிலாரியால் மிகச் கச்சிதமாக முடிக்கப்பட்ட இந்த சாலையை அவர்கள் எவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள், என்பதை காண்பித்தது. சாகசமானது (adventure) நிறைவுக்கு (concluded) வந்தது.

ஆபத்து மற்றும் கடினமான சூழ்நிலைகளில் உருவாக்கப்பட்ட குழுப்பணியும் (teamwork), தோழமை உணர்வும், ஒன்றையொன்று சந்தித்து, ஒன்றாக வென்றது தான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய கதையாகும், அவர்கள் இந்த பெரிய மலையின் உச்சியில் ஏறிய பிறகும், மற்றவர்களுக்கு அவர்களுடைய சொந்த “எவரெஸ்ட்களை” கண்டறியும் வண்ணம்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

சாகசத்திற்கான நிறைய சந்தர்ப்பங்கள் இன்னனமும் உள்ளன. அவற்றுள் சில, கைக்கு மிக அருகாமையிலும், மற்றவை வேறு நிலங்களில் வெகு தூரத்திலும் உள்ளன. அனைத்து சாகசங்களும் உற்சாகமளிப்பதில்லை. அதுபோல மலையில், மட்டுமே சாகசங்கள் புரியப்படுவதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், கடவுளின் உன்னத சக்தியால் மேலே ஏறுவதற்கு எவெரெஸ்ட்கள் உள்ளன.


The Summit Poem Summary in English

Here we have uploaded the The Summit Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


This passage is adapted from John Hunt's book, The Ascent of Everest. How Mount Everest was reached is told in the own words of Sir Edmund Hillary.

There were eight people in the camp at the South Pass on May 28, including Edmund Hillary, Tenzing, George Lowe, Albert Gregory, and two Sherpas, Pemba, respectively. (Ang Nyima). But Pemba was too ill to climb. Others climbed 27900 feet that day with a heavy load. There Hillary and Tenzing saw the three men who had come with them from the small tent sliding down the ridges and returning to the southern pass.

When the sun went down, Hillary and Tenzing went into their tents, put on warm clothing, and snuggled into sleeping bags. The next day, May 29, at 4 a.m., they were ready to board.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

We lit our cooker, drank a lot of lemon juice and sugar, and then took the sardines and biscuits called sardines from our last tin can. I pulled my oxygen package inside the tent, cleaned the ice on it and tested it.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit 10

The previous day was wet. Today I took off my frozen shoes. So I heated and softened them with the smoke coming from the oven. Above our underwear we wore air-conditioning clothing, and in our hands silk, wool and air-conditioning gloves.

At 6.30am we moved out of our tent and into the snow, carrying a 30-gauge oxygen cylinder on our backs, wearing a mask, opening the tube in the oxygen cylinder and sending oxygen life into our lungs. After a few better deep breaths we were ready to leave. Although I was a little worried about my frozen feet, I told Tenzing to move on.

Tenzing walked at a crossroads that led to a long traverse. We reached the summit of the ridge where the 28000 feet glacier formed. After that the ridge was seen as a sharp path like a knife. As my seasons got hotter now, I overtook Tenzing.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit 11

The path to the ridge, which can be difficult and dangerous, was paved with softness. Although it sometimes makes me stay in my position, there is often a way to go above and beyond. Several hundred feet later we came to a small empty space. There we saw two oxygen jars left over from Evan and Portillon's previous attempt.

I removed the snow from the value scale and was relieved to find that they still contain several hundred liters of oxygen needed to get back to the South Pass if we use it sparingly.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit

We continued our journey along the path that led to the ridge (ridge) just before the last 400 feet of the southern peak.

We made frequent changes in moving forward. When I put my foot in the deep snow on the deep path, I slid back three or four feet as one part moved away. When I asked Tenzing for advice on how to move forward, he ended his speech with his usual saying, 'As you wish,' although he was unhappy about the snow.

I decided to move on. When we finally reached the solid snow above we made the steps by cutting the ice with the ice breaking wire on the last steep slope. Then the time was 9am.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 4 The Summit 12

Below the south summit we cut a seat to sit on, and then when our first half-filled oxygen jar was exhausted we had only one oxygen filled jar left. Now our equipment was lighter to carry and weighed just over 20 lbs.

When my ice-ax cut the first steep slope of the ridge, I realized my high hopes. It was icy and crystalline, and solid. Two or three feet from the ice ax made our large steps. A firm blow from the iceberg will sink the handle up to halfway, leading to a steady comfortable mountain climb.

We modularized one at a time


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Summit Poem Summary in Tamil


How to get The Summit Poem in Tamil Summary??

Students can get the The Summit Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Summit Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List