Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

After Twenty Years Chapter Summary in Tamil & English Free Online

After Twenty Years Poem Summary in Tamil PDF
After Twenty Years Poem Summary in Tamil

After Twenty Years Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of After Twenty Years Poem in Tamil. Also, in this article, we will also provide After Twenty Years Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the After Twenty Years Poem Summary in Tamil please let us know in the comments.


After Twenty Years Poem Summary in Tamil


Poem

After Twenty Years Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find After Twenty Years Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on After Twenty Years Poem Summary in Tamil Post.

After Twenty Years Poem Summary in Tamil

Students can check below the After Twenty Years Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


காவல் அதிகாரி ஒருவர் சிறந்த உடல் தோற்றத்துடன் அந்த தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது நடை செயற்கையான ஒன்றல்ல. ஏனெனில் அங்கு அவரைத் தவிர வேறு யாருமில்லை. அப்பொழுது நேரம் சுமார் 10 மணி இருக்கும். மழைக் காற்றும் மேகமும் தெருவை வெறிச்சோடச் செய்திருந்தது.

அந்த காவல் அதிகாரி வழியில் இருந்த வீட்டுக் கதவுகளை சோதனை செய்து கொண்டே நடந்த விதம், கையில் வைத்திருந்த குச்சியை அவர் சுழற்றிய விதம், அவரது கூரிய பார்வை அனைத்தும் அவர் ஒரு ரோந்து அதிகாரி என்பதை காண்பித்தது. அந்த தெருவில் எப்பொழுதும் ஆட்கள் இருப்பார்கள் பெட்டிக் கடைகளும், உணவு விடுதிகளும் தவிர மற்ற கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

ஒரு கட்டிடத்தின் அருகே அவர் மெதுவாக நடந்து வந்தார். ஒரு இருண்ட இரும்புக் கடை முன்பு ஒரு மனிதன் வாயில் பற்றவைக்காத ஒரு புது சிகரெட்டுடன் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். அந்த காவலர் தன்னிடம் வருவதைக் கண்டு அம்மனிதன் வேகமாக பேசத் தொடங்கினான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

“ஐயா, நான் ஒரு நண்பருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இச்சந்திப்பு இருபது ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது உங்களுக்கு நான் கூறுவது வேடிக்கையாக இருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடை இருக்கும் இடத்தில் பெரிய Joe Brandy’s உணவு விடுதி இருந்தது.”

” ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அது இடிக்கப்பட்டது” என்றார் அந்த காவலர்

அம்மனிதன் தன் வாயிலிருந்து சிகரெட்டை பற்ற வைத்த போது அவனது முகத்தில் இரு கூரிய விழிகளும், வலது இமையின் மேல் ஒரு வெண் தழும்பும் தெளிவாகத் தெரிந்தது. அவனது கழுத்தை சுற்றி இருந்த துணியில் ஒரு அழகிய பெரிய வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 1

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே இரவில் நான் எனது நெருங்கிய நண்பன் ஜிம்மியுடன் அந்த விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தேன். நாங்கள் இந்த நியூயார்க்கில் தான் சகோதரர்கள் போன்று வளர்ந்தோம். அப்போது எனது வயது 18 அவனது வயது 20. அந்த மறுநாள் நான் மேற்கு நோக்கி பணம் சம்பாதிக்க செல்லவிருந்தேன். ஆனால் அவனை யாராலும் நியூயார்க்கை விட்டு வெளியே அனுப்பவே முடியாது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

ஏனெனில் அவனுக்கு அதுமட்டுமே உலகம். எனவே அன்று நாங்கள் சரியாக 20 வருடங்கள் கழித்து எந்த சூழலில் இருந்தாலும், அதே இடத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டோம் அந்த கால அவகாசத்திற்குள் விதி எங்களை அதன் திட்டப்படி இழுத்துச் சென்றிக்கும் என்று நம்பினோம்.

“மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது ஒருவேளை எனக்குத்தான் இருபது ஆண்டுகள் பெரிதாகத் தெரிகிறதோ!” என்றார் அக்காவலர் “இடையில் நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கவே இல்லையா?”

“சந்தித்தோம். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் தொடர்பற்றுப் போனோம். மேற்கத்திய நாடுகள் மிகப் பரந்தது. அதனால் அங்கு சுற்றி திரிந்தே நாட்கள் கழிந்துவிட்டது. எனக்கு தெரியும் ஜிம்மி உயிரோடு இருந்தால் கண்டிப்பாக என்னை சந்திக்க வருவானென்று.

ஏனெனில் அவன் தான் இந்த உலகத்திலேயே நேர்மையானவன், சிறந்த மனத்திடம் உடையவன். அவன் ஒருபோதும் என்னை மறக்கமாட்டான். ஆயிரம் மையில்கல் கடந்து இன்று இந்த இடத்தில் நிற்க நான் வந்திருக்கிறேன். நான் என் நண்பனைச் சந்தித்தால் என் துன்பம் தகுமானது தான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

அம்மனிதன் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு வைரம் பதிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை எடுத்தான்.

“பத்து மணியாக இன்னும் மூன்று நிமிடங்கள் உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் பிரிந்த போது சரியாக பத்துமணி”

“நான் சவால் விடுகிறேன். ஜிம்மிநான் சம்பாதித்ததில் பாதியாவது அவனும் சம்பாதித்து இருப்பான். அவன் மிகவும் நல்லவன் என்றாலும் இயற்கையில் மிகவும் மெதுவாகசெயல்படுவான். நான் இந்த நிலைக்கு வர பல திறமைசாலிகளுடன் போராட வேண்டியிருந்தது. அவனே நியுயார்கிலியே தன்னை முடக்கிக் கொண்டவன் மேற்கிலிருந்து வந்த நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.”

அந்த காவலர் தனது கையிலிருந்த குச்சியை சுழட்டியவாறு நகர ஆரம்பித்தார்.

“நான் கிளம்புகிறேன் உங்களது நண்பர் வருவார் என நம்புகிறேன். நேரத்திற்கு வருமாறு அவரை அழைப்பீர்களா?”

“இல்லை, இன்னுமொரு அரைமணிநேரம் நான் காத்திருப்பேன். அவன் இந்த உலகத்தில் உயிருடன் இருந்தால், கண்டிப்பாக வருவான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 2

“சரி நான் வருகிறேன்”, என்று கூறிவிட்டு அந்த காவலர் தனது வழக்கமான தோரணையுடன் ரோந்து பணியைத் தொடர்ந்தார்.

அப்பொழுது சாரல் கலந்த தென்றல் காற்று நிலையாக வீசிக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒருசில பாதசாரிகளும் தங்களது சட்டை காலரை உயர்த்தி கையை பாக்கெட்டில் வைத்தவாறு விரைந்து கொண்டிருந்தனர். ஆனால் இரும்புக்கடை முன் அம்மனிதர் வாயில் ஒரு சிகரெட்டுடன் தன் பாலிய நண்பனுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு இருபது நிமிடங்களுக்கு பின் ஒரு உயர்ந்த மனிதன் நீள கோட்டுடன் எதிர் திசையிலிருந்து, காத்துக் கொண்டிருந்த அம்மனிதரை நோக்கி வந்தார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

அந்த புது மனிதர் இவரிடம் வந்து “நீர் தான் பாப் என்பவரா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். நீ ஜிம்மி தானே என்று மகிழ்ச்சியில் கத்தினார்.

அந்த புது மனிதர் பாபின் இரு கைகளையும் பிடித்து “என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார். இது நிச்சயமாக பாப் தான். “நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். இருபது ஆண்டுகள் மிக நீளமானது தான். அந்த ஹோட்டல் இப்போது இருந்திருந்தால் அங்கே மீண்டும் சாப்பிட்டிருக்கலாம். மேற்கில் நீ எப்படி இருக்கிறாய்?”

”மிகவும் கடினமாக இருந்தது. அது நான் எதிர் பார்த்தது தான். நீ மிகவும் மாறிவிட்டாய், ஜிம்மி “நீ இவ்வளவு உயரமாய் இருப்பாய் என நான் நினைக்கவே இல்லை”.

“ஆமாம் எனது இருபதாவது வயதில் நான் சிறிது வளர்ந்தேன்”. “நியூயார்க்கில் நீ எப்படி இருக்கிறாய் ஜிம்மி?”

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

”ஏதோ இருக்கிறேன் நகர அலுவலங்கள் ஒன்றில் ஒரு நல்ல வேலையில் உள்ளேன் வா நாம் நடந்து கொண்டே நமது கடந்த காலத்தைப் பற்றி பேசுவோம்”. மேற்கிலிருந்து வந்த பாப் தனது வெற்றிகளை மிகப் பெருமையாகப் பேசினான் ஜிம்மி மிகவும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த தெருமுனையிலிருந்த மருந்துக்கடை வெளிச்சத்தில் அந்த நபரின் முகத்தை பார்த்த பாப் திடுக்கிட்டு நின்றான். “நீ ஜிம்மி வெல்ஸ் அல்ல” இருபது வருடம் நீளமானது தான். ஆனால் ஒருவரின் மூக்கை சப்பையாக மாற்ற முடியாது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 3

“ஆனால் சில நேரங்களில் காலம் நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றிவிடுகிறது” என்றார் அந்த உயர்ந்த மனிதர். “நீ பத்து நிமிடம் எங்களது பிடியில் இருந்தாய் பாப் நீ எங்களிடமிருந்து தப்பிவிடுவாய் என்றெண்ணி சிக்காக்கோ காவல்துறை தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கிறது. நீயா இவ்வளவு அமைதியாய் செல்கிறாய்? மிகவும் சிலிர்க்கிறது நாம் காவல் நிலையத்துக்குச் செல்லும் முன் இந்த கடிதத்தை படிக்க வேண்டும்.

இதை ரோந்து அலுவலர் வெல்ஸ் உன்னிடம் தரச் சொன்னார்”.

பாப் அந்த சிறிய தாளை பிரித்து படிக்க ஆரம்பித்த போது நிலையாக இருந்த அவனது கைகள் வாசிக்க வாசிக்க நடுங்க ஆரம்பித்தன. ஆனால் அதில் எழுதப்பட்டிருந்தது ஒரு சிறிய வாக்கியமே.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

பாப், நாம் திட்டமிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு நான் வந்தேன். ஆனால் நீ சிகரெட் பற்றவைத்த வெளிச்சத்தில் நீ தான் சிகாகோவில் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்து கொண்டேன். இருந்தாலும் என்னால் இயலாத காரணத்தால், உன்னை கைது செய்ய இந்த காவலரை அனுப்பினேன் “.
ஜிம்மி.


After Twenty Years Poem Summary in English

Here we have uploaded the After Twenty Years Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


A police officer with good physical appearance was patrolling the street. His style is not artificial. Because there is no one there but him. Then the time will be about 10 hours. The rain wind and cloud had deserted the street.

The way the policeman was checking the doors of the house on the way, the way he turned the stick in his hand, his sharp gaze all showed that he was a patrol officer. There were always people on that street and other shops were locked except for the box stores and restaurants.

He was walking slowly near a building. In front of a dark iron shop a man was leaning over with a new cigarette that had not been lit in his mouth. The man saw the guard coming towards him and started talking fast.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

“Sir, I am waiting for a friend. This meeting was planned twenty years ago and I can tell you the fun. Twenty years ago this store was the site of the great Joe Brandy's restaurant. ”

'It was demolished five years ago,' said the guard

The man had two sharp eyes on his face and a white spot on his right eyelid as he lit a cigarette from his mouth. A beautiful large diamond was embedded in the cloth around his neck.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 1

Twenty years ago on the same night I was dining at that hotel with my close friend Jimmy. We grew up like brothers in New York. I was 18 then he was 20. The next day I was going west to make money. But no one can ever send him out of New York.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

Because that is the only world for him. So on that day we agreed to meet at the same place exactly 20 years later in any situation, hoping that fate would drag us into its plan within that time frame.

'It's so interesting that maybe twenty years seems too big for me!' 'Have you never met your friend in between?'

“We met. But in a year or two we lost contact again. Western countries are very vast. So the days of wandering around there are over. I knew Jimmy would definitely come see me if he was alive.

Because he is the most honest and best-minded person in the world. He will never forget me. I have come to stand at this place today after crossing a thousand miles. My suffering is justified if I meet my friend.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

The man took a diamond-studded watch from his pocket.

'It's three minutes to ten. It was exactly ten o'clock when we separated twenty years ago. ”

“I challenge. He would have earned half of what Jimminon earned. He is very good but very slow in nature. I had to fight with so many talented people to get to this point. He's the one who paralyzed himself in New York. I'm from the West and I need to make a difference. ”

The guard began to move as he twisted the stick in his hand.

'I'm leaving. I hope your friend will come. Will you invite him on time? ”

“No, I will wait another half hour. If he is alive in this world, he will surely come.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 2

'Okay, I'm coming,' said the guard, who continued his patrol with his usual posture.

Then the breeze was blowing steadily. A few pedestrians there were also rushing to raise their shirt collars and put their hands in their pockets. But in front of the iron shop the man was waiting for his sexual friend with a cigarette in his mouth.

Twenty minutes later a tall man with a long line came from the opposite direction, towards the waiting man.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

The new man came up to him and asked, 'Are you Bob?' Asked with suspicion. Yelled in delight that you are Jimmy himself.

The new man took Bob's by both hands and said, 'Bless me.' It's definitely pop. “I know you will return. Twenty years is too long. If that hotel had been there now I would have eaten there again. How are you in the West? ”

”Was very difficult. That's what I saw opposite. You have changed so much, Jimmy said “I think you are so tall

I do not think so ”.

'Yeah I grew up a little bit in my twenties'. 'How are you in New York, Jimmy?'

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

'I'm doing a good job in one of the city offices. Come on, let's talk about our past.' Bob from the West boasted of his successes and Jimmy was listening intently.

Bob was startled to see the person's face in the light of the pharmacy on the street. 'You'm not Jimmy Wells' is twenty years long. But one's nose can not be turned into a sap.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 3

'But sometimes time turns good people into bad people,' said the man. 'You've been in our custody for ten minutes. Are you going so quiet? Very thrilling we should read this letter before going to the police station.

Wells, the patrol officer, told you this. '

When Bob began to read that little sheet of paper his hands, which were still, began to tremble as he read. But what was written in it was a short sentence.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

Bob, I arrived at the place we were scheduled to. But in the light of you lighting a cigarette I realized you were the only wanted criminal in Chicago. However, because I could not, I sent this guard to arrest you ”.
Jimmy.


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About After Twenty Years Poem Summary in Tamil


How to get After Twenty Years Poem in Tamil Summary??

Students can get the After Twenty Years Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of After Twenty Years Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List